நன்றி ஆசிரியர் அவர்களே!

#ThankyouTeacher

#ஆசிரியர்களுக்கு_அர்ப்பணிப்பு / #வழிகாட்டிகளுக்கு_நன்றி!

பள்ளி நாட்கள் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்கமுடியாததாகவே இருக்கும். அதிலும், உங்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒரு தூண்டுகோலாய் இருந்த ஆசிரியர் நிச்சயம் நினைவைவிட்டு நீங்காதவராகவே இருப்பார்! வேதியியலிலோ அல்லது இசைப் பாடமோ அல்லது கணிதமோ… உங்களுக்கு உத்வேகம் தந்த ஆசிரியரை இத்தருணத்தில் எண்ணிப்பாருங்கள்! நீங்கள் குழம்பி நின்ற வேளையில் உங்களை கரம்பிடித்துச் சென்று உலகத்தை அறிமுகப்படுத்தியவர்கள் மற்றும் அந்த இளம் வயதில், பிரபஞ்சத்தை வெல்லும் உங்கள் வேகத்திற்கும் கனவிற்கும் ஊக்கமளித்து பாதை அமைத்தவர்கள்… யார் யார்?

நமக்கான வாயில் கதவை திறந்து வைத்து, ஒரு புது உலகினை வழங்கியவர்களை நம்மால் நிச்சயம் மறப்பதற்கு இயலாதல்லவா?! பெற்றோர்களாகவோ அல்லது ஆசிரியர்களாகவோ இருந்து, அவர்கள் ஒரு வழிகாட்டியாக, அவர்களின் சிறப்பான முன்னுதாரணங்கள் மூலம் நம் மனம் கவர்ந்தனர். சிலர் வரலாற்று நிகழ்வுகளை ஆர்வத்தை தூண்டும் கதைகள் மூலமாக வழங்கினர்; சிலர் வார்த்தைகளை கவிதையாக வடித்து தந்தனர்; சிலர் இசைக்குறிப்புகளை இனிய பாடல்களாக பரிணமிக்கச் செய்து கற்பித்தனர். உங்களுக்கு அப்படியரு மனிதரை தெரியுமா?

ஆதியோகி பிரதிஷ்டை நிகழ்வை கொண்டாடும் விதமாக, நம்முடைய வாழ்வை மாற்றியமைத்தவர்களுக்கும், தங்கள் கற்பித்தலால் நம்மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கும் உங்கள் நன்றிகளை தெரிவிக்க அன்புடன் அழைக்கிறோம்!

அதுபோன்ற மறக்கமுடியாத மனிதர்களை நினைவுகூறும் வகையில், உங்களது வெளிப்பாட்டினை ஒரு வீடியோவாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ நீங்கள் பதிவு செய்யலாம். நாங்கள் அதனை ஒருங்கிணைத்து, அனைத்து ஆசிரியர்களுக்கும் குருக்களுக்கும் ஓர் அர்ப்பணிப்பாக சமூக வலைதளத்தில் பதிவிடுகிறோம்!

#யோக அறிவியலை முதன்முதலில் உலகிற்கு வழங்கியருளிய ஆதியோகிக்கு நன்றி வெளிப்படுத்தும் ஓர் முயற்சி.


வீடியோ பதிவேற்றம் / புகைப்படம் / ட்விட்டரில் உங்கள் ஆசிரியருக்கு நன்றிகூறும் செய்தி! / முகநூலில் ஹேஷ் டேக்  #ஆசிரியர்களுக்கு_அர்ப்பணிப்பு