Login | Sign Up
logo
search
Login|Sign Up
Country
  • Sadhguru Exclusive
Also in:
English
हिंदी

பைரவி சாதனா - அர்ப்பணம்

பக்தியின் இனிமையை அனுபவித்திடுங்கள்

Registrations closed.
"உங்களை நீங்களே வெறுமை ஆக்கிக்கொண்டால், தேவிக்கு உங்களுடன் இருப்பதை தவிர வேறு வழியே இல்லை.‌ தேவி உங்களுடன் இருந்தால் எனக்கும் உங்களுடன் இருப்பதை தவிர வேறு வழி இல்லை." - சத்குரு

பைரவி சாதனா என்பது என்ன?

லிங்கபைரவியின் அருளைப் பெறுவதற்கும், நமக்குள் இருக்கும் பக்தியின் பரிமாணத்தை வெளிக்கொணர்வதற்குமான ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த செயல்முறை.

சூரியனின் ஓட்டம் வடக்கு அரைக்கோளத்திற்கு மாறும் காலமான உத்தராயணத்தின் தொடக்கத்தில் சாதனா தொடங்குகிறது. உத்தராயண காலம் ​​ஆன்மீக கிரகிப்புத்தன்மைக்கு உகந்த காலமாக உள்ளது.

பெண்களுக்கான சாதனா நிறைவு: 25 Jan 2024 (Thaipusam)

ஆண்களுக்கான சாதனா நிறைவு: 9 Feb 2024 (Thai Amavasya)

*தைப்பூசம் என்பது, தை மாதத்தில் வரும் பௌர்ணமி நாள்.

*இதில் பங்கேற்பதற்கு, பைரவி சாதனா Kit அவசியம் தேவை. (Isha Lifeல் கிடைக்கும்)

ஏன் பைரவி சாதனா?

ஆரோக்கியம், செல்வம், அறிவு அல்லது ஆழமிக்க உள்நிலை அனுபவம் என ஒருவரின் குறிக்கோள்கள் எதுவாக இருந்தாலும், தேவி இவை அனைத்தையும் மேலும் பலவற்றையும் வழங்கக்கூடிய தயாள குணமிக்கவளாக இருக்கிறாள்.

  • தேவியின் அருளை கிரகிக்கும் உங்கள் திறன் அதிகரிக்கிறது.

  • குறிப்பிட்ட வாழ்க்கை முறையை கடைபிடித்து, தேவியுடன் உங்கள் அருட்தொடர்பை ஆழப்படுத்தும் பிரத்யேகப் பயிற்சிகளுக்கான தீட்சை பெறுதல்.

  • பக்தியுணர்வுடன் தங்களையே அர்ப்பணிப்பதன் அடையாளமாக, பக்தர்கள் புனித அர்ப்பணங்களைச் செய்ய வழிகாட்டப்படுவார்கள்.

எப்படி பங்கேற்பது:

படி 1: இந்த சாதனாவிற்கு பதிவு செய்யுங்கள்.

படி 2: தீட்சை வழங்கும் நாளுக்கு முன்பாக, தீட்சை பற்றிய தகவல்கள் அடங்கிய ஓரியண்டேஷன் வீடியோவைப் பார்த்திடுங்கள். (நீங்கள் பதிவு செய்தவுடன் இமெயில் மூலம் உங்களுக்கு வீடியோ அனுப்பப்படும்.)

படி 3: 4, 11, 14, 18, 22 ஜனவரி அன்று ஆன்லைன் தீட்சை நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள். (ஆன்லைனில் இணைவதற்கான நேரம் மற்றும் லிங்க் இமெயில் மூலம் அனுப்பப்படும்.)

படி 4: சாதனாவிற்கான குறிப்புகளைப் பின்பற்றி, கொடுக்கப்பட்டுள்ள கால அளவிற்கு சாதனாவைச் செய்யுங்கள்.

படி 5: நிறைவு செய்யும் நாளுக்கு முன்பாக, அதற்கான குறிப்புகள் அடங்கிய ஓரியண்டேஷன் வீடியோவைப் பார்த்திடுங்கள். (நீங்கள் பதிவு செய்தவுடன் இமெயில் மூலம் உங்களுக்கு வீடியோ அனுப்பப்படும்.)

படி 6:சாதனா நிறைவு நிகழ்ச்சியில், ஆன்லைனில் கலந்துகொள்ளுங்கள் அல்லது ஈஷா யோக மையத்திற்கு நேரில் வந்து பங்கேற்கலாம் - 25 ஜனவரி (பெண்கள்), 9 பிப்ரவரி (ஆண்கள்).

(நிகழ்ச்சி நடைபெறும் நேரம் மற்றும் பிற விபரங்கள் இமெயிலில் அனுப்பப்படும்.)

உங்கள் சாதனாவிற்கு தேவையான பொருட்கள்:

பைரவி சாதனா கிட்டில் இருக்கும் பொருட்கள்:

  • தேவி படம்

  • அபய சூத்திரம்

  • குங்குமம்

  • தேவி ஸ்துதி

- நீங்கள் தேவி டாலரை (தற்போது உள்ளது அல்லது புதியது) அணிய வேண்டும். உங்களுக்கு தேவைப்பட்டால், அதை ஈஷா லைஃப்-ல் வாங்கிக்கொள்ளலாம்.

இந்த அனைத்து பொருட்களையும் தீட்சை வழங்கும் நாளுக்கு முன்பே தயாராக வைத்திருப்பது அவசியம். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த விவரங்கள் தீட்சை வழங்கும் நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

சாதனா காலத்தில் பின்பற்ற வேண்டிய குறிப்புகள்:

தீட்சை வழங்கும் போது சாதனா குறிப்புகள் விரிவாக வழங்கப்படும். இருப்பினும், சாதனாவின் போது மனதில் கொள்ள வேண்டியவை:

  • மூலிகை குளியல் பொடியைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்தல் (ரசாயனம் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்)

  • சாதனா காலத்தில் புகைபிடித்தல், மது அருந்துதல், அசைவ உணவு உண்பது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

  • ஒரு நாளில் இரண்டு வேளை உணவு மட்டுமே. முதல் உணவு மதியம் 12 மணிக்குப் பிறகு இருக்க வேண்டும்.

  • வெள்ளை அல்லது வெளிர்நிற ஆடைகளை அணிவது சிறந்தது.

தொடர்பு விபரங்கள்

மேலும் விபரங்களுக்கு அல்லது ஏதேனும் கேள்விகளுக்கு, எங்களைத் தொடர்பு கொள்ளவும்:

இமெயில்: bhairavi.sadhana@lingabhairavi.org

தொலைபேசி: +91-83000 83111

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பகிர்வுகள்

என்னுடய சாதனாவின் போது தேவியின் பெயரை உச்சரிக்காமல் ஒருநாளும் சென்றதில்லை. அவளுடைய முடிவற்ற கருணை நான் கற்பனையிலும் நினைக்காத அளவிற்கு எனக்குள் பணிவினை வழங்கியது. அவளின் நெருப்பு இன்னும் பலரின் வாழ்க்கையிலும் ஒளியினை வழங்கவேண்டும் என உண்மையிலேயே விரும்புகிறேன்.

- ஆக்ஷா, டெல்லி
 
Close