கலைஞர்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள்

நாட்டின் தலைசிறந்த கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கலையுள்ளம் கொண்ட அன்பர்கள் ரசித்து மகிழவும் ஈஷாவின் யக்ஷா மற்றும் மஹாஷிவராத்திரி கொண்டாட்டங்கள் வாய்பாக அமைந்துள்ளன.

நம் தேசத்தின் தொன்மையான இசை, நடன கலை வடிவங்களின் தனித்தன்மை, தூய்மை, பன்முக தன்மையை பாதுகாத்து வளர்க்கும் முயற்சியாக ஆண்டுதோறும் நடக்கும் இந்த கலை திருவிழாவில், பாரத தேசத்தின் பழம்பெரும் கலைவடிவங்கள் அவற்றுக்கே உரிய தனிச்சிறப்புமிக்க துடிப்புடனும், கவித்துவத்துடனும் வழங்கப்படுகிறது.

நம் பாரம்பரிய கலை வடிவங்களில் பொதிந்துள்ள ஆழத்தையும், மென்மையையும், ரசித்து உணரும் வாய்ப்பாக அமைந்துள்ள யக்ஷா திருவிழாவில் கலந்துகொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்.

detail-seperator-icon

மஹாசிவராத்திரி

பல்லாயிரம் ஆண்டுகளாய் பாரதத்தில் உருவான வெவ்வேறு கலை வடிவங்கள், நம் பரந்து விரிந்த பண்பாட்டின் வெளிப்பாடாக இருக்கின்றன. ஒருவருக்குள் ஆழ்ந்த ஆன்மீகத் தாக்கத்தினையும் ஏற்படுத்துகின்றன. சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், வண்ணமயமான கலாச்சார நடன நிகழ்ச்சிகளுடன் ஈஷாவின் சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் மஹாசிவராத்திரி இரவு முழுவதும் இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் தனித்தன்மை வாய்ந்த சக்தி நிலையை பயன்படுத்தி கொள்ளவும், நாம் விழித்திருக்கவும் துணைபுரிகின்றன.

திரு.சோனு நிகம் அவர்கள் (சிறப்பு விருந்தினர் கௌரவ நிகழ்ச்சி)

திரு.சோனு நிகம் அவர்கள் ஹிந்தி திரைப்படங்களின் பின்னணிப் பாடகராக புகழின் உச்சத்தை எட்டியவர். மிக இனிமையான குரலும் அதீத திறனும் பெற்ற சோனு நிகம் அவர்கள், சமீபத்திய காலத்தில் இருக்கும் மிகச் சிறந்த பாடகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் பெற்றிருக்கும் பல விருதுகளில் குறிப்பிடத்தக்கது, இசையுலகில் அவரது தலைசிறந்த படைப்புகளை பாராட்டி அவருக்கு வழங்கப்பட்ட “ஸ்வராலயா யேசுதாஸ்” விருது மற்றும் “கல் ஹோ நா ஹோ” படத்திற்குக் கிடைத்த தேசிய அளவிலான சிறந்த பாடகருக்கான விருது.

திரு.டேலர் மேஹண்டி அவர்கள்

திரு. டேலர் மேஹண்டி அவர்கள் ஒரு புகழ்பெற்ற இசைகலைஞர் மற்றும் மேடைக் கலைஞர். இசைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், மிக இள வயதிலேயே இந்திய பாரம்பரிய இசையின் ராகம், ஷப்தம் ஆகியவற்றைப் பயில ஆரம்பித்தார். இவரின் பல பாடல்கள் உலக பிரசித்தி பெற்றவை. அதில் இன்றளவிலும் பிரபலமானவை, “துனக் துனக் துன்” மற்றும் “போலோ தா ரா ரா”

சீன் ரோல்டன் மற்றும் நண்பர்கள்

சீன் ரோல்டன் என்று அறியப்படும் திரு. ராகவேந்திரா அவர்கள், தமிழ் திரைப்படத் துறையில் ஒரு பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருக்கிறார். அவரது முதல் இசையமைப்பு முயற்சியிலேயே பல தரப்பிலும் பாராட்டுக்களை வென்றவர் இவர். கர்நாடக இசை, தனிப்பட்ட இசை, திரைப்பட இசை என பலவிதமான இசைமுறைகளை பின்பற்றும் இவர், “சீன் ரோல்டன் மற்றும் நண்பர்கள்” எனும் இசைக்குழு அமைத்து தம் நண்பர்களுடன் தமிழ் இசை நிகழ்ச்சிகளையும் வழங்கிவருகிறார்.

சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா

சத்குருவின் வழிகாட்டுதலுடன், தங்கள் தீராத ஆர்வத்தாலும், தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் விதமாகவும் “இசைக் கலைஞர்களாக” இணைந்திருக்கும் ஈஷாவின் சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர், வெவ்வேறு விதமான பின்னணியில் இருந்து வந்தவர்கள்.

உலகின் பல்வேறு இசை வடிவங்கள் இணைந்ததாக, எல்லைகளை, கலாச்சாரங்களை கடந்து அனைவரையும் ஈர்க்கும் ஈஷாவின் இசை, மனதிற்கு இதமளித்து, நுட்பமான அமைதியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்து இருக்கும் எல்லையற்ற அமைதியை தொடுவதன் மூலம், அவரின் உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணையாக, அடிப்படையாக அமைகிறது.

detail-seperator-icon

யக்ஷா 2018
பிப்ரவரி 10 – 12, 2018: மாலை 6.50 – 8.30

பாரத புராணங்களில், சூட்சும உருவங்களாய் சித்தரிக்கப்பட்ட யட்சர்கள் பெயரால் இந்நிகழ்ச்சி யக்ஷா என அழைக்கப்படுகிறது. மஹாசிவராத்திரிக்கு வரவேற்பாக நடக்கும் இந்த துடிப்பான கலை விழாவில் இந்த ஆண்டு கலந்துகொண்டு, நம் ரசனைக்கு விருந்தளிக்கும் கலைஞர்கள்


திரு. ராகேஷ் சௌராஸியா
ஹிந்துஸ்தானி புல்லாங்குழல் இசை
பிப்ரவரி 10

புகழ்பெற்ற பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா அவர்களின் சிஷ்யனும், அவரின் சகோதரர் மகனுமான திரு.ராகேஷ் சௌராஸியா அவர்கள், தன் புல்லாங்குழல் இசைக்கு சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்றிருப்பது மட்டுமல்ல பல பிரபலமான பாடல்களையும் இயற்றியுள்ளார். பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா அவர்களின் “மிகத் திறமைவாய்ந்த சிஷ்யன்” என்று இவர் அறியப்படுகிறார்.


விதூஷி திருமதி. ஷ்ருதி சடோலிகர் கட்கர்
ஹிந்துஸ்தானி இசை
பிப்ரவரி 11

திருமதி. ஷ்ருதி சடோலிகர் கட்கர் மிகப் பிரபலமான மேடை இசைக் கலைஞர். பல ஆண்டுகளாக தம் குரலின் இனிமையால் மக்களைக் கவர்ந்துவரும் இவர், இசைக் கலையின் அறிஞராகவும் திகழ்கிறார். இசைக் கலைஞர்களை கௌரவிக்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான “சங்கீத் நாடக் அகடமி” விருதினையும் இவர் பெற்றிருக்கிறார்.


திரு.சித்ரவீணா N ரவிகிரண்
சித்ரவீணை இசை
பிப்ரவரி 12

சித்ரவீணை வாத்தியத்தின் மேதாவி என போற்றப்படும் திரு.சித்ரவீணா N ரவிகிரண், 800ற்கும் மேற்பட்ட இசைப்பாடல்களை இயற்றியுள்ளார். அதுமட்டுமல்ல இசைக் கலைஞர்களை கௌரவிக்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான “சங்கீத் நாடக் அகடமி” விருதினை இள வயதிலேயே பெற்ற பெருமையும் இவருக்கு உண்டு.

சென்ற வருட கலைஞர்கள்

பண்டிட் ஜஸ்ராஜ்

பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா

உஸ்தாத் அம்ஜத் அலிகான்

சிவமணி

சுதா ரகுநாதன்