உயிரை கர்ஜிக்க அனுமதித்தல்!
இந்த ஸ்பாட் வீடியோவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு விழாவில் முன்வரிசையில் சத்குரு அமர்ந்திருப்பதையும், தனது மகளுடன் ஒரு பைக் சவாரி செய்வதையும் பார்க்கலாம். மைசூரூவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அவர் ஆன்மீகம் மற்றும் வாழ்க்கைமுறை பற்றிய சில தவறான புரிதல்களை சுட்டிக்காட்டி தெளிவுபடுத்துகிறார். பெங்களூரூவில் நிகழ்ந்த மரம்நடு விழாவில் அவர், மற்றவரை குறை கூறுவதிலிருந்து பொறுப்பேற்று செயல்படும் நிலைக்கு நகருங்கள் என கேட்டுக்கொள்கிறார். மேலும், மும்பை NSCI அரங்கத்தில் 8000 மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கூடியிருந்த நிகழ்ச்சியில், தேசத்தின் எதிர்காலம் வளமாக இந்திய அரசாங்கம் கவனம்செலுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து நிகழ்ச்சியில் அவர் எடுத்துரைக்கிறார்.