சத்குருவுடன் ஈஷா யோகா, சென்னை 2019 - செலுத்திய பணத்தை திரும்பப்பெறுவது சம்பந்தமான விதிமுறைகள்

 1. "குழு பதிவு சலுகை" மூலம் ஒரு குழுவாக பதிவு செய்திருந்தால், அக்குழுவில் இருக்கும் தனிப்பட்ட பங்கேற்பாளர்(கள்) பதிவுப் பணத்தை திரும்பப் பெறுவது சாத்தியமில்லை. காவல்துறை மற்றும் ஆயுதப்படை பிரிவின் கீழ் விண்ணப்பிப்போர், ரத்துசெய்யும் பட்சத்தில் பணம் திருப்பிக்கொடுக்கப்பட இயலாது.
 2. If a refund request is received on or before 30 th November 2019, 50% of the regular fee (fee with no discount) for the registered category will be retained and the rest will be refunded. For people who have registered under student discount, 50% of the actual amount paid will be refunded.
 3. நவம்பர் 30, 2019 ற்குப்பின் முன்பதிவு ரத்துசெய்ய கோரிக்கை வைத்தால், பணம் திரும்பப்பெற முடியாது.
 4. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற முடியாது, ஆனால் ஈஷாவின் வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க விருப்பம் என்றால், இப்பணத்தை அந்நிகழ்ச்சிக்கான பதிவுக் கட்டணமாக மாற்றிக்கொள்ளலாம் - ஆனால் அது சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியாக இருக்கவேண்டும், கீழிருக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டும் இருக்கவேண்டும். அதோடு இந்தக் கோரிக்கையை நவம்பர் 30, 2019ற்குள் நீங்கள் எங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இது சம்பந்தமான நிபந்தனைகள்:
  • a) நீங்கள் பணம் செலுத்தியற்கான ரசீதில் இருக்கும் தேதியில் இருந்து 6-மாத காலத்திற்குள் வேறேதேனும் ஒரு ஈஷா நிகழ்ச்சிக்கு (கீழே குறிப்பிடப் பட்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும்) அந்த ரசீதை பயன்படுத்தலாம்.
  • b) நீங்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சியில் இன்னும் இருக்கைகள் மீதமிருந்தால், அதில் பங்குபெற நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
  • c) அந்த ரசீதை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும். அதை வேறொருவரின் பெயருக்கு மாற்றி உபயோகிக்க முடியாது.
  • d) இந்த ரசீதை கீழ்காணும் நிகழ்ச்சிகளுக்கு (ரசீது கொடுக்கப்பட்ட 6 மாத காலத்திற்குள்) பயன்படுத்தமுடியும். ஒருவேளை நீங்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சிக்கான கட்டணம், சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சிக்கு நீங்கள் செலுத்திய கட்டணத்தைவிட அதிகம் என்றால், மீதமிருக்கும் கட்டணத்தையும், மீண்டும் பதிவு செய்வதற்கான கட்டணத்தையும் நீங்கள் செலுத்த வேண்டும்.
   1. ஈஷா யோகா 7-நாள் வகுப்பு (தமிழ்)
   2. இன்னர் இஞ்சினியரிங் 7-நாள் வகுப்பு (ஆங்கிலம்)
   3. இன்னர் இஞ்சினியரிங் 4-நாள் வகுப்பு (ஆங்கிலம்)
   4. யோகாசனா
   5. சூர்ய க்ரியா
   6. அங்கமர்த்தனா
 5. நவம்பர் 30, 2019 ற்குப்பின் இந்த கோரிக்கையை முன்வைத்தால், அந்த ரசீதை வேறெந்த ஈஷா யோகா நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்த முடியாது.
 6. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளில் மாற்றம் தேவையிருப்பின் ஈஷா யோகா நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் அதில் திருத்தம் செய்துகொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையிலும், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளை பொறுத்தவரையிலும், "சென்னை" என்பது சென்னை மாநகரத்தையும் அதைச் சுற்றி இருக்கும் இடங்களான ஊத்துக்கோட்டை, அரக்கோணம், செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் வரை இருக்கும் இடங்களையும் உள்ளடக்கும்.