சபரிமலைக்கு ஏன் பெண்கள் செல்லக்கூடாது?

சபரிமலைக்கு அனைத்து வயதைச் சேர்ந்த பெண்களும் அனுமதிக்கப்படலாம் என்ற தீர்ப்பை சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. தீர்ப்பு வருவதற்கு முன்பாக இதுகுறித்து சத்குருவிடம் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது, சபரிமலை போன்ற மலைக் கோவில்களுக்கு பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்ததற்கான காரணத்தை கூறுகிறார். சிங்னாப்பூரிலுள்ள சனி கோயில் பற்றியும், அங்கு பெண்கள் ஏன் குறிப்பிட்ட நாட்களில் தடைசெய்யப்பட்டனர் என்பது பற்றியும் விளக்கும் சத்குரு, சபரிமலை விவகாரம் குறித்தும் தன்னுடைய கருத்தை பதிவுசெய்தார்.