நிகழ்ச்சி நடைபெறும் இடம் – ஈஷா யோக மையம்

தென்னிந்தியாவின் எழில்மிகு இடங்களுள் ஒன்றாகிய வெள்ளியங்கிரி மலைச்சாரலின் அடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. இது உள்நிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த இடமாக உள்ளது. இங்கு சில காலம் தங்கியிருந்து, உங்கள் உள்நிலை வளர்ச்சிக்கு நீங்கள் நேரம் செலவிடலாம். யோகாவின் நான்கு பெரும் பாதைகளும் இங்கு வழங்கப்படுகிறது – க்ரியா யோகா, ஞான யோகா, கர்ம யோகா மற்றும் பக்தி யோகா. உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல்லாயிரம் மக்கள் இங்கு ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர்.

யோக மையத்தின் உயிர்நாடி, மிகச் சக்திவாய்ந்த, தனித்துவமிக்க சக்தி உருவமான தியானலிங்கம். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வை அதன் முழுமையில் உணர்ந்தறிய இணையற்றதொரு சாத்தியமாய் தியானலிங்கம் இருக்கின்றது. ஈஷா யோக மையத்தின் அருகே உள்ள லிங்கபைரவி, தெய்வீகப் பெண் தன்மையின் மிகப் பிரம்மாண்டமான அம்சம். தீவிரமும் உக்கிரமும் நிறைந்து, அதே நேரத்தில் கருணையின் உருவாய் அனைவரையும் பரவச நிலையில் திளைக்கச் செய்வாள்.

யோக மையத்தில் பல்வேறு விதமான தங்கும் வசதிகளும், 3 நாள், 4 நாள், 7 நாள் என வெவ்வேறு கால அவகாசம் தேவைப்படும் பல யோக வகுப்புகளும் உள்ளன. இதை உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த வகுப்புகளில் பங்கேற்பவர்களுக்கும், விருந்தினர்களாக யோக மையத்தில் தங்குபவர்களுக்கும், முழுமையான சாத்வீக உணவு வழங்கப்படும். ஒவ்வொருவரும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மாறவும், உயர்நிலையிலான நிறைவை நோக்கி பயணிக்கவும், தங்களின் முழு திறனை அடையவும், யோக மையம் அணுகூலமான ஒரு சூழ்நிலையை வழங்குகிறது.

detail-seperator-icon

மஹாசிவராத்திரிக்கு முன்பதிவு

யக்ஷா மற்றும் மஹாசிவராத்திரி பற்றிய தகவல்களுக்கு:

மின்னஞ்சல்: : info@mahashivarathri.org

Offline:

மஹாசிவராத்திரி பற்றிய தகவல்கள் மற்றும் இருக்கைப் பதிவுகளுக்கு:
தொலைபேசி: 83000 83111

detail-seperator-icon

யோக மையம் வந்தடைய

கோயம்புத்தூருக்கு 30 கி.மீ மேற்கே, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் ஒரு மாபெரும் தொழில் நகரமாகிய கோயம்புத்தூர், வான்வழி, ரயில் தடம், சாலை மார்க்கங்கள் மூலம் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. சென்னை, டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு, தினசரி விமானப் போக்குவரத்து உள்ளது. இந்தியாவின் எல்லா பெரு நகரங்களிலிருந்தும் கோவைக்கு இரயில் சேவைகள் உள்ளன. கோயம்புத்தூரிலிருந்து ஈஷா யோக மையத்திற்கு, அரசுப்பேருந்து, மற்றும் டாக்சி வசதிகளும் உண்டு.

விமானம்:

கோயம்புத்தூரில் விமான நிலையம் உள்ளது. இங்கு டெல்லி, சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து விமானங்கள் வருகின்றன.

இரயில்:

நம் மையத்திற்கு நெருங்கிய இரயில் நிலையம், கோயம்புத்தூர் இரயில் நிலையம்தான். இது நம் மையத்தில் இருந்து 30கி.மீ தொலைவில் உள்ளது.

சாலை:

பூண்டி, செம்மேடு, சிறுவாணி போன்ற இடங்களை அடைவதற்கான அனைத்து பெரிய சாலைகளின் மூலமும், ஈஷா யோக மையத்தை வந்தடையலாம். இரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தின் வெளியே டாக்ஸி வசதிகளும் உள்ளது.

பேருந்து வசதிகள்:

கோயம்புத்தூருக்கும், யோக மையத்திற்கும் இடையே நேரடிப் பேருந்துகள் உள்ளன. பேருந்துக்கான கால அட்டவணையை
இங்கே காணலாம்.

ஓட்டுனருக்கான வழித்தடக் குறிப்புகள்:

கோயம்புத்தூரிலிருந்து, உக்கடம் வழியாக, பேரூர்/சிறுவாணி சாலையில் வரவும். ஆலாந்துறை கடந்து, இருட்டுப்பள்ளம் சந்திப்பில் (கோவையிலிருந்து 23வது கி.மீ) வலதுபுறம் திரும்பவும். இங்கிருந்து 8 கி.மீ தொலைவில் மையம் உள்ளது. இதே சாலையில் பூண்டி கோவிலுக்கு 2 கி.மீ முன்பு நம் மையம் வந்துவிடும். வழியில் ஆங்காங்கே தியானலிங்கம் வருவதற்கான வழிக்காட்டிகள் இருக்கும்.

detail-seperator-icon

முகவரி


தொலைபேசி: 83000 83111
மின்னஞ்சல்: info@mahashivarathri.org