சவாலான இந்நேரத்தில் சத்குரு வழங்கும் கருவிகள்

இந்த அசாதாரணமான காலகட்டத்தின் இடர்ப்பாடுகளை எளிதாகக் கடந்து செல்வதற்கு உதவி செய்யும் வகையில் சத்குரு அவர்கள், நமக்கு ஒரு தினசரி பயிற்சியையும், சாதனாவின் துணையையும் வழங்குகிறார்.
 

சவாலான இந்நேரத்தில் சத்குரு வழங்கும் கருவிகள்

இந்த அசாதாரணமான காலகட்டத்தின் இடர்ப்பாடுகளை எளிதாகக் கடந்து செல்வதற்கு உதவி செய்யும் வகையில் சத்குரு அவர்கள், நமக்கு ஒரு தினசரி பயிற்சியையும், சாதனாவின் துணையையும் வழங்குகிறார்.
seperator
 
Overview
 

உலகமெங்கும் இன்னமும் தன் கோரமுகம் காட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) எனும் உலகளாவிய தொற்றுக்கிருமியுடன், நாம் முன்பு எப்போதும் கண்டிராத ஒரு சவாலான கட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே தினசரி வாழ்க்கை முறைகளில் எதிர்பாராத மாற்றங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியான நேரங்களில்தான் நமது உற்சாகம், உள்நிலையின் சமன்பாடு மற்றும் உடல் நலனை மேம்படுத்த வேண்டியது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது, அதனால் நம்மைச் சுற்றிலும் இருக்கும் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு உத்வேகமிக்க தாக்கத்தினை நாம் ஏற்படுத்த முடியும்.

இந்த நோக்கில், நாம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக மிக எளிமையான, ஆனால் சக்திவாய்ந்த, வழிகாட்டுதலுடன் கூடிய சாதனாவாக, ஒரு தினசரி பயிற்சியை சத்குரு வழங்கியுள்ளார். கூடுதலான வழிகாட்டலைப் பெற விரும்புபவர்கள் இந்த தினசரி பயிற்சிக்கான கால அட்டவணைக்கு தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

 
DAILY SADHANA (PRACTICE) – open to all
 
“யோக யோக யோகேஷ்வராய” உச்சாடணம் (12 முறை), அதைத் தொடர்ந்து ஈஷா கிரியா தியானம்

பயிற்சியை கற்றுக்கொள்ளுதல்

படி 1: பயிற்சியின் தனித்தன்மை பற்றி சத்குரு

 

படி 2: “யோக யோக யோகேஷ்வராய” உச்சாடணத்தைக் கற்றுக்கொள்ளுதல்

 

படி 3: ஈஷா கிரியாவை கற்றுக்கொள்ளுங்கள்

 

படி 4: முழுமையான குறிப்புகளுடன் தினசரி பயிற்சி: “யோக யோக யோகேஷ்வராய” உச்சாடணம், தொடர்ந்து ஈஷா கிரியா

 

சிம்ம கிரியா

இந்த எளிய யோகப் பயிற்சி மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு வலிமை சேர்த்திடுங்கள், நுரையீரல் கொள்ளளவை அதிகரித்திடுங்கள்

சவாலான இந்நேரத்தில் உறுதுணையாக, ஒருவரின் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு வலிமை சேர்ப்பதற்கும், சுவாச மண்டலத்ததை வலுவூட்டுவதற்கும் உதவும் வகையில் ஒரு எளிமையான பயிற்சியை சத்குரு வழங்குகிறார்.

பயிற்சிக்கான விதிமுறைகள்

  1. உங்கள் வயிறு முழுவதுமாக நிரம்பிய நிலையில் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்; நீங்கள் ஓரளவுக்கு பசியுடன் இருக்க வேண்டும். உங்களது முந்தைய உணவிற்கும் இந்த பயிற்சியை துவங்குவதற்கும் இடையே குறைந்தது 2 ½ மணிநேர இடைவெளி கொடுப்பது நலம்.
  2. கடந்த 6 மாதங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய அவசியம் நேர்ந்தவர்களைத் தவிர, 6 முதல் 70 வயதுக்குட்பட்ட அனைவரும் தங்கள் உடல்நிலை மற்றும் மருத்துவ நிலை சார்ந்த எவ்வித நிபந்தனைகளும் இன்றி இந்த பயிற்சியை செய்யலாம்.
  3. 6 வயதிற்கு உட்பட்டவர்களும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களும் இந்த பயிற்சியைச் செய்யலாம், ஆனால் அவர்கள் சுவாச பயிற்சியை 12 முறை மட்டுமே செய்ய வேண்டும் (21 முறை அல்ல).
  4. மூளையில் இரத்தக்கசிவு அல்லது மூளையில் கட்டி உள்ளவர்களும் இந்த பயிற்சியை செய்யலாம், ஆனால் அவர்கள் சுவாச பயிற்சியை 12 முறை மட்டுமே செய்ய வேண்டும் (21 முறை அல்ல).

 

 

 
Inner Engineering Online
 

ஈஷா அறக்கட்டளையின் பிரதான நிகழ்ச்சியான “ஈஷா யோகா ஆன்லைன்” மே 31 வரை 50% கட்டண சலுகையில் வழங்கப்படுகிறது.

ஈஷா யோகா ஆன்லைன் என்பது, 7-வகுப்புகளைக் கொண்ட ஆன்லைன் நிகழ்ச்சியாகும். இது உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பும் விதத்தில் உருவாக்க, உங்களை மேம்படுத்துவதற்கான கருவிகளை வழங்குகிறது. யோக அறிவியலின் சாரத்திலிருந்து பெறப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி, வாழ்க்கையின் அடிப்படைகளை பகுத்தாராய்ந்து அறியக்கூடிய வாய்ப்பினை இந்த வகுப்பு உங்களுக்கு வழங்குகிறது. இது உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் அடிப்படை உயிர் சக்தியை நிர்வகிப்பதற்கான செய்முறை அறிவினை அளிக்கிறது.

 

* மே 31 வரை

 
With Sadhguru in Challenging Times
 

இதுவறை நாம் எதிர்கொள்ளாத சவாலான இந்நேரத்தில், சத்குருவிடம் நம் கேள்விகளைக் கேட்பதற்கும், அவரது ஞானத்தைப் பெறுவதற்கும் ஒரு வாய்ப்பாக, youtube மூலமாக நம்மை வந்தடைகிறார் சத்குரு.

ஒவ்வொரு நாளும் சத்குரு Premiere ஐ காணுங்கள்

மாலை 8:00 மணி – மாலை 8:40 மணி IST
மாலை 2:30 மணி. – மாலை 3:10 மணி GMT
மாலை 10:30 மணி – மாலை 11:10 மணி EST

முகநூல், இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டரில், youtube வீடியோ கமெண்ட்களில் #AskSadhguru என்ற ஹேஷ் டேக்குடன் உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்.

 

 
Contact us
 

மேலும் விவரங்களுக்கு, கீழ்க்கண்ட இணையத்தில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

SadhanaSupport.usa@ishafoundation.org (For USA and Canada)

SadhanaSupport.europe@ishafoundation.org (For UK and Europe)

SadhanaSupport.apac@ishafoundation.org (For Asia (except India) and Australia/New Zealand)

SadhanaSupport.russian@ishafoundation.org (For Russian-speaking countries)

SadhanaSupport@ishafoundation.org (For India and the rest of the world)