ரஷ்யாவில் நடந்த FIFA உலகக் கோப்பை விளையாட்டை பார்த்துவிட்டு சற்றுமுன்புதான் திரும்பியிருக்கிறேன். அரையிறுதியிலும் இறுதி விளையாட்டிலும் அங்கு வியக்கத்தக்க சூழ்நிலை, தீவிரம் மற்றும் உற்சாகம். போட்டித் தொடரில் மெஸ்சி போன்ற பிரசித்திபெற்ற விளையாட்டு வீரர்கள் தோற்றுப்போனார்கள், எம்பாப்பே போன்ற புதிய நட்சத்திரங்கள் ஜொலித்தார்கள். புகழ்பெற்ற டீம்கள் தோற்றன, பிற தேசங்கள் உதித்தன. இந்தியாவைப் போன்ற ஒரு தேசத்தில், பயிற்சியைத் துவங்குவதற்கு லட்சக்கணக்கான சிறுவர்கள் சரியான வயதில் இருக்க, எதிர்கால கால்பந்து உலகக் கோப்பையில் பங்குபெறுவது சாத்தியமானதே என நான் நினைக்கிறேன். வெற்றிகரமாக இருப்பதற்கு தேவைப்படுவது எது? திறமை என்பது ஒன்று, விடாமுயற்சி என்பது மற்றொன்று.

எதற்கும் அசாத்தியமான திறமை வேண்டும் என்று அவசியமில்லை. முற்றிலும் திறந்த நிலையில், நீங்கள் முயற்சிசெய்ய விருப்பத்துடன் இருந்தால், நீங்கள் என்னவாக ஆகவேண்டுமென தேர்வுசெய்கிறீர்களோ அதுவாகவே ஆகலாம்.

எந்தவொரு துறையிலும், ஒருவர் மிகப்பெரிய கால்பந்து வீரராக இருந்தாலும், பெரிய கலைஞராக இருந்தாலும், நடிகராக, இசைக்கலைஞராக, அல்லது என்னவாக இருந்தாலும் சரி - அவர்களுக்கு வெற்றி, 80 சதவிகிதம் விடாமுயற்சியாலும், 20 சதவிகிதம் திறமையாலும் வருகிறது என்றே நான் சொல்வேன். வெறும் திறமையால் சாதிப்பவர்கள் வெகுசிலரே இருக்கிறார்கள் - மற்றவர்கள் அனைவரும் தினமும் பலமணி நேரம் பயிற்சி செய்யவேண்டும். ஒரு கால்பந்து வீரர் உலகத்தரம் கொண்டவராய் மாற, பல ஆயிரம் மணி நேரம் அவர் பயிற்சி செய்யத் தேவையிருக்கிறது. உலகக் கோப்பையில் ஒரு கோல் அடிப்பதற்கு அவர்கள் பல வருடங்களாக பந்தை தினமும் நான்கு முதல் ஆறு மணி நேரம் வரை உதைத்துப் பயிற்சி செய்துள்ளார்கள்.

மிகப்பெரிய நடிகர்களை எடுத்துக்கொண்டால், மேடையில் இரண்டு மணி நேரம் நடிக்க, தினமும் அவர்கள் பன்னிரண்டு முதல் பதினைந்து மணி நேரம் வரை பயிற்சி செய்திருப்பார்கள், அதனால் அதற்கான பலனும் அவர்களுக்குக் கிடைக்கிறது. எதற்கும் அசாத்தியமான திறமை வேண்டும் என்று அவசியமில்லை. முற்றிலும் திறந்த நிலையில், நீங்கள் முயற்சிசெய்ய விருப்பத்துடன் இருந்தால், நீங்கள் என்னவாக ஆகவேண்டுமென தேர்வுசெய்கிறீர்களோ அதுவாகவே ஆகலாம். ஒருமுறை நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, நீங்கள் என்ன செய்யமுடியும் என்ன செய்யமுடியாது என்ற ஒரு கேள்வி எழுந்தது. எனக்கு அப்போது மிகவும் போரடித்தது, ஏனென்றால் எனக்கு செய்வதற்கு எவ்வளவோ இருந்தும், என்ன செய்வதென்று வெறும் பேச்சு மட்டுமே வகுப்பில் நடந்துகொண்டு இருந்தது. அப்போது நான், "எனக்கு போதுமான பணமும் நேரமும் கிடைத்தால் நான் சந்திரனுக்கு செல்ல படிக்கட்டுகள் கட்டுவேன்" என்றேன். அவர்கள் இதை ஆணவம் என்றே நினைத்தார்கள். ஆனால் நான், "இதுவரை அப்படியொன்று நிகழாமல் இருந்திருக்கலாம், ஆனால் தேவையான பணமும் நேரமும் இருந்தால் அதை செய்யமுடியும்" என்றேன். வாய்ப்பு வருகிறதா இல்லையா என்பது மட்டும்தானே கேள்வி. மற்றபடி மனிதனால் செய்யமுடியாதது என்று ஏதாவது இருக்கிறதா என்ன?

வாய்ப்பு நம்முன் வருகிறதா இல்லையா என்பது உலகில் நிதர்சனமாக இருக்கும் பல சூழ்நிலைகளை சார்ந்தது. வாய்ப்பு உங்கள்முன் வந்தால், அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அதுதான் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசம்.

வாய்ப்பு நம்முன் வருகிறதா இல்லையா என்பது உலகில் நிதர்சனமாக இருக்கும் பல சூழ்நிலைகளை சார்ந்தது. வாய்ப்பு உங்கள்முன் வந்தால், அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அதுதான் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசம். நீங்கள் வெற்றிகரமாக இருக்க விரும்பினால், உங்களுக்கு பேரார்வமும் விடாமுயற்சி செய்ய விருப்பமும் வேண்டும். வாழ்க்கை பற்றி பேரார்வத்துடன் இருக்கும் எவருக்கும் சும்மா இருக்க நேரமிருப்பதில்லை. எப்போதும் செய்வதற்கு ஏதோவொன்று இருக்கிறது - அது வேலையாகவே இருக்கவேண்டிய அவசியமில்லை. நீங்கள் அக்கறையுடன் எதைச் செய்தாலும், அது வேலை போல தோன்றுவதில்லை. அது சுமையாகத் தெரிவதில்லை. அதை நீங்கள் ரசித்தால், 24 மணி நேரமும் அதைச் செய்ய விருப்பத்துடன் இருப்பீர்கள். நீங்கள் வேறு ஏதாவது செய்ய விரும்பினால் - புத்தகம் வாசிப்பது, பாடுவது, நடனமாடுவது, விளையாடுவது, ஏதோ உருவாக்குவது, புதிதாக ஏதோ ஆராய்ந்தறிவது - இப்படி ஏதாவது செய்தாலும் பரவாயில்லை. ஆனால் எதுவும் செய்யாமல் சும்மா சுற்றித்திரிவது எப்படி? உங்கள் மூளைக்கும், உடலுக்கும், அவை அதிகபட்ச திறனுடன் செயல்படும் விதமாக பயிற்சியளிக்கப்பட வேண்டும்.

உங்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லாவிட்டால், உங்கள் வாழ்க்கை தேக்கமடைந்து விட்டது என்றே அர்த்தம். அப்படியொரு நிலை உங்களுக்கு வரவே கூடாது என்பதே என் விருப்பம். நதிபோல நீங்கள் ஓடிக்கொண்டு இருந்தால், செய்வதற்கு எப்போதும் ஏதோவொன்று இருக்கிறது. திரும்பிப் பார்க்கும்முன் வாழ்க்கை முடிந்துவிடும். நூறு வருடம் வாழ்ந்து உங்கள் நேரம் முழுவதையும் அதில் செலவழித்தாலும், மனித புத்திசாலித்தனம் மற்றும் மனித விழிப்புணர்வின் சாத்தியங்கள் முழுவதையும் ஆராய்ந்துணர உங்களுக்கு நேரம் போதாது. இது வாழ்வதற்கான நேரம், ஓய்வெடுப்பதற்கான நேரமல்ல. உங்களை கல்லறையில் புதைக்கும்போது ஓய்வு வரும். வெற்றி என்பது ஒரு குறிப்பிட்ட முடிவை அடைவதல்ல, நீங்கள் உண்மையாகவே அக்கறை கொண்டுள்ள ஒன்றிற்காக ஆனந்தத்துடனும் விடாமுயற்சியுடனும் செயலாற்றுவதே வெற்றி.

அன்பும் அருளும்,

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.