விவசாயிகளின் வருமானம் பெருக வேளாண்காடுகள் திட்டம்

தற்போதைய காலகட்டத்தில் நீர் பற்றாக்குறையினால் விவசாயம் நலிவடைந்து வருகிறது. நம் நாட்டில் விவசாயி தற்கொலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையை மாற்ற சத்குரு அவர்கள் காவேரி கூக்குரல் என்னும் இயக்கத்தை துவங்கியுள்ளார். காவேரி பேசினில் மரங்கள் வளர்ப்பதன் மூலம் காவேரியை மீட்டு, வற்றாத ஜீவ நதியாக மீண்டும் காவேரியை பெருக்கெடுத்து ஓட செய்ய முடியும். மேலும், மரப்பயிர் வேளாண்மையால் விவசாயிகளின் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். இதனால் காவேரி பேசின் விவசாயிகள் மரப்பயிர் வேளாண்மையில் ஈடுபட அறிவுறுத்தும் விழிப்புணர்வு வாகனப் பேரணியை சத்குரு அவர்கள் ஜுலை 31, 2019 அன்று 112 அடி ஆதியோகி முன்னிலையில் துவங்கி வைத்தார். விவசாயிகளுக்கு. வேளாண் காடு வளர்ப்பின் முக்கியத்துவத்தையும், அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழகம் மற்றும் கர்நாடக கிராமங்களுக்கு 28 வாகனங்கள் செல்கின்றன. நீங்கள் மரம் நட: Tamil.CauveryCalling.org
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1