யோகா: யுனெஸ்கோவில் உலகளாவிய தீர்வு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அஹிம்சை சொற்பொழிவுக்காக பாரிஸ் நகரத்திலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்திற்கு சத்குரு சென்றிருந்தார். ஊடக சேவையின் யுனெஸ்கோ தலைவர் திரு.ஜார்ஜ் பாபாயானிஸ் அவர்கள், சத்குருவின் சொற்பொழிவுக்குப் பிறகு அவரை பேட்டி கண்டார். அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண உதவும் கருவியாக, தனிமனித அளவிலும் உலகளாவிய அளவிலும் யோகா எப்படி வேலை செய்கிறது என்று சத்குரு விளக்குகிறார். யோகாவை ஒரு பயிற்சியாக அல்லாமல் ஒரு அனுபவமாக மக்களுக்குள் எடுத்துவருவது முக்கியம் என்றார்.