About
Wisdom
FILTERS:
SORT BY:
நீங்கள் விழிப்புணர்வாக பதில்கொடுக்கும் நிலையில் இருந்தால், எவ்வித இன்னலும் உங்களுக்கு தடையாக இருக்காது.
உங்களுக்கும் உங்கள் உடலுக்கும், உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் இடையே நீங்கள் இடைவெளி உருவாக்கிவிட்டால், அதுவே துன்பத்தின் முடிவு.
நீங்கள் ஆரோக்கியமாகவும் நலமாகவும் இருக்க விரும்பினால், அதற்கான முதல் படி, உங்களுக்குள் என்ன நடக்கிறது என்று கவனிப்பதே.
தியானலிங்கம் உயிருள்ள குருவைப் போன்றது. ஒரு குருவின் முக்கிய பணி, உங்களுக்கு போதனைகளும் வழிகாட்டுதலும் வழங்குவல்ல, உங்கள் உயிர்சக்திக்கு தீப்பற்ற வைப்பதே.
நடப்பதே திரும்பத்திரும்ப நடக்கும் சுழற்சியான வாழ்க்கையில் பாதுகாப்பு இருக்கிறது, ஆனால் சாத்தியங்களோ வளர்ச்சியோ இருக்காது.
இன்னொருவரை தண்டிக்கும் முயற்சியில், நீங்கள் உங்களைத்தான் தண்டித்துக் கொள்கிறீர்கள்.
உங்களுக்கு என்ன திறமைகள் இருப்பினும், அவற்றை எல்லைவரை பயன்படுத்தி, சற்றே எல்லைதாண்டியும் எடுத்துச்செல்ல வேண்டும்.
உங்கள் சக்தி முழுவதும் ஒரே திசையை நோக்கி இருந்தால், ஞானோதயம் வெகுதொலைவில் இல்லை. ஏனெனில் நீங்கள் தேடுவது ஏற்கனவே உங்களுக்குள் இருக்கிறது.
உங்கள் ஆளுமைத்தன்மை எனும் ஓட்டினை உடைத்தால், உயிர் இருப்பதைப் போல, கடவுள் இருப்பதைப் போல, நீங்களும் வெறும் இருப்பாக இருப்பீர்கள்.
ஏமாற்றமடைவது கெடுதலான விஷயமல்ல, உங்கள் மாயைகள் உடைந்து நொறிங்கினால், நீங்கள் நிஜத்திற்கு நெருக்கமாகிறீர்கள் என்று அர்த்தம்.