உண்மை பரவட்டும்

இளைஞர்களுக்கு சத்குரு உண்மை உணர்த்தும் "இளைஞரும் உண்மையும்" நிகழ்வுகள் குறித்த 'அப்டேட்' அறிய ஆவலுடன் இருப்பீர்கள். இதன் முதல் வீடியோவில், செப்டம்பர் 4ம் தேதி தில்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லாரியில் மாணவர்களுடன் சத்குரு உரையாடிய நிகழ்ச்சி சுருக்கத்தை தொகுத்துள்ளோம். இரண்டாவது வீடியோவில், ஒரே சமயத்தில் பல விஷயங்கள் செய்வது எப்படி எனும் மாணவர்களின் கேள்விக்கு புதியதொரு கோணத்தில் சத்குரு பதிலளித்துள்ளார்.
 
Sadhguru answers to questions from Shriram College of Commerce students | Truth Be Told
 
 
 

   

அன்பும் அருளும்,

இளைஞரும் உண்மையும் இயக்கம் என்பது என்ன?

ஒரு திருப்புமுனையில் இந்தியா

நம் ஜனத்தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் 25 வயதுக்குக் குறைவானவர்கள். இந்த 65 கோடி இளைஞர்களின் லட்சியங்கள் மற்றும் திறமைகளே தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது, இது பலவிதங்களில் உலகின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கவல்லது.

இதிலுள்ள சவால்

சமுதாயம் அவர்கள் மேல் திணிப்பதும், அவர்களுக்கு ஏற்படுத்தும் அழுத்தமும் இளைஞர்களை பதம் பார்க்கிறது. பெரும்பாலான இளைஞர்களுக்கு, ஆழமான அறிதலுக்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் சரியான வழிகாட்டி இல்லை. தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில், அவர்கள் காயப்படும் அபாயதிற்குத் திறந்தவர்களாய் உண்மையை ஆராய்ந்தறிய முற்படும்போது, தெளிவை வழங்கும் சமநிலையான குரல் எதுவுமில்லை. அதற்காகத்தான் இளைஞரும் உண்மையும் இயக்கம்.

இந்திய இளைஞர்களை ஊக்குவித்து வல்லமை வழங்கவே இளைஞரும் உண்மையும் இயக்கம்

இந்த ஒரு மாத கால பிரச்சாரத்தில், நேரடியாகவும் இணையம் மூலமாகவும் சத்குரு லட்சக்கணக்கான இளைஞர்களுடன் கலந்துரையாடுவார். அதோடு, தினமும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரங்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். இளைஞர்கள் தாங்கள் தெளிவுபெற விரும்பும் எந்த விஷயம் குறித்தும் கேள்விகள் எழுப்பலாம் - வேலை, பெற்றோர், போதைக்கு அடிமையாதல், மன அழுத்தம், உறவுகள், பாலுணர்வு - எதைக் கேட்கவும் தடையில்லை. சத்குரு வழங்குவது அறிவுரையோ நெறிமுறைகளோ போதனைகளோ கட்டளைகளோ அல்ல. மாறாக, அவரது அபரிமிதமான தெளிவு, எதுவாயினும் அதன் மையக்கரு வரை ஊடுருவி அதுபற்றிய உண்மையை வெளிப்படுத்துகிறது. இளைஞர்களின் எதிர்காலத்திற்கும், பாரதத்தின் எதிர்காலத்திற்கும் இது அத்தியாவசியமானது.

YAT18_Newsletter-650x120
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1