கிடைநிலையில் இருந்த விலங்கினங்களின் முதுகுத்தண்டு வடம், நேர் நிலைக்கு மாறியதே பரிணாம வளர்ச்சியில் மாபெரும் படி என்று உயிரியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இதன் பின்புதான் புத்திசாலித்தனம் மலர்ந்தது.மஹாசிவராத்திரி அன்று இயற்கையிலேயே சக்திநிலை மேல் நோக்கி தூண்டப்படுகிறது. முறையான மந்திர உச்சாடனம் மற்றும் தியானத்தின் துணையுடன் தெய்வீகத்தை இன்னும் ஒரு படி நெருங்கும் வாய்ப்பு நம் அனைவருக்குமே உள்ளது. வாழ்க்கையில் முறையான ஆன்மீக சாதனைகள் என்று எதிலும் ஈடுபடாத ஒருவருக்குள்ளும் மஹாசிவராத்திரி அன்று சக்தி நிலையில் தூண்டுதல் ஏற்படுகிறது.

யோக சாதனையில் ஈடுபாடுள்ள ஒருவருக்கு, தம் முதுகுதண்டுவடத்தை நேராக வைத்து கொள்வது முக்கியமானது. இதையே வேறுவிதமாக இரவு முழுவதும் கண் விழித்து இருக்க வேண்டும் என்கிறோம்.

மஹாசிவராத்திரி, ஆன்மீக வாழ்வில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, உலகியல், குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கும் மிக முக்கியமானது. குடும்ப வாழ்வில் இருப்பவர்கள் மஹாசிவராத்திரியை சிவனின் திருமண நாளாக கொண்டாடுகிறார்கள். லட்சிய வாழ்வில் இருப்பவர்களால் சிவன் தன் எதிரிகளை வெற்றி கொண்ட நாளாக பார்க்கப்படுகிறது. ஆனால் யோக கலாச்சாரத்தில், நாம் சிவனை கடவுளாக பார்ப்பதில்லை, யோக கலையை முதன் முதலில் வழங்கிய குருவாக, ஆதிகுருவாகவே பார்க்கிறோம். “ஷிவா” என்ற சொல்லுக்கு “எது இல்லையோ அது” என்று பொருள். உங்கள் “நான்” எனும் தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, சிவனை அவர் இயல்புக்கு உங்களிடம் இருக்க அனுமதிக்க முடிந்தால், வாழ்க்கையை முற்றிலும் புதிய பார்வையுடன், தெளிவாக பார்க்கும் வாய்ப்பு பிறக்கும்.