சவாலான இந்நேரத்திற்கான கருவிகள்: உங்கள் உயிர்ப்பையும் சமநிலையையும் மேம்படுத்துவதற்கான கருவிகள். இப்போதே உணர்ந்து பாருங்கள்!

சவாலான இந்நேரத்திற்கான கருவிகள்: உங்கள் உயிர்ப்பையும் சமநிலையையும் மேம்படுத்துவதற்கான கருவிகள்.
சவாலான இந்நேரத்திற்கான கருவிகள்: உங்கள் உயிர்ப்பையும் சமநிலையையும் மேம்படுத்துவதற்கான கருவிகள்.

Maha Annadanam

லட்சக்கணக்கான அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கும் செயலில் துணைநிற்க வாருங்கள்!

உலகம் முழுக்க உள்ள மக்களிடத்தில் உணவிற்கும் வாழ்விற்கும் இடையில் ஒரு மிக நெருக்கமான பிணைப்பு இருந்துள்ளதை பழங்கால வரலாறுப் பதிவுகளிலிருந்து நாம் அறிந்துகொள்ளமுடியும். “அன்னதானம்,” எனும் வார்த்தை உணவை (அன்னம்) மற்றவர்களுக்கு வழங்குதல் அல்லது அர்ப்பணித்தலை (தானம்) குறிக்கிறது.

இந்தியக் கலாச்சாராத்தில், அன்னதானம் வழங்குவது பாரம்பரியமாகவே புனிதமான ஒரு செயலாக கருதப்பட்டு வருகிறது. இந்திய துணைக்கண்டத்தின் அனைத்து சமூகங்களிலும், பண்டிகையோ அல்லது கொண்டாட்டமோ எதுவாயினும் அன்னதானம் அல்லது பிரசாதம் வழங்கப்படாமல் அந்நிகழ்வு நிறைவுபெறாது.

நம் முன்னோர்களுக்கும், தேவர்களுக்கும், சந்நியாசிகளுக்கும், வயதுமுதிர்ந்தவர்களுக்கும், புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் உணவு அர்ப்பணிப்பது மட்டுமல்லாமல் குடும்ப உறவுகள், நண்பர்கள், விருந்தினர்கள் மற்றும் யாரெல்லாம் பசியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் உணவு அர்ப்பணிக்கும் நாம், விலங்குகளுக்கும் சேர்த்தே உணவு படைக்கிறோம்.

இத்தகைய கலாச்சாரத்தினால்தான், பல்லாயிரம் ஆண்டுகளாக யோகிகள், துறவிகள் மற்றும் சாதுக்கள் போன்ற அனைவரும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு பயணித்து, ஆன்மீக அறிவியலை தொடர்ந்து பரப்பிவருவது சாத்தியமாகி இருக்கிறது.

ஈஷா யோக மையத்தில் இரவுமுழுக்க நிகழும் மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கு வருகைதரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானத்திற்கு பங்களிக்கும் வாய்ப்பு உங்களுக்கும் உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.