மஹாசிவராத்திரி

மார்ச் 4, 2019 – 6pm – 6am

ஈஷா யோக மையத்தில்

“மஹாசிவராத்திரி அன்று, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில், நீங்கள் சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருக்கிறீர்கள். உங்களை நீங்கள் திறந்தநிலையில் வைத்திருந்தால், இந்த இரவு நீங்கள் விழுத்தெழும் இரவாக அமையலாம்”

நேரில் வந்து கலந்துகொள்ள

இரவெல்லாம் நீடிக்கும் கொண்டாட்டத்தின் விவரங்கள்:

Midnight Meditation

நள்ளிரவு தியானம்

நள்ளிரவு நேரத்தில் இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் சத்குரு சக்திவாய்ந்த தியானத்திற்கு தீட்சை அளிப்பார். இந்த இரவின் சிறப்பம்சம் இது.

Musical Performances

கலை நிகழ்ச்சிகள்:

மஹாசிவராத்திரி இரவில் மக்கள் கண்விழித்து பயன்பெறுவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, ஈஷாவில் ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரியை பெரும் விழாவாகக் கொண்டாடுகிறோம். அன்றிரவு முழுவதும் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை பிரசித்திபெற்ற பல கலைஞர்கள் வழங்குகிறார்கள்.

Rudraksh Prasadam

ருத்ராட்ச பிரசாதம்

புனிதமான மஹாசிவராத்திரி இரவில், ஈஷாயோக மையத்திற்கு வருகை தரும்பக்தர்களுக்கு ஆதியோகியின் அருளாய், ஒருருத்ராட்சம் பிரசாதமாக அளிக்கப்படும். க்ஷ்` முதல் யோகியும், முதல் குருவுமான, ஆதியோகியின் திருவருளை நாம்முழுமையாகப் பெற இந்த ருத்ராட்ச மணிதுணைநிற்கும். இந்த ருத்ராட்சத்தை ஒருவர்தனது இல்லப் பூஜை அறையில்வைத்திருக்கலாம், விசேஷ தினங்களில்அணிந்து கொள்ளலாம்.

Sarpa Sutra

சர்ப்ப சூத்திரம்

மஹாசிவராத்திரி நாளன்று ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரிக் கொண்டாட்டத்தில் நேரடியாக பங்குபெறும் அனைவருக்கும் ஒரு சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்படும். இதை இடதுகை மோதிர விரலில் அணியவேண்டும். இது உடல்நிலையில் உறுதியையும் நல்வாழ்வையும் ஒருவருக்கு வழங்குகிறது

Bhairavi Maha Yatra

பைரவி மஹா யாத்திரை

மஹாசிவராத்திரி அன்று லிங்கபைரவி உற்சவமூர்த்தி, லிங்கபைரவியின் உறைவிடத்தில் இருந்து ஆதியோகியின் உறைவிடத்திற்கு பிரம்மாண்ட ஊர்வலமாக வரவிருக்கிறார்கள். சக்திசூழல் நிரம்பிய இந்த கோலாகலமான மஹா யாத்திரையில் பங்கெடுக்கக்கூடிய ஒப்பற்ற வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. தேவி பைரவின் பேரொளியில், பரவசத்தில், அருளில் நனைய வாருங்கள்.

Adiyogi Pradakshina

ஆதியோகி பிரதட்சணம்

ஒரு சக்தி வடிவத்தின் அருளை சிறப்பாய்பெற்றுக்கொள்ள அதனை பிரதட்சணமாய்வலம் வருவது தொன்றுதொட்டு நிலவிவரும்ஒரு வழக்கம். 11 டிகிரி அட்சரேகையில்அமைந்திருக்கும் கோவை ஈஷா யோகமையத்தில் இதனைச் செய்வது மேலும்வீரியமான பலன்களை ஒருவருக்கு அளிக்கும். ஆதியோகியின் அருளைப் பரிபூரணமாய்பெற சத்குரு அவர்கள் ஆதியோகிபிரதட்சணத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இது, தனிமனிதருடைய முக்திக்கானமுயற்சியை மேலும் துரிதப்படுத்தும்.

ஈஷா யோக மையத்தின் மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் நீங்கள் இலவசமாகப் பங்கேற்கலாம். இந்த இரவின் சாத்தியத்தை உலகில் இருக்கும் பல லட்சம் மக்களுக்கு கொண்டுசேர்க்க நீங்கள் வழங்கும் நன்கொடை உதவியாக இருக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மேலும் விவரங்களுக்கு:

தொலைபேசி: 83000 83111

மின்னஞ்சல்: