இன்று வசந்தம் பிறக்கும் நாள். வசந்தம் மலரும் போது அத்தனையும் வளங்கொழிக்கும். இதனை ஒரு பூச்சி கூட, "இது தான் எனக்கு உகந்த தருணம்," என்று புரிந்து கொள்கிறது. ஏன் ஒரு சிறு புழுவும், "என் வாழ்க்கையை நான் உருவாக்கிக் கொள்ள," இதுவே சிறந்த தருணம் என்று புரிந்து கொள்கிறது. வரும் வருடங்கள் ஆன்மீக சாதகர்களுக்கு வசந்த காலமாய் மலரும். உங்களுக்கு அந்த சாத்தியம் நிகழும்படி நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் அமரும் அந்த சிறு புல்லும், நீங்கள் அங்கு அமர்வதால் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும். நீங்கள் அங்கு அமர்வதால் உங்களை சபிக்கக் கூடாது. இதனைச் செய்வதற்கும் ஒரு முறை இருக்கிறது. "சத்குரு எனக்கு சொல்லுங்களேன், நான் என்ன அந்த புல்லை உண்ண வேண்டுமா? அந்த புல் எப்படி என்னை ஆசீர்வதிக்கும்?" என்று நீங்கள் கேட்கக் கூடாது.

உங்களுக்கும் அந்த புல்லிற்கும், உங்களுக்கும் அந்த புல்லில் ஊறும் பூச்சிக்கும், இந்த பிரபஞ்சத்தின் அளவீடுகளின்படி ஒரு வித்தியாசமும் இல்லை. புல்லின் நுனியை விட சிறியவர் தான் நீங்கள். உங்களைப் பொருத்தவரையில் ஒரு புல்லின் நுனி எவ்வளவு பெரியதோ அதனைவிட சிறியவரே நீங்கள்.

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் இதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் நினைவில் இதனைக் கொண்டு மென்மையாக நடந்தால், சுவாசிப்பதை மென்மையாக செய்வீர்கள், இங்கு வாழ்வதே மென்மையாக வாழ்வீர்கள். "அனைவரையும் நேசியுங்கள்" என்று யாரோ சொல்லிக் கொடுத்து நீங்கள் பழகுவதல்ல மென்மை. பிரம்மாண்டமான இந்த படைப்பில் உங்கள் அளவையும், உங்கள் வடிவத்தையும் நீங்கள் உணர்ந்திருந்தால், நீங்கள் அப்படித்தான் இருப்பீர்கள்.

நீங்கள் தொடுவது அனைத்தும் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.