அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

முன்பதிவு தொடர்பான கேள்விகள்

நிகழ்ச்சிக்கு நான் எப்படி பதிவு செய்துகொள்வது? உள்ளூர் மையங்களிலா இணையம் மூலமாகவா?
உள்ளூர் மையங்கள் அல்லது இணையதளம் மூலமாக நிகழ்ச்சிக்கு பதிவு செய்துகொள்ளலாம்:
“பங்கேற்பாளர் பக்கத்திற்கு” சென்று “பதிவுசெய்க” எனும் பட்டனை கிளிக் செய்து பதிவு செய்துகொள்ளலாம். கேள்விகள் இருப்பின், அதனை பதிவுசெய்தால், 4 முதல் 7 நாட்களில் தன்னார்வத் தொண்டர் ஒருவர் உங்களைத் தொடர்பு கொண்டு, எப்படிப்பட்ட தங்கும் வசதியும் இருக்கை வசதியும் கைவசம் உள்ளது என்பதை விளக்குவார்.
குறிப்பு: நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருவதால், உங்களுக்கு எம்மிடமிருந்து 7 நாட்களுக்குள் பதில் கிடைக்காத பட்சத்தில், உங்களுக்கு அருகாமையில் உள்ள பதிவு மையத்தை தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு விருப்பமான இருக்கைப் பிரிவைத் தேர்ந்தெடுத்ததும், அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் நன்கொடை செலுத்துவதற்கான லிங்க் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
உங்கள் ‘ஸ்பேம்’ ஃபோல்டரிற்கு மின்னஞ்சல் வந்துள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளவும். நன்கொடை செலுத்துவதற்கான இந்த லிங்க், 30 நாட்கள் வரை செல்லுபடியாகும்.


நான் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கொண்டுவர வேண்டுமா?
ஆம்.

இந்தியர்கள், பாஸ்போர்ட், வாக்குச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், அல்லது ஆதார் அடையாள் அட்டையை எடுத்து வரலாம்.

வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு: செல்லுபடியாகக் கூடிய வீசாவுடன், பாஸ்போர்ட் கட்டாயம் தேவை


மஹாசிவராத்திரி அன்று எத்தனை மணிக்கு நான் அங்கு வரவேண்டும்?
ஏற்கெனவே பதிவு செய்தோரின் பதிவை சரிபார்த்து உள்ளே அனுப்பும் சேவை முகப்புகள், மஹாசிவராத்திரி அன்று மதியம் 12 மணியில் இருந்தே செயல்படும். கழிவறை மற்றும் களைப்பாறும் வசதிகள் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்களின் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட e-passன் பிரிண்ட்-அவுட் எடுத்துவரவும்.


எனக்குத் தமிழ் தெரியாது. நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாமா?
மஹாசிவராத்திரி விழா ஆங்கிலத்தில் நடைபெறும். தமிழ், ஹிந்தி மற்றும் மாண்டரின் மொழிகளில் உடனுக்குடன் மொழிபெயர்ப்பு வழங்கப்படும்.

சர்க்கரை வியாதி, இருதய பிரச்சனைகள் அல்லது ஹெர்னியா பிரச்சனை இருப்பவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாமா?
கலந்துகொள்ளலாம். அதற்கான மருந்துகளை உடன் எடுத்து வரவும்.


தரையில் அமர்வது எனக்கு கடினம்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான பதிவு எண் உங்களிடம் இருந்தால், நாற்காலியில் நீங்கள் அமரும் வசதி இருக்கும்.

என் குழந்தைகளை நான் அழைத்து வரலாமா? இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குறைந்தபட்ச வயது வரையறை என்ன?
நிகழ்ச்சியின்போது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கான வசதியோ, அதற்கான சூழ்நிலையோ ஈஷா யோக மையத்தில் இல்லை. நீங்கள் இங்கு இருக்கும் சமயத்தில் உங்கள் குழந்தைகளை வீட்டில் வைத்து கவனித்துக்கொள்ள காப்பாளர்களை ஏற்பாடு செய்வது சிறந்தது.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குறைந்தது 10 வயதாவது ஆகியிருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினருடன் கோவையில் தங்கிவிட்டு, மஹாசிவராத்திரி இரவில் மட்டும் அவர்களை இங்கு அழைத்து வரலாம்.

நான் அங்கு வரும் நாளன்று நேரடியாக பதிவு செய்துகொள்ள முடியுமா?
மிகப் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக இது இருக்கப் போகிறது என்பதால், நிகழ்ச்சிக்கு 3 நாட்கள் முன்னதாக தாங்கள் பதிவுசெய்வது சிறந்தது. நிகழ்ச்சி தேதியன்று இடவசதி இருக்கும் பட்சத்தில் பதிவுசெய்யும் வாய்ப்பு வழங்கப்படும்.

பதிவு செயல்முறை முடிவடைந்து விட்டதா என்பதை எப்படி அறிவேன்?
நன்கொடை செலுத்திய ஒரு வேலை நாளுக்குள், செலுத்திய நன்கொடைக்கான ரசீதும், அதனை உறுதி செய்யும் பதிவு எண்ணுடன் கூடிய மின்னஞ்சலும் உங்களை வந்தடையும். நிகழ்ச்சி தேதி நெருங்கும் சமயத்தில், மின்னஞ்சல் மூலம் இ-பாஸ் அனுப்பப்படும்.

நான் ஈஷா யோகா வகுப்பில் கலந்து கொண்டதில்லை. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாமா?
நிச்சயமாக. இதில் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

ஒரு சீட்டிங்க்-பாஸ் (இருக்கை முன்பதிவு) இருந்தால், அதை எத்தனை பேர் பயன்படுத்தலாம்?
நீங்கள் எந்தப்பிரிவில் இருக்கை முன்பதிவு செய்திருந்தாலும், ஒரு சீட்டிங்க்-பாஸை ஒருவர்தான் பயன்படுத்தமுடியும். உங்கள் பெயரில் இருக்கும் சீட்டிங்க்-பாஸை நீங்கள் வேறொருவருக்கு கொடுக்கமுடியாது.

வெவ்வேறு பிரிவில் இருக்கைள் உள்ளன. இவற்றிற்கிடையே வித்தியாசம் என்ன?
இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைவரும் இம்முழு நிகழ்விலும் ஒரேவிதமாகவே பங்குபெறுவர். ஒரேவொரு வித்தியாசம், அவர்களின் இருக்கை மேடையில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதுதான்.

குறைவான செலவில் காட்டேஜ் வசதிகள் கிடைக்க வழியிருக்கிறதா?
மன்னிக்க வேண்டுகிறோம். மஹாசிவராத்திரி சமயத்தில் தங்கும் வசதிகள் இருக்காது.

நாங்கள் கங்கா பிரிவிலும், எங்கள் பெற்றோர் மஹாநதி பிரிவிலும் இருக்கை பதிவு செய்துள்ளோம். அவர்கள் எங்களுடன் அமரமுடியுமா?
நீங்கள் விரும்பினால் உங்கள் பெற்றோருடன் சேர்ந்து மஹாநதி பிரிவில் அமரலாம். ஆனால் உங்கள் பெற்றோர் கங்கா பிரிவில் அமரமுடியாது


கங்கா / யமுனா / மாஹாநதி பிரிவுகளில் இருக்கை பதிவு செய்யாத எங்கள் பெற்றோர் / உறவினர்கள், எங்களுடன் சேர்ந்து நிகழ்ச்சியில் எப்படி கலந்து கொள்ளமுடியும்?
நீங்கள் பதிவு செய்து கொண்டுள்ள அதே பிரிவில் அவர்களும் இருக்கைகளை பதிவுசெய்து கொள்ளலாம். அல்லது அவர்களுக்கு வேறு எந்த பிரிவு சௌகரியப்படுமோ, அதற்கான நங்கொடையை வழங்கி அப்பிரிவில் அமர்ந்து அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

இந்தியாவில் எந்தெந்த விதத்தில் பணம் செலுத்தமுடியும்?
வயர் ட்ரான்ஸ்ஃபர் மூலம் பணம் செலுத்தலாம். ஈஷா வங்கிக் கணக்கை பணம் வந்தடைந்ததும் உங்களுக்கான பதிவுகள் உறுதி செய்யப்படும். உங்கள் பதிவு உறுதியாகும் வரை உங்கள் பயண ஏற்பாடுகளை ஒத்தி வைக்கவும். அல்லது உள்ளூர் பதிவு மையங்களுக்கு நேரடியாகச் சென்று, பணம் செலுத்தி அல்லது கார்டு மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் காசோலை பெற்றுக்கொள்ளப் படமாட்டாது.

நான் பங்கேற்க வேறு யாரேனும் என் சார்பில் பணம் செலுத்தமுடியுமா?
உங்கள் சார்பாக யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். பணம் செலுத்துபவரின் பெயரில் ரசீது வழங்கப்படும். ஆனால் இருக்கைக்கான முழு தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்தவேண்டும். அதைப் பகுதி பகுதியாக செலுத்தமுடியாது.

நிகழ்ச்சிக்கு முன் சிறிது, நிகழ்ச்சிக்குப்பின் சிறிது என்று முன்பதிவிற்கான தொகையை நான் பிரித்து செலுத்த முடியுமா?
அப்படி செய்யமுடியாது.

என் வாகனத்தில் நான் வரலாமா? அதற்கான பார்க்கிங்க் வசதி இருக்கிறதா?
பார்க்கிங்க் வசதி ஓரளவிற்குத்தான் உள்ளது. உங்கள் வாகனப் பொறுப்பு உங்களுடையது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எவ்விதத்திலும் இதற்கு பொறுப்பேற்க முடியாது.


detail-seperator-icon

பங்கேற்பது குறித்த கேள்விகள்


கர்ப்பிணியாக இருந்தால், அல்லது மாதவிலக்கு காலத்தில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாமா?
கலந்துகொள்லலாம்.


இந்நிகழ்ச்சிக்கு எப்படிப்பட்ட உடைகள் அணிந்திருக்க வேண்டும்?
இரசனைமிக்க பாரம்பரிய உடைகளை மஹாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு அணிந்து வரலாம். ஆண் பெண் இருபாலரின் உடைகளும் தளர்வாக, தோள்கள், முழங்கால்கள் மற்றும் இடுப்புப் பகுதியை மறைப்பதாக இருக்கவேண்டும்.
மேற்கத்திய உடை அணிவதானால், ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், முழு நீள பாண்ட் (அரை-கால் ஷார்ட்ஸ், காப்ரீஸ் கூடாது) மற்றும் கைகளின் மேற்பகுதியை மறைக்கும் விதமான நீள சட்டைகளும் அணியலாம். உங்கள் சௌகரியம் கருதியும், உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாகவும், இறுக்கமான உடைகளை தவிர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
யக்ஷா மற்றும் மஹாசிவராத்திரியின் போது, இந்திய பாரம்பரிய விசேஷ உடைகளை அணிவது விழாக்கோலத்திற்கு பொருத்தமாக இருக்கும்.

வெதுவெதுப்பான உடைகள், சால்வைகளை இரவு நேரத்திற்கு உடன் வைத்திருப்பது நல்லது
டிசம்பரில் இருந்து மார்ச் வரை இரவு நேரம் ஓரளவு குளிராகவும், பகல்நேரம் வெதுவெதுப்பாகவும் இருக்கும். தட்பவெப்பம் 17°C ல் இருந்து 35°C வரை மாறுபடும்.

துணி துவைக்க வசதிகள் உள்ளதா?
யோக மையத்தில் நிலவும் அதீத தண்ணீர் பற்றாக்குறையால், நீங்கள் துணி துவைப்பது சாத்தியமில்லை. சலவை வசதிகளும் இருக்காது. அதனால் இங்கு தங்கும் நாட்களுக்குத் தேவையான அளவு துணிகள் எடுத்துவரவும்.

கோவையை அடைந்த பிறகு ஈஷா யோக மையம் வருவது எப்படி?
வாடிக்கையாக வரும் பஸ் மற்றும் டேக்ஸி மூலம் கோவையிலிருந்து ஈஷா யோக மையத்திற்கு வரமுடியும். கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் இருந்து ஈஷா யோக மையத்திற்கு, ரூட் எண்: 14 D பஸ்ஸில் வரலாம். காலை 5:30 மணி முதல் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இந்த பேருந்து வரும்.
டாக்ஸி பதிவுசெய்ய ஈஷா உதவி எண்: 9442615436, 0422-2515430

 • டாக்ஸி டாக்ஸி: 0422-40506070, எர்போர்ட் ப்ரீபெய்டு: 99764 94000
 • Fast Track: 0422-2200000 (முன்பே கட்டணத்தை விசாரித்து முன்பதிவு செய்யவும்).
 • மொபைல் ஆப் மூலம் ஓலா/ உபேர் டேக்ஸி புக் செய்யலாம்.

,
தனியார் வாகனங்களுக்கு குறைந்த அளவிலான பார்க்கிங் வசதிகளே உள்ளது.


மஹாசிவராத்திரி நிகழ்வில் கலந்துகொள்ள தடைகள் ஏதும் உள்ளதா?
இதில் கலந்துகொள்ள வரையறைகள் என்று எதுவும் இல்லை. 10 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஓரளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம்.

நான் அலைபேசி பயன்படுத்தலாமா?
நிகழ்ச்சியின் தன்மை காரணமாகவும், நீங்கள் நிகழ்ச்சியை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாகவும், நிகழ்ச்சியின்போது அலைபேசி பயன்பாட்டை குறைவாக வைத்துக்கொள்வது சிறந்தது.
குறிப்பு: அலைபேசியை சார்ஜ் செய்யும் வசதியும் இருக்காது.


நிகழ்ச்சிக்கு எப்படிப்பட்ட உணவை நான் கொண்டுவர வேண்டும்?
நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் மஹா அன்னதானம் வழங்கப்படும். உடல்நலம் சார்ந்த பிரச்சினையால் உங்களுக்கு ஏதேனும் உணவுக் கட்டுப்பாடு இருக்கிறது என்றால், சத்தான சைவ உணவைக் கொண்டுவரலாம்.

யோகா மேட் கொண்டுவரத் தேவை இருக்குமா?
யோகா மேட் கொண்டுவரத் தேவையில்லை.

நிகழ்ச்சி எவ்வளவு நேரம் நடைபெறும்? விபரங்கள்..?
மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் மாலை 6 மணிக்குத் துவங்கும். 5 மணிக்கு உங்கள் இருக்கைகளில் தயாராக அமர்ந்துவிடுங்கள். தேவி மஹா ஊர்வலம் 7 மணியளவில் துவங்கும்.

நிகழ்ச்சியின்போது அல்லது நிகழ்ச்சிக்குப் பிறகு நான் சத்குருவுடன் பேசமுடியுமா?
மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் சத்குரு முழுமையாக ஈடுபட்டிருப்பார் என்பதால் அதற்கு வாய்ப்பிருக்காது. இந்த செயல்முறையில் நீங்களும் முழுமையாக ஈடுபடுவது சிறந்தது. உங்களை 100% கொடுத்து அவருடைய குறிப்புகளை நீங்கள் முழுமையாகப் பின்பற்றினால், இந்நிகழ்ச்சியை நடத்திச் செல்வதற்கு அவருக்கும் சுலபமாக இருக்கும். இந்நிகழ்ச்சி முழுவதும் அவரின் வழிகாட்டுதலில் நடைபெறும் என்பதால் இதற்கு நம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.


detail-seperator-icon

நிகழ்ச்சி பற்றிய கேள்விகள்

ஆதியோகி பிரதக்ஷணம் பற்றிய விபரங்கள் கூறமுடியுமா?
பிரதக்ஷணம் என்பது ஒரு தீவிரமான சக்தி மூலத்தை இடமிருந்து வலமாக சுற்றிவந்து அதன் சக்தியை உள்வாங்கிக் கொள்ளும் செயல்முறை. அதிலும் ஈஷா யோக மையம் அமைந்திருக்கும் 11 டிகிரி அக்ஷரேகையில் இது இன்னும் தீவிரமாக நிகழும். சத்குரு வழங்கியிருக்கும் இந்த ஆதியோகி பிரதக்ஷணம், முக்தியை நாடும் ஏக்கத்தை ஒருவருக்குள் வளர்க்கக்கூடிய ஆதியோகியின் சக்தியை ஒருவர் உள்வாங்கிக் கொள்வதற்கு வழிசெய்கிறது. இதை யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.
பிரதக்ஷண நேரம்: மார்ச் 04, காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை
மார்ச் 05, காலை 6 மணிமுதல்


இக்கொண்டாட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும்?
யக்ஷா என்பது 3-நாள் நிகழ்ச்சி. இதைத் தொடர்ந்து மஹாசிவராத்திரி 1-நாள் இரவு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சி.
மார்ச் 01 – 03 : யக்ஷா (மாலை 6 முதல் இரவு 8 வரை, தினமும்)
மார்ச் 04 : மஹாசிவராத்திரி (மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை)

இருக்கை வசதிக்கான பணம் செலுத்துவது தவிர்த்து, இந்நிகழ்ச்சிக்காகவோ, அன்னதானத்திற்காகவோ தனிப்பட்ட முறையில் நன்கொடை வழங்கும் வாய்ப்பு இருக்கிறதா?
இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கான பொது நன்கொடை இங்கே வழங்கலாம்
தயவுசெய்து கவனிக்க: மேலே வழங்கப்பட்டிருக்கும் லிங்க் மூலம் செலுத்தப்படும் நன்கொடைகளை, இருக்கை வசதிகளுக்கோ, காட்டேஜ் வசதிகளுக்கோ அல்லது வேறு எந்த வசதிகள் பெறுவதற்குமோ பயன்படுத்திக் கொள்ளமுடியாது.

குறிப்பிட்டு இதற்காக என்றில்லாமல் நான் பொதுவாக நன்கொடை வழங்க விரும்புகிறேன். அதில் பாதியை என் இந்திய வங்கிக் கணக்கில் இருந்தும், மீதியை என் வெளிநாட்டு வங்கிக் கணக்கில் இருந்தும் கொடுக்கலாமா?
பொதுவான நன்கொடை என்றால் இவ்வாறு தரலாம்.
இந்திய வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொடுக்கிறீர்கள் என்றால், உங்கள் இந்திய மொபைல் நம்பர், இந்திய முகவரி மற்றும் PAN நம்பர் தேவைப்படும்.
வெளிநாட்டு வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொடுக்கிறீர்கள் என்றால், உங்கள் வெளிநாட்டு தொடர்பு எண், வெளிநாட்டு முகவரி மற்றும் பாஸ்போர்ட் நகல் தேவைப்படும்.

இதுவே இருக்கையை பதிவுசெய்து கொள்ள பணம் செலுத்துகிறீர்கள் என்றால், அதை ஒரே வங்கிக்கணக்கில் இருந்துதான் செலுத்தவேண்டும். அந்த வங்கிக்கணக்கு, உங்கள் நாட்டுரிமை, நீங்கள் வசிக்கும் நாட்டை பொறுத்து, வெளிநாட்டு வங்கிக் கணக்காகவோ, இந்திய வங்கிக் கணக்காகவோ இருக்கலாம்.


கர்ப்பிணிப் பெண்கள் மஹாசிவராத்திரி சாதனா செய்யலாமா?
மந்திர உச்சாடனை செய்யலாம்.

மார்ச் 1-3 மாலைகளில் நடைபெறும் யக்ஷா கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பாளர்கள் பங்கேற்கலாமா?
பங்கேற்கலாம்

மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்புகிறேன். அதற்கு எங்கு பதிவு செய்து கொள்ளவேண்டும்?
ஈஷாவில் ஒவ்வொரு மஹாசிவராத்திரியும் மாபெரும் கொண்டாட்டமாக நிகழ்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இணையத்தின் நேரடி ஒளிபரப்பு மூலமாகவும், ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும் இதில் கலந்து கொள்கிறார்கள். இதில் பங்கெடுக்க உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வருவோரை வரவேற்று, அவர்கள் மஹாசிவராத்திரி இரவை சிறந்த முறையில் உணர்ந்து செல்ல ஈஷா யோக மையத்திலும் சரி, மஹாசிவராத்திரித் திடலிலும் சரி, மேற்கொள்ளப்படும் பிரம்மாண்டமான ஏற்பாடுகளில் பங்கெடுப்பதும், பங்களிப்பதும் ஒரு பெரும் பாக்கியம்.
செயலின் மூலம் உங்களை அர்ப்பணிப்பது, உங்கள் உள்வாங்கும்திறனை அதிகரித்துக் கொள்வதற்கு ஒரு நல்ல வழி.
தன்னார்வத் தொண்டு செய்ய இங்கே பதிவுசெய்து கொள்ளுங்கள்

மஹாசிவராத்திரி சாதனா பற்றி சொல்லுங்கள்
ஒப்பற்ற சாத்தியங்களை அளிக்கும் மஹாசிவராத்திரி இரவிற்கு நம்மை தயார்செய்து கொள்வதற்கான சாதனா, இந்த மஹாசிவராத்திரி சாதனா. 8 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை மேற்கொள்ளலாம். மஹாசிவராத்திரிக்கு முந்தைய 40 / 21 / 14 / 7 அல்லது 3 நாட்களுக்கு இந்த சாதனாவை மேற்கொள்ளலாம். இதை மஹாசிவராத்திரி அன்று தியானலிங்கத்தில் (முடியாத பட்சத்தில் வீட்டில்) முடித்துக் கொள்ளலாம்:
மேலும் விபரங்களை இங்கே பெறுக

சாதனாவிற்கு பயன்படுத்த வேண்டிய உச்சாடனைகள் மற்றும் ஷிவ நமஸ்கார் வீடியோவை காண்க


யக்ஷா என்றால் என்ன?
இசை மற்றும் நடனத்தை அங்கீகரிக்கும் கொண்டாட்டமாகவும், மஹாசிவராத்திரி விழாவிற்கு முன்னோடியாகவும் இந்த யக்ஷா கலைவிழா நடைபெறுகிறது. இது இவ்வருடம் மார்ச் 01 – 03, ஈஷா யோக மையத்தில் நடக்கிறது.
நம் தேசத்தின் தொன்மையான இசை, நடன கலை வடிவங்களின் தனித்தன்மை, தூய்மை, பன்முக தன்மையை பாதுகாத்து வளர்க்கும் முயற்சியாக ஆண்டுதோறும் 3-நாள் விழாவாக நடக்கும் இந்த கலைத் திருவிழாவில், நம் நாட்டின் தலைசிறந்த கலைஞர்கள் பழம்பெரும் கலைவடிவங்களை அவற்றிற்கே உரிய தனிச்சிறப்புடனும், கவித்துவத்துடனும் வழங்குகிறார்கள்.
நம் பாரம்பரிய கலை வடிவங்களில் பொதிந்துள்ள ஆழத்தையும், மென்மையையும், ரசித்து உணரும் வாய்ப்பாக அமைந்துள்ள யக்ஷா திருவிழாவில் கலந்துகொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்.


சாதனா பற்றிய கேள்வி பதில்கள்

கால் மடக்கி அமர்ந்து மந்திரம் உச்சரிக்கும்போது, கைகள் / உள்ளங்கைகள் எப்படி வைத்திருக்க வேண்டும்?

இந்த மந்திரம் உச்சரிக்கும்போது, கைகள் / உள்ளங்கைகளை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று சத்குரு குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. அதனால் எப்படி வைத்துக்கொள்வது உங்களுக்கு சௌகரியமோ, அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்


வெள்ளை / வெளிர் நிற ஆடைகளை சாதனா முடிவடையும்போது மட்டும் அணியவேண்டுமா அல்லது சாதனா காலம் முழுவதுமே இதுபோன்ற உடைகள்தான் அணியவேண்டுமா?

சாதனா காலம் முழுவதுமே இதுபோன்ற உடைகள்தான் அணியவேண்டும்


கையின் மேற்பகுதியில் கட்டிக்கொள்ளும் கருப்புத்துணியை, குளிக்கும் சமயத்தில் அல்லது கடலில் நீந்தச் செல்லும் நேரத்தில் கழற்றி வைக்கலாமா?

சாதனா நேரத்தில் எக்காரணத்தைக் கொண்டும் அந்த கருப்புத்துணியை கழற்றக்கூடாது


ஒருவேளை விபூதி கிடைக்கவில்லை எனில், அதற்கு பதில் வேறேதேனும் பயன்படுத்தலாமா அல்லது ஒன்றும் பயன்படுத்தாமல் விட்டுவிடலாமா?

விபூதியை மட்டுமே பயன்படுத்துங்கள். அதிலும் அது ஈஷாவில் தயார் செய்த விபூதியாக இருப்பது நல்லது. ஈஷாவில் கிடைக்கும் விபூதி சரியான முறையில் தயாரிக்கப்பட்டது என்பதோடில்லாமல், அது சக்தியூட்டப்பட்டும் இருக்கிறது.


எனக்கு வேப்பிலையோ, வில்வ இலையோ கிடைக்க வழியில்லை. வேப்பிலை தூளை இரவில் ஊறவைத்து உண்பதற்கும் சாத்தியமில்லை. அதற்கு பதிலாக நான் வேறேதேனும் பயன்படுத்தலாமா (ஐரோப்பாவில் புண்ணை இலை கிடைக்கும்) அல்லது இதை விட்டுவிடலாமா? அதேபோல் சாதனாவை முடித்துக்கொள்ளும் தினத்தில் தியானலிங்கத்திற்கு அர்ப்பணிக்க என்னிடம் 3 வேப்பிலைகள் இருக்காது. அதற்கு பதிலாக வேறென்ன அர்ப்பணிக்கலாம்?

வேப்பிலைகளும், வில்வ இலைகளும் வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான இந்தியக் கடைகளில் கிடைக்கும். அல்லது வேப்பிலைத்தூளை நீங்கள் இணையம் மூலம் ஆர்டர் செய்தும் பெறமுடியும். அந்த வேப்பிலைத்தூளை தண்ணீருடன் சேர்த்து சிறு உருண்டைகளாய் பிடித்து உண்ணலாம். சாதனாவை முடித்துக் கொள்ளும்போது வில்வ இலைகளோ, வேப்பிலைகளோ கிடைக்காது என்றால், இதை விட்டுவிடலாம்.


ஷிவ நமஸ்கார் மற்றும் மந்திர உச்சாடனையை என் காலை பயிற்சியுடன் சேர்த்து செய்ய முடிவுசெய்தால், இதை எந்த வரிசையில் செய்வது? முதலிலா… கடைசியிலா… அல்லது நடுவிலா?

குறிப்பிட்ட வரிசை என்று எதுவுமில்லை. ஷிவ நமஸ்கார் செய்யும்போது மட்டும், அது சூரிய உதயத்திற்கு முன்பாகவோ அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகோ செய்வதை ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள்.


மஹாசிவராத்திரி சாதனாவிற்கான குறிப்புகள் என்ன?

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளைக் காண்க:
8-10 மிளகு மணிகளை, 2-3 வில்வ இலைகள் / வேப்பிலைகளுடன் தேனிலும், ஒரு கையளவு நிலக்கடலையை தண்ணீரிலும் இரவு முழுவதும் ஊறவையுங்கள். காலையில் ஷிவ நமஸ்கார் மற்றும் மந்திர உச்சாடனை முடிந்ததும் அந்த இலைகளை மென்று உண்ணுங்கள். பிறகு அந்த மிளகை எலுமிச்சம்பழம் ஜூஸ்-ல் கலந்து குடித்து, அந்த நிலக்கடலையையும் உண்ணுங்கள். வில்வ இலைகளோ, வேப்பிலைகளோ கிடைக்கவில்லை என்றால் வேப்பிலைத் தூளை சிறு உருண்டைகளாய் பிடித்து உண்ணலாம். IshaShoppe.com ல் வேப்பிலைத்தூள் கிடைக்கும். நீங்கள் ஷாம்பவி மஹாமுத்ரா மற்றும் பிற பயிற்சிகள் கற்றிருந்தால், அவற்றை எல்லாம் முடித்தபின் கடைசியாக இவற்றை உட்கொள்ளலாம்.


காலை அல்லது மதிய சாதனா முடித்தபின் மெழுகுவர்த்தியை அணைக்க வேண்டுமா அல்லது அது அப்படியே இருக்கட்டுமா? மெழுகுவர்த்தியை எப்போது ஏற்றவேண்டும்..? சாதனாவை ஆரம்பிக்கும் முன்பா?

விளக்கோ / மெழுகுவர்த்தியோ சாதனா ஆரம்பிக்கும் முன் ஏற்றவேண்டும். சாதாரணமாக ஏற்றிய தீபம் (சாதனா முடிந்தபின்னும்) முழுதாய் எரிந்துமுடிக்க அனுமதிக்க வேண்டும். ஒருவேளை பெரிய மெழுகுவர்த்தி உபயோகிக்கிறீர்கள் அல்லது நீங்கள் இல்லாமல் அங்கு விளக்கு / மெழுகுவர்த்தி எரிவது பாதுகாப்பல்ல என்று நினைத்தால், உங்கள் சாதனா முடிந்தபின் விளக்கு / மெழுகுவர்த்தியை அணைத்துவிடலாம். ஒரு பூவைக் கொண்டு அந்த தீபத்தை குளிர வைக்கலாம். ஊதி அணைப்பது அத்தனை சிறந்ததல்ல.


தினமும் கருப்புத்துணியை கையில் எப்போது கட்டவேண்டும்? காலையில் சாதனா அரம்பிக்கும் முன்பா, சாதனா நேரத்திலா அல்லது சாதனா முடித்தபின்பா? அடுத்தநாள் மீண்டும் கட்டிக் கொள்வதற்கு அந்தக் கருப்புத்துணியை எப்போது கழற்றவேண்டும்? மஹாசிவராத்திரி சாதனா செய்யும்போது மட்டும்தான் இதில் கையில் இருக்கவேண்டுமா அல்லது நாம் செய்யும் பிற பயிற்சிகளின் போதும் (ஷாம்பவி மஹாமுத்ரா மற்றும் பிற பயிற்சிகளின் போதும்) இது கையில் இருக்கலாமா?

உங்கள் சாதனா காலம் எதுவாக இருந்தாலும் (40, 21, 14, 7 or 3 நாட்கள்), அந்நேரம் முழுவதுமே கருப்புத்துணி உங்கள் கையில்தான் இருக்கவேண்டும். நடுவில் எதற்காகவும் அதை கழற்றக்கூடாது.


குளிப்பதற்கு எந்த ஸ்நானம் பொடியை பயன்படுத்த வேண்டும்?

ஈஷா மையங்களில் ஸ்நானம் பொடி கிடைக்கும். குளிப்பதற்கு அதைப் பயன்படுத்தலாம். அது கிடைக்கவில்லை என்றால், செயற்கை பொருட்களோ, இரசாயனங்களோ இல்லாத ஏதேனும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.


வீட்டிலேயே விபூதி தயாரிக்கலாமா? அதற்கு என்னவெல்லாம் தேவை? விபூதியை எப்போது இட்டுக்கொள்ள வேண்டும்? காலை சாதனாவின் போதா, அதற்குப் பிறகா? உடலில் இட்டுக்கொண்ட விபூதியை சாதனாவின் பின் அப்படியே விட்டுவிடலாமா?

விபூதியை சாதனாவிற்கு முன் இட்டுக் கொள்ளலாம். உடலில் இட்டுக்கொண்ட விபூதி, சாதனா முடிந்தபின்னும் அவ்வாறே இருக்கட்டும். நீங்கள் வீட்டில் விபூதி தயார்செய்ய முடியாது. அதற்கு பதிலாக, நம்பத்தகுந்த இடத்தில் இருந்து விபூதி வாங்கிக் கொள்ளலாம். விபூதியை நீங்கள் ஈஷாவில் இருந்து வாங்கமுடியும் என்றால் அது சிறந்தது. அது சரியான முறையில் தயார் செய்யப்பட்டிருப்பதோடு, சக்தியூட்டப்பட்டும் உள்ளது.


நான் மார்ச் 1ம் தேதியே ஆசிரமம் வந்துவிடுகிறேன். மஹாசிவராத்திரி சாதனாவில் இருப்பதால் முதல்வேளை உணவு மதியம் 12 மணிக்கு மேல்தான் உண்ணவேண்டும். அந்நேரத்தில் எனக்கு ஆசிரமத்தில் உணவு கிடைக்குமா? காலையில் நாங்கள் உண்ணவேண்டிய மிளகு, நிலக்கடலை ஆகியவற்றையும் நாங்களே கொண்டுவர வேண்டுமா?

சாதனாவில் இருப்பவர்களுக்கு 12 மணிக்குமேல் உணவு தனியாக வழங்கப்படும். ஆனால் சாதனாவிற்கு தனிப்பட்ட முறையில் உங்களுக்குத் தேவையான மிளகு, நிலக்கடலை, தேன், எலுமிச்சை ஆகியவற்றை நீங்களேதான் கொண்டுவர வேண்டும்.


கருப்புத்துணியை கையில் கட்டாமல் சட்டை பாக்கெட்டில் எப்போதும் உடன் வைத்திருக்கலாமா?

கருப்புத்துணியை கையில் கட்டியிருக்க வேண்டும்


ஏதோவொரு நாள் ஒருவேளை சாதனா செய்யத் தவறிவிட்டது என்றால் என்ன செய்வது? மீண்டும் அடுத்த நாளில் இருந்து துவங்கலாமா?

சாதனாவை மேற்கொள்வது என்று நிர்ணயித்துவிட்டால், தினமும் சாதனா செய்யவேண்டும். அந்த உறுதி உங்களுக்கு இருக்கவேண்டும். “தினமும் செய்யவேண்டும்” என்ற உறுதியோடு இருந்தால், அதை செய்வதற்கு நீங்களே வழி உருவாக்கிக் கொள்வீர்கள். சூரிய உதயத்திற்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் இதை செய்யலாம் என்பதால், உங்கள் நாளைத் துவங்குவதற்கு முன் இதை செய்துமுடிப்பதற்கு ஏற்றவாறு சீக்கிரமே எழுந்துவிடுங்கள். இந்த சாதனா மிகவும் சக்திவாய்ந்தது. உங்கள் வாழ்வையே மாற்றியமைக்கக்கூடிய வல்லமை கொண்டது. அதனால் இதை உங்களுக்கு எப்படி நடத்திக்கொள்வது என்பதைப் பாருங்கள்!


இந்த சாதனாவை மேற்கொண்டால் மஹாசிவராத்திரி முழுவதும் கண்விழித்து இருப்பது கட்டாயமா? ஒருவேளை நான் நடுவில் தூங்கிவிட்டால் என்ன செய்வது? நான் பிலிபைன்ஸ் நாட்டில் இருப்பதால், இந்தியாவிற்கும் இங்கும் 2.5 மணிநேர நேர-வித்தியாசம் வேறு இருக்கிறது.

மஹாசிவராத்திரி இரவு முழுவதும் கண்விழித்து இருப்பது, இந்த சாதனாவின் மிக முக்கியமான அங்கம். இந்த சாதனாவில் ஈடுபட்டு அந்த 40 நாட்கள் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி அனைத்திற்கும் பலன் கிடைக்கும் இரவு இந்த மஹாசிவராத்திரி. அதனால் அன்றிரவை முடிந்த அளவிற்கு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அன்றிரவு கண்விழித்திருக்க என்னென்ன உதவிகள் வேண்டுமோ – குளிர்ந்த நீரில் குளிப்பது, தலையை ஈரமாகவே வைத்துக் கொள்வது, எழுந்து சிறிது தூரம் நடப்பது – இப்படி என்னென்ன செய்யமுடியுமோ அதை செய்து கண்விழித்திருங்கள். அருகில் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் நடந்தால், அதில் கலந்து கொள்ளலாம். அல்லது ஈஷாவின் மஹாசிவராத்திரிக் கொண்டாட்டத்தின் நேரடி இணைய ஒளிபரப்பைக் காணலாம்.


சிவாங்கா சாதனா, மஹாசிவராத்திரி சாதனா இரண்டையும் ஒரேநேரத்தில் நான் மேற்கொள்ளலாமா?
செய்யலாம்
சாதனா பற்றிய தெளிவான விளக்கம்
மஹாசிவராத்திரிக்கு தயார் செய்துகொள்ள சத்குரு கீழிருக்கும் சாதனாக்களை வழங்கியிருக்கிறார்:
1. சிவாங்கா சாதனா: ஆண்களுக்கான சிவாங்கா சாதனா வெள்ளியங்கிரி மலை மீது ஏறி நிறைவு செய்யவேண்டும்.

மேலும் விபரங்களை இங்கே பெறுக:
சிவாங்கா சாதனா மற்றும் துவங்கும் நாள் பற்றிய விபரங்கள்

2. மஹாசிவராத்திரி சாதனா: ஆண்கள், பெண்கள், அனைவருக்கும். 40/21/12/7/3 நாள் சாதனா. தியானலிங்கத்திற்கு வந்து சாதனாவை நிறைவு செய்யவேண்டும் (அல்லது வீட்டிலேயே நிறைவு செய்யலாம்).

மேலும் விபரங்களுக்கு:
மஹாசிவராத்திரி சாதனா மற்றும் குறிப்புகள்

detail-seperator-icon

தன்னார்வத்தொண்டு பற்றிய கேள்விகள்

மஹாசிவராத்திரி 2020ற்குத் தன்னார்வத் தொண்டு செய்ய எங்கு பதிவு செய்துகொள்ள வேண்டும்?

இந்த லிங்க் -ல் உங்கள் விவரங்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம். ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சிக்கு தீட்சை பெற்றவர்கள் மட்டுமே தன்னார்வத் தொண்டு செய்யமுடியும். தன்னார்வத் தொண்டு செய்ய விரும்புகிறவர்கள், மஹாசிவராத்திரிக்கு 7-நாள் முன்பிருந்தே, அதாவது பிப்ரவரி 14ம் தேதி முதல் தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.


என் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைய நான் கொண்டு வரவேண்டுமா?

நீங்கள் இந்தியராக இருந்தால், உங்கள் பாஸ்போர்ட், வாக்குரிமை அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் கார்டு கொண்டு வரலாம்.

கவனிக்க: இப்போது தன்னார்வத் தொண்டு செய்ய பதிவு செய்து கொள்ளும்போது எந்த அடையாள அட்டையை அளிக்கிறீர்களோ, நேரில் வரும்போதும் அதையே கொண்டு வரவும்.


3-நாள் முன்பாக வரமுடியாவிட்டால் மஹாசிவராத்திரிக்கு நான் தன்னார்வத் தொண்டு செய்யமுடியாமல் போகுமா?

மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கு வரும் அனைவருக்குமே தன்னார்வத் தொண்டு செய்ய நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். தன்னார்வத் தொண்டர்களின் ஈடுபாடும், முழுமனதுடனான பங்களிப்பும் இல்லாமல் இந்த விழா இந்தளவிற்கு பிரம்மாண்டமாக, பிரமாதமாக நடக்க முடியாது. ஆனால் அனைவருக்கும் தங்கும் வசதி ஏற்பாடு செய்ய ஈஷா யோகா மையத்தில் போதுமான இடவசதி இல்லை. அதனால் பிப்ரவரி 17ற்குப்பின் வருபவர்களுக்கு பொதுவான தங்கும்வசதிகளை வழங்க எங்களால் முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


வரும் தன்னார்வத் தொண்டர்களுக்கு தங்கும் வசதி எங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
மஹாசிவராத்திரிக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்படும் தற்காலிக தங்கும் வசதிகளில் தன்னார்வத் தொண்டர்கள் தங்குவதற்கு இடமளிக்கப்படும். இதை கவனத்தில் கொண்டு தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த தற்காலிக இடத்தில் ஓரளவேனும் வசதியாகத் தங்குவதற்கு நீங்கள் என்னென்ன பொருட்கள் கொண்டுவர வேண்டியிருக்கும் என்பதை, கேள்வி எண் 6ற்கான பதிலில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறோம். அதைப் பார்க்கவும்.

மஹாசிவராத்திரி இரவின் ஆன்மீக சாத்தியம் அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்றும், அந்த இரவின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்றும்தான் இப்படியொரு பிரம்மாண்டமான விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. அதிகமான மக்கள் வந்துபோகும் இதுபோன்ற சூழலில் உங்களுக்கு வழக்கமாகக் கிடைக்கும் வசதிகளையோ சௌகரியங்களையோ நீங்கள் எதிர்பார்க்க முடியாது என்பதை மனதில் கொண்டு, இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து, உங்களுக்கு ஏற்படும் சௌகரியக் குறைவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எங்களுக்கு உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.


நாங்கள் படுத்துக்கொள்ள படுக்கைகள் வழங்கப்படுமா?
எவ்வித படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யும் சூழ்நிலை இங்கு இல்லை. அதனால் தன்னார்வத் தொண்டர்கள் அவரவருக்குத் தேவையான படுக்கைகளை கையோடு எடுத்து வருமாறு கேட்டுக் கொள்கிறோம். யோகா மேட், பாய் / மெத்தை (தேவைப்பட்டால்), போர்வை, தலையணை என உங்களுக்குத் தேவையானதை நீங்களே எடுத்து வரலாம். டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை இரவில் ஓரளவு குளிரும், பகல் நேரம் ஓரளவு வெதுவெதுப்பாகவும் இருக்கும். இங்கிருக்கும் வெப்பம் 17°C முதல் 35°C வரை இருக்கும். அதனால் குளிரைத் தாங்குமளவுக்கு போர்வையோ, ஸ்வெட்டரோ உங்களுக்குத் தேவையானதை எடுத்துவரவும்.

என்னென்ன பொருட்கள் நான் எடுத்து வரவேண்டும்?
கவனிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வந்தாலும், அவரவருக்குத் தேவையான பொருட்களை அவரவரே எடுத்துவருமாறு கேட்டுக் கொள்கிறோம். உங்களுக்கான தங்கும் வசதிகள் வெவ்வேறு இடத்தில் அமையலாம்.

 • நீங்கள் எடுத்துவர வேண்டிய பொருட்கள்:
 • சோப்பு, சீப்பு, பிரஷ், டூத்பேஸ்ட் போன்ற சாமான்கள்
 • டார்ச் லைட்
 • குடை
 • கொசு விரட்டும் க்ரீம்
 • படுக்கை, தலையணை
 • தேவையான உடைகள்
 • குளிர்தாங்கும் போர்வை, ஸ்வெட்டர், சாக்ஸ் போன்றவை
 • நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் மருந்துகள் (மற்றும் தலைவலி, காய்ச்சல், உடல் வலி, வயிற்றுவலி, வாந்தி, பேதி போன்ற பிரச்சினைகளுக்கான மருந்துகள், வலி நீக்கும் தைலம் போன்றவையும்)
 • உங்கள் பெட்டிகளை பூட்டி வைக்க பூட்டும், சாவியும்
 • மொபைல் ஃபோன் சார்ஜ் செய்ய பவர் பேங்க்
 • யோகா மேட்
 • ஸ்லீப்பிங் பேக் (படுக்கை / போர்வை என எல்லாம் சேர்ந்த தூங்கும் வசதி பைகள் முடிந்தால்)
 • தண்ணீர் பாட்டில்
 • வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கேப்

அங்கு பாதுகாப்பாக இருக்குமா?
ஈஷா யோக மையம் எப்போதுமே தங்குவதற்கு பாதுகாப்பான இடம். இங்கு 24 மணிநேரமும் எல்லா நாட்களும் காவலுக்கு காவலர்கள் இருக்கிறார்கள். என்றாலும் இதுபோன்ற பிரம்மாண்டமான விழாக்கள் நடக்கும்போது, உங்கள் பொருட்களை பாதுகாப்பதில் நீங்களும் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தங்கும் இடவசதியை நீங்கள் பலருடன் பகிர்வீர்கள் என்பதால் விலைமதிப்பான பொருட்கள், எலக்ட்ரானிக் சாமான்கள், நகைகள் ஆகியவற்றை நீங்கள் எடுத்து வரவேண்டாம். இதுதவிர்த்து நீங்கள் எடுத்துவரும் மற்ற பொருட்களை உங்கள் பெட்டிக்குள் பூட்டிவைத்து பாதுகாப்பாக வைக்கலாம்.

மொபைல் ஃபோன் சார்ஜ் செய்யும் வசதி உள்ளதா?
நீங்கள் தங்கும் இடத்தில் ஓரளவிற்கு சார்ஜ் செய்யும் வசதி இருக்கும். தயவுசெய்து உங்கள் மொபைல் ஃபோன்களை சார்ஜ்-ல் போட்டுவிட்டு வேறெங்கும் செல்லாதீர்கள். உங்களுக்கான மொபைல் ஃபோன் சார்ஜ் செய்யும் பவர் பேங்க் வைத்திருப்பது நல்லது.

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நான் ஈஷா யோக மையத்திற்கு எத்தனை நாட்கள் முன்பாக வரலாம்? விழா முடிந்து எத்தனை நாட்களுக்கு தங்குவதை நீட்டிக்கலாம்? அதற்கு முன்பாக நான் வரவேண்டும் என்றாலோ, அதற்குப் பின்பும் நான் தங்குவதை நீட்டிக்க விரும்பினாலோ நான் என்ன செய்யவேண்டும்?
குறைந்தபட்சமாக பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 23 வரை தன்னார்வத் தொண்டர்கள் ஈஷா யோக மையத்தில் வந்து தங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மஹாசிவராத்திரி வேலைகள் மிக அதிகமாக இருப்பதால் தன்னார்வத் தொண்டர்கள் ஜனவரி மாதமே வந்தாலும் உதவியாக இருக்கும்.

மஹாசிவராத்திரியின் போது தன்னார்வத் தொண்டர்கள் எங்கு அமர்ந்திருப்பார்கள்? பங்கேற்பாளர்களைப் போல் எங்களுக்கான இருக்கையை நாங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டுமா?
மஹாசிவராத்திரி அன்று தன்னார்வத் தொண்டர்கள் அமர்வதற்கு தனியாக இடம் ஒதுக்கப்படும். உங்களுக்கென நீங்கள் தனியாக இருக்கை பதிவு செய்து கொள்ளவேண்டாம்.

ஒரு தன்னார்வத் தொண்டராக செயலில் ஈடுபடும் அதேநேரம், எனக்குத் தேவையான இருக்கையை நான் முன்பதிவு செய்து கொள்ளலாமா? அப்படி பதிவு செய்து கொண்டால், அதற்கேற்ப அமர்ந்துகொள்ள எனக்கு அனுமதி இருக்குமா?

இந்த மஹாசிவராத்திரி விழாவை மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதில் தன்னார்வத் தொண்டர்களான நம் பங்கு மிகமிக முக்கியமானது. அன்றிரவு முழுவதும் தன்னார்வத் தொண்டர்களுக்கு வெவ்வேறு செயல்கள் செய்யும் பொறுப்பு வழங்கப்படும். மஹாசிவராத்திரிக்கு தன்னார்வத் தொண்டராக உங்களை அர்ப்பணிக்க முடிவு செய்தபின், அன்றிரவு முழுவதும்கூட நீங்கள் ஒரு தன்னார்வத் தொண்டராக செயல்படுவது மிகவும் சிறந்தது. ஒரு தன்னார்வத் தொண்டராக உங்களை சும்மா அர்ப்பணிப்பதாலேயே அன்றிரவை உணரும் வாய்ப்பு உங்களுக்கு பன்மடங்கு மேம்படும். இதற்கு மேலும் உங்களுக்கான இருக்கையை பதிவு செய்துகொள்ள நீங்கள் விரும்பினால், உங்கள் செயற்குழு ஒருங்கிணைப்பாளரிடம் கலந்தாலோசித்து நீங்கள் பதிவு செய்துகொள்ளலாம்.


குறிப்பிட்ட விதமான உடை அணியவேண்டும் என்று ஏதேனும் பரிந்துரை செய்கிறீர்களா?
பாரம்பரிய இந்திய உடைகள் அணிவது சிறந்தது. பொதுமக்கள் பலர் வந்துபோகும் இடம் என்பதால் யார் மனதையும் புண்படுத்தாத, நெருடாத விதத்தில் உடை அணிவது சிறந்தது. ஆண்கள், பெண்கள் இரு பாலருமே அணியும் உடைகள், அவர்கள் தோள்பட்டை, மேல் கை மற்றும் இடுப்பை மறைக்கும் விதமாகவும் கணுக்கால் வரை நீளமாகவும் இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேற்கத்திய உடை என்றால், கணுக்கால் வரையிலான கால்சட்டை (கேப்ரீஸ், ஷார்ட்ஸ் வேண்டாம்) மற்றும் மேல் கையை மறைக்கும் விதமான நீள சட்டைகள் அணியலாம். இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்ப்பது சிறந்தது. இது உங்களுக்கும் சௌகரியமாக இருக்கும், உள்ளூர் கலாச்சாரத்திற்கு மதிப்பு அளிப்பதாகவும் இருக்கும்.யக்ஷா மற்றும் மஹாசிவராத்திரி தினங்களில் இந்திய பாரம்பரிய உடைகள் அணிந்துகொண்டால் சிறப்பாக இருக்கும்.

துணிகளை துவைத்து அணியும் வாய்ப்புள்ளதா?
ஈஷா யோக மையத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருப்பதால், துணி துவைக்க வாய்ப்பிருக்காது. அதோடு தற்காலிக தங்கும் இடங்களில் துணி உளர்த்த வசதியோ, இடமோ இருக்காது என்பதால் நீங்கள் தங்கப்போகும் நாட்கள் முழுவதிற்கும் தேவையான துணிகளை எடுத்துவருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் தெரியாதவர்களும் தன்னார்வத் தொண்டராக பங்கேற்கலாமா?
.நிச்சயமாக

சக்கரை வியாதி, இருதய நோய், ஹெர்னியா போன்ற பிரச்சினை இருப்பவர்கள் தன்னார்வத் தொண்டு செய்யலாமா?
செய்யலாம். உங்களுக்குத் தேவையான மருந்துகளை மறக்காது உடன் எடுத்துவரவும்.

என் குடும்பத்தினர், விருந்தாளிகளை என்னுடன் அழைத்து வரலாமா?
தன்னார்வத் தொண்டர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள தங்கும் வசதியில், ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சிக்கு தீட்சை பெற்றவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவர். உங்கள் குடும்பத்தினர் மற்றும் விருந்தாளிகள் மஹாசிவராத்திரி விழாவிற்கு பதிவு செய்துகொண்டு இரவு முழுவதும் நடக்கும் விழாவில் பங்கேற்கலாம்.

என் குழந்தைகளையும் உடன் அழைத்து வரலாமா? இதில் பங்கேற்க குறைந்தபட்ச வயது வரைமுறை ஏதேனும் உள்ளதா?
விழா நடக்கும் சமயத்தில் உங்கள் குழந்தைகள் / சிறுவர்களை பார்த்துக்கொள்ளும் வசதி எதுவும் ஈஷா யோக மையத்தில் கிடையாது. அதனால் உங்கள் குழந்தைகள் வீட்டில் பத்திரமாக இருப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டு இவ்விழாவில் நீங்கள் கலந்துகொள்வது சிறந்தது.

என் வாகனத்தில் நான் வரலாமா? அங்கு பார்க்கிங் வசதி இருக்குமா?
பார்க்கிங் வசதி ஓரளவிற்கு உள்ளது. விழா ஏற்பாடுகளுக்கு உதவியாக அந்த சில நாட்கள் உங்கள் வாகனத்தை எங்களுக்கு கொடுத்து உதவ விரும்பினால், நீங்கள் அவ்வாறும் செய்யலாம்.

தேவையான மருத்துவ வசதிகள் உள்ளதா?
அடிப்படையான முதலுதவி மையம் இருக்கும். அருகாமையில் இருக்கும் மருத்துவமனை என்றால் அது 1-மணி நேர தொலைவில் இருப்பதுதான். அதுவும் மஹாசிவராத்திரி அன்று அவ்விடத்தில் இருக்கும் அதிகப்படியான போக்குவரத்து சமயத்தில் மருத்துவமனையை அடைவதற்கு இன்னும் அதிக நேரம் எடுக்கலாம். அருகில் இருக்கும் மருத்துக்கடை என்பது 8 கிமீ தொலைவில் உள்ளது. அதனால் உங்களுக்குத் தேவையான மருந்துகளை உடன் எடுத்து வாருங்கள்.

மஹாசிவராத்திரியை ஒட்டி ஏற்பாடு செய்யப்படும் பாரம்பரிய யோகா வகுப்பில் கலந்துகொண்டு, தன்னார்வத் தொண்டராகவும் செயல்பட முடியுமா?
முடியும். பாரம்பரிய யோகா வகுப்பில் கலந்துகொண்டு, நீங்கள் தன்னார்வத் தொண்டும் செய்யலாம்.மேலும் விவரங்களுக்கு, +91 83000 83111 எனும் எண்ணிலும் info@mahashivarathri.org எனும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளவும்.