நிகழ்ச்சி நிரல் – 2021

மஹாசிவராத்திரி – உற்சாகமாய் இரவு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. சத்குரு வழங்கும் சக்தி வாய்ந்த தியானங்கள், பிரபலமான கலைஞர்களின் பிரமிக்க வைக்கும் இசை நிகழ்ச்சிகள் என பல நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்தத் திருவிழாவில் இணையவழி மூலம் இந்த வருடம் இணையுங்கள்.

நன்னாளாம் மஹாசிவராத்திரியின் சுபமான இரவு வேளையில் பெரும் நற்பயனை பெற சூரியன் மறையும் அந்தி நேரம் தொடங்கி அடுத்த நாள் விடியல் வரை (உங்கள் நேர மண்டலத்தின் படி) இரவு முழுவதும் முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக வைத்து விழித்திருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரல் இந்திய நேரப்படி (IST) வழங்கப்பட்டுள்ளது.

மாலை 6:10

பஞ்சபூத கிரியா

மனித அமைப்பில் உள்ள ஐந்து மூலக்கூறுகளையும் சுத்தம் செய்யும் சக்தி வாய்ந்த செயல்முறை

மாலை 6:40

லிங்கபைரவி மஹா ஆரத்தி

லிங்கபைரவி உற்சவ மூர்த்தியின் அதிர்வான பரவசமான ஒரு ஊர்வலம். தேவியின் அருள்மழையில் திளைத்திருக்க ஒரு வாய்ப்பு.

இரவு 10:50

சத்குரு சொற்பொழிவு மற்றும் நள்ளிரவு தியானம்

சத்குருவின் சொற்பொழிவை தொடர்ந்து நள்ளிரவு தியானம் நடைபெறும். இந்த நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் மிக சக்தி வாய்ந்த தியான தீட்சையை சத்குரு அளிப்பார். அந்நாளில் நடைபெறும் நிகழ்வுகளில் அனைவரும் மிக ஆர்வமாக எதிர்நோக்கும் நிகழ்வு இது.

நள்ளிரவு 12:15

ஆதியோகி திவ்ய தரிசனம்

மனித சமூகத்துக்கு ஆதியோகி அளித்த அருட்கொடையைப் பற்றிய கண்கவர் ஒளி-ஒலி நிகழ்ச்சி

நள்ளிரவு 12:30 முதல் பின்னிரவு 2:15 வரை

சத்குரு சொற்பொழிவு மற்றும் கேள்வி-பதில், சம்போ தியானம்

சம்போ சிவனின் கனிவான வடிவம். “சம்போ” மந்திரம் ஒருவருக்கு வாழ்வில் புது பரிமாணத்தை திறக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

பின்னிரவு 3:35

பிரம்ம முகூர்த்த மந்திரம்

பிரம்ம முகூர்த்தம் – இரவின் கடைசி பகுதியாக வரும் இந்த வேளை ஆன்மீக பயிற்சிகளை செய்ய மிகவும் உகந்த நேரம். ஒருவர் தன் உடல்சார்ந்த தன்மையைக் கடக்க விரும்பினால் இதுவே சரியான தருணம்.

இரவு முழுவதும் தொடரும் நிகழ்ச்சிகள்

பிரபலமான பல கலைஞர்கள் வழங்கும் இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் உங்களை இரவு முழுவதும் விழிப்போடும் துடிப்பாகவும் வைத்திருக்கும். இந்த நள்ளிரவின் நல்வாய்ப்பினால் நீங்கள் பெரிதும் பயனடைய உங்களுக்கு உதவும்.

detail-seperator-icon