சத்குருவுடன் ஈஷா யோகா

டிசம்பர் 18-19, 2019, சென்னை
( Registrations are closed )
* இந்த நிகழ்ச்சி தமிழில் நடைபெறும்
** டிசம்பர் 18, காலை 9 மணி முதல்  காலை 11 மணி வரை நேரடியாக நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்று பதிவு செய்யமுடியும்.
 

சத்குருவுடன் ஈஷா யோகா

டிசம்பர் 18-19, 2019, சென்னை
( Registrations are closed )
* இந்த நிகழ்ச்சி தமிழில் நடைபெறும்
** டிசம்பர் 18, காலை 9 மணி முதல்  காலை 11 மணி வரை நேரடியாக நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு சென்று பதிவு செய்யமுடியும்.
சத்குருவிடம் இருந்து நேரடியாக யோகப் பயிற்சி பயில இது ஒரு அரிய வாய்ப்பு. உங்கள் வாழ்வில் ஆரோக்கியம், சிந்தனைத் தெளிவு மற்றும் ஆனந்தத்தை ஸ்தாபித்துக் கொள்ள இந்த 21-நிமிட பயிற்சியை கற்றுக்கொள்ளுங்கள்!
Border Image
  • மாணவர்கள், காவல் துறை மற்றும் ஆயுதப்படை பிரிவினருக்கு 50% சிறப்பு கட்டண சலுகை, தாமிரபரணி பிரிவில் உள்ளது (நிபந்தனைகளுக்கு உட்பட்டது).
  • இந்நிகழ்ச்சி தமிழில் நடைபெறும்.
  • 'வைகை' எனும் ஒரு புதிய இருக்கைப் பகுதிக்கான பதிவு தற்போது துவங்கியுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.2000/
  • ஈஷா யோகா நிகழ்ச்சி (சத்குருவுடன் இன்னர் இஞ்சினியரிங் முழுமை வகுப்பு) டிசம்பர் 21 - 22ல் ஆங்கிலத்திலும் நடைபெறுகிறது.
  • எங்களைத் தொடர்புகொள்ள / sadhguru-in-chennai@ishayoga.org / உங்கள் கேள்விகளை இங்கே சமர்ப்பிக்கலாம்.
  • சத்குருவுடன் ஈஷா யோகா நிகழ்ச்சியில் (டிசம்பர் 18-19) பங்கேற்பவர்களுக்கு, OYO இந்தியா நிறுவனம் தங்குமிடத்திற்கான கட்டணத்தில் பிரத்யேக சலுகையை வழங்குகிறது. மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்: 8527362895.
பலன்கள்
Border Image
சத்குரு வடிவமைத்திருக்கும் இந்த ஈஷா யோகா வகுப்பில் பல பலன்கள் கிடைக்கும். அதில் ஒரு சில:
icon
அன்றாட வாழ்வில் நாள்முழுவதும் புத்துணர்வோடு விழிப்பாக செயல்படமுடியும்
icon
அடுத்தவரோடு பழகுவது எளிதாகும், உறவுகளில் நல்லிணக்கம் மேம்படும்
icon
சிந்தனையில் தெளிவு, உணர்ச்சியில் சமநிலை, செயல்திறன் அதிகரிப்பு ஆகியவை கிடைக்கப் பெறும்
icon
மனஅழுத்தம், பயம் மற்றும் கவலையில் இருந்து விடுபடமுடியும்
icon
நாட்பட்ட நோய்களான: ஒவ்வாமை, தூக்கமின்மை, இரத்தஅழுத்தம், உடற்பருமன், சர்க்கரை வியாதி, முதுகுவலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
icon
உள்நிலையில் அமைதி, ஆனந்தம், நிறைவை உணரலாம்.
( Registrations are closed )

தேவையான அடிப்படைத் தகுதி

Border Image
  • பங்கேற்பாளர்களுக்கு குறைந்தபட்சம் 15 வயது ஆகியிருக்க வேண்டும்.

நிகழ்ச்சி விபரம்

  • நாள் 1: டிசம்பர் 18, 2019, புதன்கிழமை மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை
  • நாள் 2: டிசம்பர் 19, 2019, வியாழக்கிழமை காலை 7:30 மணி முதல் இரவு 8 மணி வரை
இரண்டு நாளும் வருவது அவசியம். 15 அல்லது 15 வயதுக்குமேல் இருப்பவர்கள் கலந்துகொள்ளலாம்

மேலும் தகவல்களுக்கு

அலைபேசி: +91 8300037000
மின்னஞ்சல்:
sadhguru-in-chennai@ishayoga.org

நடைபெறும் இடம்

ஏ.எம் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை.

 

இருக்கை வரிசைகள்

Border Image
Inner Engineering Package
(For particpants who are new to Inner Engineering online)
 
வழக்கமான கட்டணம்
 
வைகை
வழக்கமான கட்டணம்
Rs. 2,000
 
 
தாமிரபரணி
வழக்கமான கட்டணம்
Rs. 3,000
 
 
காவேரி
வழக்கமான கட்டணம்
Rs. 6,000
 
 
கங்கா
வழக்கமான கட்டணம்
Rs. 10,000
 
 
பாகிரதி
வழக்கமான கட்டணம்
Rs. 12,000
 
 
மானஸரோவர்
வழக்கமான கட்டணம்
Rs. 15,000
 
 
கைலாஷ்
வழக்கமான கட்டணம்
Rs. 25,000
 
 
மாணவர்கள், காவல்துறை மற்றும் இராணுவ வீரர்களுக்கான சலுகை ( தாமிரபரணி)
வழக்கமான கட்டணம்
Rs. 1,500
 
 

- முன்கூட்டியே பதிவுசெய்பவர்களுக்கு குறிப்பிட்ட நாள்வரை கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். மாணவர்கள், இராணுவ வீரர்கள், மற்றும் காவல்துறையினருக்கு கட்டணத்தில் 50% சலுகை வழங்கப்படும் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

- கவனிக்க: ஏதேனும் ஒரு சலுகையை மட்டுமே பயன்படுத்தமுடியும். இருவேறு சலுகைகளை ஒன்றிணைத்து பயன்பெற வாய்ப்பில்லை.

 

( Registrations are closed )
 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

seperator
 

15 வயதிற்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் இந்நிகழ்ச்சியில் பங்குபெறலாம். இதற்கு எவ்வித முன்-அனுபவமோ, உடல் ஸ்திரமோ, ஆரோக்கியமோ அவசியமில்லை.

இரண்டு நாளும் முழுமையாகப் பங்கேற்றால்தான் இப்பயிற்சியை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும், இதனால் கிடைக்கும் பலன்களையும் பெறமுடியும். இந்த நாட்களில் ஏதோவொரு நேரம் உங்களால் வரமுடியவில்லை என்றாலும் மீதமிருக்கும் நிகழ்ச்சிக்கு வர உங்களுக்கு அனுமதி இருக்காது. இந்நிகழ்ச்சிக்கான பதிவு மற்றும் பதிவு-ரத்து கொள்கைகளை இங்கே பார்க்கவும்.

நிகழ்ச்சியின் முதல் நாள் மாலை சிற்றுண்டி வழங்கப்படும். இரண்டாம் நாள் காலையும் மதியமும் சைவ உணவு வழங்கப்படும்.

நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகள் மற்றும் அவசரத் தேவைக்கு வேண்டும் என நினைக்கும் மருந்துகளை நீங்கள் உடன் எடுத்துவரலாம்.

தரையில் சௌகரியமாக உட்காருவதற்கு ஏற்றவகையில் லூசான, சௌகரியமான ஆடைகளை அணிந்து வரவும். தேவை என்று நினைத்தால் ஒரு குஷனோ, யோகா மேட்டே எடுத்துவரலாம். ஆனால் இது கட்டாயமல்ல.

ஈஷா அறக்கட்டளை ஒரு இலாப நோக்கமற்ற, தன்னார்வத் தொண்டர்கள் நடத்திவரும் அமைப்பு. மனித நல்வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. உள்நிலை மாற்றத்திற்கான சக்திவாய்ந்த யோகா வகுப்புகள், பலரையும் ஊக்குவிக்கும் சமூகநல மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் என ஈஷாவின் செயற்திட்டங்கள் அனைவரையும் அரவணைக்கும் கலாச்சாரத்தை உருவாக்கி, இதன் அடிப்படையில் உலக அமைதி மற்றும் மேம்பாட்டிற்கு வழிசெய்கிறது.

இந்நிகழ்ச்சிக்கான செலவுகளை ஈடுசெய்யவே இதுபோன்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டி பதிவுசெய்வோருக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் தவிர்த்து, மாணவர்களுக்கும், தொழிலாளர்களின் நலம்கருதி தொழிலாளர்களுக்காக பதிவு செய்யும் ஸ்தாபனங்களுக்கும்கூட சலுகைகள் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நேரத்தில் பங்கேற்பாளர்களுக்கு உணவும் வழங்கப்பட உள்ளது. இவை அனைத்தையும் கருத்தில்கொண்டுதான் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சிறுவர்களை பார்த்துக்கொள்ளும் எவ்வித வசதிகளும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏற்பாடு செய்யப்படாது என்பதால், உங்கள் பிள்ளைகளை நிகழ்ச்சிக்குக் கூட்டி வராமல் இருப்பது நல்லது.

நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு குறைந்தது 1-மணி நேரம் முன்பாகவே நீங்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்துவிடுங்கள். வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நீங்கள் வாகனத்தை பார்க் செய்துவிட்டு வருவதற்குத் தாமதமாகலாம். இதுதவிர்த்து முதல் நாளன்று பதிவுகளை சரிபார்த்து உள்ளே அனுமதிக்கும் செயல்முறையும் நடைபெறும். அதனால் குறைந்தது 1-மணி நேரம் முன்பாக வந்துவிடுங்கள். வரும்போது உங்கள் புகைப்படத்துடன் இருக்கும் அரசாங்கம் வழங்கிய ஒரு அடையாள அட்டையை எடுத்துவாருங்கள்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் தற்சமயம் முழுநேர மாணவர்களாக பயிலும் மாணவர்களுக்கு சலுகை உண்டு. இந்த சலுகை பெறுவதற்கு உங்கள் வயது 15 - 24 ற்குள் இருக்கவேண்டும்.

வழங்கப்படும் வெவ்வேறு சலுகைகளை ஒன்றிணைத்து நீங்கள் பயன்பெற வாய்ப்பில்லை.

நவம்பர் 30, 2019 நள்ளிரவு வரை நீங்கள் செலுத்திய பணத்தை திரும்பப் பெறும் வாய்ப்பு இருக்கும். முன்பதிவு ரத்து செய்வது, பணம் திரும்பப் பெறுவது தொடர்பான கொள்கைகளை பார்க்கவும்.

பங்கேற்பாளர்களுக்கு தங்கும்வசதிகள் வழங்கப்பட மாட்டாது. பதிவுக்கட்டணத்தில் இது உள்ளடங்காது. உங்களுக்கான தங்கும்வசதிகளை நீங்கள்தான் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியின் விளையாட்டுதிடலில் இந்நிகழ்ச்சி நடைபெறும். எளிதாக வந்துபோவதற்கு ஏற்றவகையில் போக்குவரத்து வசதிகள் இருக்கும் இடம் இது. இவ்விடத்திற்கு வருவதற்கான வழிகாட்டியை இங்கே காணலாம்..

ஆம். இவ்விடத்தில் பார்க்கிங் வசதிகள் உள்ளது. குறைவான கட்டணத்தில் இந்த சேவையை வெளிநபர்கள் வழங்குகிறார்கள்.

உங்கள் இருக்கை எண் விவரங்களை டிசம்பர் 10, 2019ற்குள் பெறுவீர்கள்.

பணம் செலுத்துவது தொடர்பான பிரச்சினைகளுக்கு, +91 8300037000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது sadhguru-in-chennai@ishayoga.org எனும் மின்னஞ்சலுக்கு விவரங்கள் அனுப்பலாம்.

நிகழ்ச்சி தொடர்பான தகவல்கள், பதிவுகள் மற்றும் பணம் செலுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு எங்கள் சேவைக் குழுவை தொடர்பு கொள்ளுங்கள்:

மின்னஞ்சல்: sadhguru-in-chennai@ishayoga.org

முன்பதிவுக்கு: +91 8300037000

உங்கள் பதிவை உறுதி செய்து உங்கள் இருக்கை எண் விவரங்களோடு டிசம்பர் 10, 2019ற்குள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளில் பணிபுரிவோருக்கும் அதிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் தனி சலுகை இருக்கும். தாமிரபரணி பிரிவில் உங்களுக்கு இருக்கை ஒதுக்கப்படும். நீங்கள் முன்வரிசைகளில் அமர விரும்பினால் காவிரி, கங்கா, பாகிரதி, மானசரோவர், கைலாஷ் என மற்ற பிரிவுகளுக்கு முழுதொகை செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம்.

நற்சான்றிதழ்கள்
கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையா?
Border Image
உங்களுக்கு அருகிலுள்ள நகரத்தில் ஈஷா யோகா ஆசிரியர் நடத்தும் ஈஷா யோகா நிகழ்ச்சி பற்றி அறிந்திடுங்கள்!