ஈடுஇணையில்லா கலாச்சாரம்
பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறுடைய நம் நாடு வறுமையில் உழலும்போது, சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய நாடுகளில் செல்வ வளமும், விஞ்ஞான வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கின்றன. இதற்கென்ன காரணம்? - திரைப்படப் பிரபலம் கங்கை அமரன் கேட்ட இந்த கேள்விக்கு சத்குரு அவர்களின் அற்புதமான விடையை வீடியோவில் காண..
 
 
 

"இந்தியாவில் உள்ள செல்வ வளங்களைக் குறிவைத்து பல படையெடுப்புகள் நிகழ்ந்தன. ஆங்கிலேயர் இங்கிருந்து சென்றபோது இங்கு நிலைநாட்டப்பட்டிருந்த கல்வி அறிவை திட்டமிட்டுக் குலைத்து, நமது செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்தியா இவற்றிலிருந்து மீண்டு வருகிறது.

இவ்வளவும் நடந்த பின்பும் இந்தியா இன்னமும் ஒற்றுமையாக, ஒரே நாடாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் முக்தி நோக்கத்தில் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் இந்தியர்களுக்குள் மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இன்னும் 10 வருடங்களில் இந்தியா எப்படி இருக்கப் போகிறதென்று பாருங்கள்..." என்கிறார் சத்குரு.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1