மஹாசிவராத்திரி 2019 நேரலையை காணுங்கள்!

மஹா அன்னதானம்

detail-seperator-icon

நள்ளிரவு தியானம்

சத்குரு வழங்கும் இந்த சக்திவாய்ந்த செயல்முறை மூலம் மஹாசிவராத்திரி இரவின் மகத்தான ஆன்மீக சாத்தியங்கள் அனைவருக்கும் வழங்கப்படுகின்றது. எங்கிருந்தாலும் இந்த நள்ளிரவு தியானத்தில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பது சத்குரு அவர்களின் விருப்பம்!
சுமார் 50 நிமிடங்கள் வரை நிகழும் இந்த செயல்முறையில், சத்குருவின் குறிப்புகளை கவனத்தில்கொண்டு தியானத்தில் ஈடுபடுங்கள்.
உங்கள் நாட்டின் நேரப்படி இரவு 11:30 மணிக்கு கீழே உள்ள வீடியோவை காணுங்கள்!

detail-seperator-icon

வீட்டிலிருந்தபடியே மஹாசிவராத்திரியை கொண்டாட:

மஹாசிவராத்திரி அன்று ஈஷா யோக மையத்திற்கு வரமுடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறே அன்றிரவு செய்யக்கூடியவை:

  • இரவு முழுவதும் படுக்கை நிலையில் இல்லாமல் தூங்காமல் கண்விழித்து, முதுகை நேர்நிலையில் வைத்து, விழிப்புணர்வோடு இருப்பது நல்லது.
  • நீங்கள் அமர்ந்திருக்கும் அறையில் விளக்கு (நல்லெண்ணெய்/ விளக்கெண்ணை/ நெய் விளக்கு) அல்லது லிங்கஜோதி ஏற்றி, அவ்விடத்தில் தியானலிங்கம் அல்லது சத்குருவின் படத்தை முன்வைத்து, அவ்விடத்தில் ஊதுபத்தி ஏற்றி வைக்கலாம்.
  • நீங்கள் உச்சாடனை செய்யலாம், அல்லது பக்திப் பாடல்களோ உச்சாடனங்களோ கேட்டவாறு அமர்ந்திருக்கலாம்.
  • தனியாக இருக்கிறீர்கள் என்றால் நடந்த வண்ணம் இருக்கலாம் அல்லது இயற்கையுடன் ஒன்றி அமரலாம். பலபேர் சேர்ந்து குழுவாக இருக்கிறீர்கள் என்றால், முடிந்தவரை மௌனமாக இருப்பது நல்லது.
  • நள்ளிரவு சாதனா குறிப்புகள்: இரவு 11:10 – 11:30 — சுக பிராணாயாமம், இரவு 11:30 – 11:50 — ‘ஆஉம்’ உச்சாடனை, இரவு 11:50 – 12:10 — ‘ஆஉம் நமஹ ஷிவாய’ மஹாமந்திர உச்சாடனை
  • தொலைக்காட்சி மூலம் நேரடி ஒளிபரப்போ, அல்லது இணையம் மூலம் ஒளிபரப்பை காண்கிறீர்கள் என்றால், அதில் கூறப்படும் குறிப்புகளை பின்பற்றலாம்.
detail-seperator-icon

பொதுவான கேள்விகள்

எதிர்பாராத விதமாக ஒளிபரப்பு தடைபட்டால், என்ன செய்வது?

நாம் YouTube live நேரடி ஒளிபரப்பை பயன்படுத்துகிறோம். அதனை அலைபேசியிலோ கணினி திரையிலோ காண்பதில் எந்தவித பிரச்சனையும் வழக்கமாக வருவதில்லை! ஒருவேளை நீங்கள் ஏதாவது பிரச்சனையை எதிர்கொண்டால், அது உங்கள் network தொடர்பு சார்ந்ததாகவோ அல்லது browser சார்ந்ததாகவோ இருக்கும். அதனை சரிசெய்ய சில தீர்வுகள் இங்கே:
1.உங்கள் browser ஐ refresh செய்யவும் (refresh பொத்தானை க்ளிக் செய்யலாம் அல்லது F5 பொத்தானை அழுத்தலாம்)
2.வேறு browserகளுக்கு மாறிப் பார்க்கலாம். பொதுவாக Firefox, Chrome அல்லது Safari ஆகியவை சிறப்பாக இயங்குகின்றன. browserன் சமீபத்திய பதிவிறக்கத்தை பயன்படுத்தவும்
3.உங்கள் இணையதளம் வேலைசெய்கிறதா என்பதையும், குறைந்தபட்ச வேகமான 512kbps கிடைக்கப்பெறுகிறதா என்பதையும் பார்க்கவும்.
ஒருவேளை மேற்கூறிய தீர்வுகளில் உங்கள் பிரச்சனை சரியாகவில்லை என்றால், இந்த பக்கத்தில் கீழே வலப்புறத்தில் உள்ள chat widget அமைப்பில் எங்களுடன் தொடர்புகொள்ளலாம். உங்கள் பிரச்சனையை நாங்கள் கண்டறிந்து உதவ இது வசதியாய் இருக்கும்.

நிகழ்வை நேரடியாக காண்பதற்கான வேறு வழிகள் என்னென்ன?

We stream in YouTube & Facebook. மூலமாக நிகழ்ச்சி ஒளிபரப்ப செய்யப்படுகிறது..75திற்கும் மேற்பட்ட பல்வேறு தொலைக்காட்சிகள் மூலமாகவும் நேரடி ஒளிபரப்பினை காணலாம்!

நேரடி ஒளிபரப்பு எந்தெந்த மொழிகளில் எல்லாம் வழங்கப்படுகிறது?

1. தமிழ் மற்றும் ஆங்கிலம்
2. இந்தி மற்றும் ஆங்கிலம்
ஆகிய மொழிகளில் நேரடி ஒளிபரப்பு இருக்கும்.

எனது இருப்பிட நேரப்படி நள்ளிரவு வரும்போது இந்த நள்ளிரவு தியானத்தை செய்யலாமா?

தங்கள் நாட்டின் நேரப்படி நள்ளிரவு தியானத்தை துவங்கவேண்டும் என சத்குரு அறிவுறுத்தியுள்ளார் (நள்ளிரவிற்கு 20 நிமிடங்கள் முன்னதாக துவங்குக).

நான் வெளிநாட்டில் இருக்கிறேன். நான் இந்த நேரடி ஒளிபரப்பில் இணையவேண்டுமா அல்லது என்னுடைய நாட்டின் நேரப்படி காண வேண்டுமா?

வெளிநாடுகளில் உள்ளவர்கள், தாமதமாக நிகழ்வைக் காணவும், அப்போது உங்கள் இருப்பிட நேரப்படி நிகழ்வு மாலையில் துவங்குவதாக இருக்கும்.

நேரடி ஒளிபரப்பு HD (high definition) தரத்தில் ஒளிபரப்பப்படுகிறதா?

ஆம்! இந்த பக்கத்தில் உள்ள Youtube நேரடி ஒளிபரப்பு உயர்தர காட்சித் தரத்தில் (720p) ஒளிபரப்பப்படுகிறது..

நேரடி ஒளிபரப்பிற்கு பிறகு நிகழ்ச்சியின் பதிவுசெய்யப்பட்ட தொகுப்பு காண கிடைக்குமா?

ஒரு குறிப்பிட்ட நேரம் வரை நிகழ்வின் பதிவுகள் கிடைக்கும். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது, அந்த நிகழ்ச்சியின் முழுமையான தொகுப்பின் பதிவை வழங்குவோம். அந்த பதிவுகள் அனைத்தும் Youtube playlistல் பார்க்கும்படி கிடைக்கும். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போதே நீங்கள் அந்த பதிவுகளை பார்க்க விரும்பினால், நீங்கள் அவ்வப்போது பக்கத்தை refreshசெய்து புதிதாக பதிவுசெய்யப்பட்ட தொகுப்புகளை playlistல் பார்க்கலாம்.

FAQல் கேட்கப்படாத கேள்வி எழும்போது என்ன செய்வது?

ஒவ்வொரு பக்கத்திலும் கீழே வலதுபுறத்தில் live chatக்கான widget அமைப்பு உள்ளது. இதன்மூலம் நேரடி நிகழ்வின்போது, நீங்கள் தொழிற்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்ள நேர்ந்தால் நாங்கள் அதனை கண்டறிந்து சரிப்படுத்த உதவமுடியும். வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் msr@isha.sadhguru.org க்கு மின்னஞ்சல் செய்யவும்.