வெளிசூழலில் நல்வாழ்வு உருவாக்கிக் கொள்ள தொழில்நுட்பம் இருப்பதுபோல், உள்நிலையில் நல்வாழ்வை உருவாக்கிக் கொள்வதற்கும் விஞ்ஞானம் தொழில்நுட்பத்தில் ஒரு முழு பரிமாணமே உள்ளது –சத்குரு
இன்னர் இஞ்சினியரிங்
வெளிசூழலில் நல்வாழ்வு உருவாக்கிக் கொள்ள தொழில்நுட்பம் இருப்பதுபோல், உள்நிலையில் நல்வாழ்வை உருவாக்கிக் கொள்வதற்கும் விஞ்ஞானம் தொழில்நுட்பத்தில் ஒரு முழு பரிமாணமே உள்ளது –சத்குரு
ஈஷா யோகா இல்லாத ஒரு வாழ்வை என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது.
– கிறிஸ் ராடோ, புகழ்பெற்ற ரேஸ் கார் டிரைவர்
சத்குருவின் "ஈஷா யோகா" என் வாழ்வில் மிக ஆழமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் அனுபவங்களையும், ஆனந்தத்தையும், பாடங்களையுன் எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி.
– டிஅர்க்ஸ் பென்ட்லீ, பாடகர் மற்றும் கவிஞர்
வெவ்வேறு பதிவுமுறைகளில் படமெடுக்கப்பட்ட வீடியோக்களை ஒன்றிணைக்கும் தொழில்நுட்ப ரீதியாக மிக சிக்கலான வேலை, கதைக்குள் கதை என பல நிலைகளில் விரியும் பிரம்மாண்டமான கதை, 1200 கோடி பொருட்செலவில் உருவான படம். இப்படிப்பட்ட படத்தைத் தொகுப்பது மிக வேலைப்பழுவான மன அழுத்தம் தரும் வேலை. இதற்கு நடுவில் நான் இத்தனை அமைதியாக எப்படித்தான் வேலை செய்கிறேனோ என்று என் படக்குழுவினர் அதிசயப்பட்டார்கள். ஈஷா பயிற்சிகளை நான் செய்து கொண்டிருக்காவிட்டால் இப்படத்தை என்னால் தொகுத்திருக்க முடியாது.
– ஜான் லீ, இன்செப்ஷன் திரைப்படத்தின் தொகுப்பாளர்.
மன அழுத்தம் ஒரு பாதிப்பாக இல்லாமல் அன்றாட வாழ்வை நிதானமாக, தெளிவாக அணுகும் திறனை சத்குரு வழங்கும் கண்ணோட்டமும் பயிற்சிகளும் வழங்குகிறது. என் வாழ்வில் எப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டாலும் அமைதியாக, நிதானமாக அதை எதிர்கொள்ளும் என் பக்குவம் பன்மடங்காக உயர்ந்துள்ளது.
– ரவி வெங்கடேசன், எழுத்தாளர் மற்றும் முன்னாள் மைக்ரோசாஃப்ட் இந்தியா தலைவர்
சத்குரு வழங்கும் சக்திவாய்ந்த ஈஷா யோகா வகுப்பு என் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றியுள்ளது. இந்த வகுப்பு எனக்கு முடிவற்றதொரு பயணத்தை நோக்கிய மாபெரும் படியாக அமைந்தது.
– டாக்டர். கிரண் பேடி, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி மற்றும் இந்நாள் மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
நான் எதைத் தொலைத்தேனோ அதை மீண்டும் பெற்றுவிட்டேன். இப்போது அனைத்தும் புரிகிறது. எத்தனை வெற்றிகள், விருதுகள், பணம், உறவுகள் கிடைத்தாலும் அவை எதுவும் கொடுக்க முடியாத மிக ஆழமான அனுபவத்தை இது எனக்குக் கொடுத்திருக்கிறது. இவ்வுலகில் சத்குரு வாழும் அதே நேரத்தில் நானும் வாழ்வது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.
– கங்கனா ரனாவத், நடிகை
நீங்கள் மட்டும் தயாராக இருந்தால், அனைத்திற்கும் உயரிய இந்த பிரபஞ்ச புத்திசாலித்தனத்தைப் பிரதிபலிக்கும் உங்கள் உள்-புத்திசாலித்தனத்தை தட்டி எழுப்பும் ஒரு கருவியாக இந்த ஈஷா யோகா செயல்படும்.
– தீபக் சோப்ரா, எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் மாற்று மருந்து பரிந்துரைப்பாளர்
தெரியவேண்டிய அனைத்துமே உங்களுக்குள்தான் இருக்கிறது என்பதை இவ்வகுப்பு அழுந்தச் சொல்கிறது. என்னுடைய 25 கால தொழில் வாழ்க்கையில் இத்தனை அழகானதொரு வகுப்பில் நான் பங்கேற்றதில்லை. இவ்வகுப்பு தனிமனித வளர்ச்சி, தலைமை பொறுப்புணர்வு மேம்பாடு ஆகியவற்றை இன்னும் ஆழமாக உணர வழிசெய்கிறது.
– அசோக் கெம்கா, ஐ.ஏ.எஸ் அதிகாரி, ஹரியானா மாநில செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குனர்
இன்றைய உலகில் அமைதியை நிலைநாட்டும் மனிதரா சத்குரு? ஆம், ஆனால் அது மேலோட்டமான ஒரு வாக்கியம் மட்டும்தான். உண்மையில், வாக்கியங்கள் தாண்டி, அன்பு தாண்டி, வார்த்தைகள் தாண்டி, ஏன் ஏக்கத்தையும் தாண்டி, காலத்திற்கு அப்பாற்பட்ட ஏதோவொன்றிற்கான நுழைவாயிலாய் சத்குரு இருக்கிறார்.