About
Wisdom
FILTERS:
SORT BY:
கிருஷ்ணா என நாம் அழைக்கும் விழிப்புணர்வு நம்மைத் தொடவேண்டுமென விரும்பினால், நமக்கு 'லீலை' தேவை. லீலை என்பது விளையாட்டுத்தன்மையின் பாதை. அது இல்லாவிட்டால், விழிப்புணர்வாக இருப்பதென்றால் என்னவென்றே அறியமாட்டீர்கள்.
காலம் என்பது சார்புடைய ஓர் அனுபவம். ஒருமுனைப்பாகவும் ஆனந்தமாகவும் இருக்கும் ஒருவருக்கு, இது நொடிப்பொழுதில் ஓடிவிடும் குறுகிய வாழ்க்கை.
யோகாவினால் உங்கள் உடல் மட்டுமின்றி, உங்கள் மனம், உணர்ச்சி, அனைத்துக்கும் மேல் உங்கள் விழிப்புணர்வுநிலை வளைந்துகொடுப்பதாக ஆகவேண்டும்.
உங்கள் நிகழ்காலத்தை எப்படி உணர்கிறீர்கள் என உங்கள் கடந்தகாலம் நிர்ணயிக்க அனுமதித்தீர்களானால், உங்கள் வருங்காலத்தை நீங்கள் அழித்துவிடுகிறீர்கள்.
எவரும் தாங்கள் நிர்வகிக்கப்படுவதை விரும்புவதில்லை. ஆனால் அனைவரும் இணைத்துக்கொள்ளப்பட ஏங்குகிறார்கள்.
நம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம், வீரம் மற்றும் உறுதியால் தான் சுதந்திர தேசத்தின் 75 ஆண்டுகளை நாம் இன்று கொண்டாடுகிறோம். சுதந்திரம் வழங்கப்படுவதல்ல - அதை சம்பாதிக்கலாம், அல்லது இழக்கலாம். வாருங்கள், நாம் சுதந்திர உலகினை நோக்கி நடையிடுவோம்.
வாழ்க்கை நெகிழ்வுத்தன்மை கொண்டது, எப்போதும் பரிணமித்துக்கொண்டே இருப்பது. நீங்கள் எந்த அளவு துடிப்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவு அதிகமான விஷயங்கள் உங்கள் வாழக்கையில் எப்போதும் நிகழும்.
பொருள்தன்மை எல்லையுடையது. அதை எல்லையற்றதாக மாற்ற முயற்சித்தால், நீங்கள் உங்களையும் உங்களை சுற்றியுள்ள அனைத்தையும் அழித்துவிடுவீர்கள், அதுதான் இப்போது உலகில் நடந்துகொண்டு இருக்கிறது.
பிறர் உங்களிடம் கோபப்படும்போது உங்களுக்கு பிடிப்பதில்லை. நீங்கள் பிறரிடம் கோபப்படுவது மட்டும் தீர்வாக இருக்குமென எப்படி நினைக்கிறீர்கள்.
நீங்கள் உண்மையுடன் ஒன்றியிருந்தால், உங்கள் உறவுகள் வெறும் உறவுகளாக இருக்கும், சிக்கிக்கொள்வதாக இருக்காது. நீங்கள் ஈடுபாடாக இருப்பீர்கள், ஆனால் சிக்கிப்போகமாட்டீர்கள்.