shivanga, sadhana

இந்த பூமியின் வாழ்க்கையிலும் அதில் வாழும் அனைத்து உயிர்களின் வாழ்க்கையிலும், தன் கட்டுப்பாடுகளைக் கடந்துசெல்ல விரும்புவோருக்குப் பல வகைகளில் பலன் தருவதாய் இருப்பது இந்த பருவகாலம்தான். டிசம்பரில் வரும் கதிர் திருப்ப நாளிலிலிருந்து (உத்தராயணம் தொடங்கும் நாள்) வரும் 2வது அமாவாசைக்கு அடுத்த பௌர்ணமி வரையிலான காலகட்டம் ஆன்மீகப் பயணத்தில் இருப்பவர்களுக்கு மிக முக்கிய நாட்கள். மற்ற நாட்களை விட இந்நாட்களில் மிக எளிதாக வாழ்க்கை கனிந்து பலனளிக்கிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக பல செயல்கள் செய்யப்பட்டன.

மரங்களும் செடிகளும் இந்நேரத்தில் மிகச் சுலபமாக பூ பூத்தோ, கனி தாங்கியோ நிற்கின்றன. இது அனுகூலமான வெப்பநிலை மாற்றத்தால் மட்டுமல்ல, பஞ்சபூதங்களின் மாற்றமும் அனுகூலமாக இருப்பதால்தான். மனித உடலில் இருக்கும் பஞ்சபூதங்களில் பெரும்பங்கு வகிக்கும் நீர் மிகவும் முக்கியமானது. அதிகப்படியான நீர் பூமியில் இருப்பது இக்காலத்தில்தான். இப்பொழுது வானத்தைப் பார்த்தால், ஒரு மேகம் கூட தென்படாது. மெதுவாக, வெயிற்காலம் நெருங்க நெருங்க, பூமியிலிருக்கும் இந்நீர் பெருமளவில் ஆவியாகி, பல நிலைகளில் ஆகாயத்தில் தங்கிவிடுகிறது.

Shivanga, sadhana, sadhguru

குளிர்காலம் முடிந்தவுடன் வரும் இந்த காலம்தான், மனித உடலின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றுவதற்கு உகந்த காலமாகும். பூமியின் எல்லா இடங்களிலும் இதேபோல் இருந்தாலும், இது அதிகமாகப் பொருந்துவது வட துருவத்துக்குத்தான். அதிக அளவிலான நிலம் வடதுருவத்திலேயே இருப்பதால், தென் துருவத்தில் வெயிற்காலம் அவ்வளவு கடுமையாக இருப்பதில்லை. உங்கள் உடலில் 70 சதவிகிதத்திற்கு மேல் நீர்தான் உள்ளது. நீங்கள் உணர்கிறீர்களோ இல்லையோ, உங்கள் உடல் அதனை நன்றாக உணர்கிறது. வெயில்காலத்தின் வெப்பம் அதிகமாகி, நீர் ஆவியாகி வேறெங்கோ செல்லும்போது, உங்கள் உடல் அசௌகரியத்தை உணர்கிறது. வசந்த காலத்தில் எல்லாமே அதன் சிறந்த நிலையில் இருக்கிறது. இந்த உடலும் மிகச் சிறந்த நிலையில், சௌகரியத்தில் இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

shivanga, sadhana

சௌகரியமாக இருப்பது ஒன்றும் சாதாரணமான விஷயமல்ல. இந்நிலையை பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் உணர்வதே கிடையாது. சௌகரியமாக இருப்பது என்றால் என்ன? உங்கள் இப்போதைய நிலையில் ஒரு கொசு, அல்லது ஒரு சிறிய பூச்சி கூட உங்களைப் பதற்றப்படுத்தி விடலாம். ஏன், நீங்கள் உட்கார்ந்திருக்கும்போது ஒரு காய்ந்த சருகு உங்கள்மேல் விழுந்தால்கூட பதறிவிடுவீர்கள். ஏனென்றால் உங்கள் உடல் சௌகரியமாக இல்லை. நம் உடலை சௌகரியமான நிலைக்குக் கொண்டுவருவது சாதாரண காரியமல்ல.

சௌகரியமான நிலைக்கு வருவது என்றால் நீங்கள் படைத்தலுடன் அப்படியே இணங்கிவிடுவது. நீங்கள் எவ்வளவு பதற்றமான மனிதராக இருந்தாலும், இந்த இரண்டரை மாதங்களில் உங்கள் உடல் சற்று சௌகரியமான நிலைக்கு வருகிறது. அதனை ஒருவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் சாதனா. இது 'வெண்ணையைக் கடைந்தெடுக்கும்' சாதனா அல்ல, இது 'திரண்டிருக்கும் வெண்ணையைக் கையிலெடுப்பதைப்' போன்ற சாதனா.

shivanga, sadhana, bhairavi

உண்மையில், நீங்கள் வெண்ணையைக் கையில் எடுக்காமல், என்ன கிடைத்திருக்கிறது என்றே பார்க்காமல், சாதனாவை மட்டும் செய்வதுதான் சிறந்தது. வருடா வருடம் கணக்கெடுக்காமல், உங்கள் உயிரையே சாதனாவிற்குள் போட்டு, என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஒரு ஜென்மத்திற்கு ஒரு முறை நாம் கணக்கெடுத்துக் கொள்ளலாம்.

“இல்லை இல்லை. அது சாத்தியமில்லை. எங்கே செல்கிறோம் என்று ஒவ்வொரு நாளும் நமக்குத் தெரிய வேண்டாமா? ஒரு நாளுக்கு ஒரு முறையாவது 'இது உண்மையிலேயே வேலை செய்கிறதா இல்லையா' என்று தெரிந்துகொள்ள வேண்டாமா?” என்று தினமும் சரிபார்த்துக்கொண்டே இருந்தால், நீங்கள் எங்கும் போய்ச்சேர மாட்டீர்கள். அதனால் வருடத்திற்கு ஒரு முறை வேண்டுமானால், 'நாம் முன்னேறுகிறோமா பின்னோக்கிச் செல்கிறோமா' என்று பார்க்கலாம். வருடம் முழுவதும் நீங்கள் சாதனா செய்து வந்திருந்தால், இந்த 'திரண்ட வெண்ணையைக் கையிலெடுக்கும்' சாதனாவின்போது 'எவ்வளவு கிடைத்திருக்கிறது?' என்று பார்த்துக்கொள்ளலாம்.

shivanga, sadhana,bhairavi temple

உங்கள் உடல், தான் இந்த பூமியின் ஒரு அங்கம் என்பதை மிகத்தெளிவாக புரிந்துகொள்ளும் அளவிற்கு அதனை ஒரு சௌகரியமான நிலைக்குக் கொண்டுவருவதுதான் இந்த சாதனா. இந்த பூமியில் தான் ஒரு அங்கம் என்பதை உடல் புரிந்துகொள்கிறது, நீங்கள் உங்களை வேறேதோ என்று நினைத்துக்கொள்வதுதான் மொத்தப் பிரச்சனையுமே.
தான் பூமியின் ஒரு அங்கம்தான் என்பதை உடல் தெளிவாகப் புரிந்துகொள்வதால், நீங்கள் சற்று சௌகரியமான நிலைக்கு வரும்போது உங்கள் ஆன்மீகம் சுலபாமாகி விடுகிறது. உங்களுக்கு 'நான் இந்த உடல் இல்லை' என்பது புரியவில்லை என்றாலும், உங்கள் உடலுக்கு இது புரிந்துவிடுவதால் எல்லாம் சௌகரிய நிலைக்கு வந்துவிடும். இந்த சௌகரியமும், தன்னைச் சுற்றியுள்ள பஞ்சபூதங்களுடன் இந்த சுகமான இணக்கமும் உடலுக்கு மிகவும் முக்கியமானது.

shivanga, bhairavi, samarpanam, offerings

பெண்களுக்கான சாதனா இம்மாதம் 27 ஆம் தேதி முடிவடைந்து, அன்றைய தினமே ஆண்களுக்கான சாதனா துவங்குகியது. வெண்ணை எவ்வளவு திரண்டிருக்கிறது என்று பார்க்கும் சாதனா இது. என்னைக் கேட்டால் ஒரு ஜென்மத்திற்கு ஒரு முறை பார்ப்பதுதான் சிறந்தது. ஆனால் இதுதான் கடைசி ஜென்மம் என்றால், நீங்கள் முன்னேறுகிறீர்களா என்று வருடத்திற்கு ஒரு முறை சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

நீங்கள் பயணம் செய்யும் பாதையைப் பற்றிய தெளிவு இல்லாதபோது மைல்கற்கள் அவசியம். கவனமாகப் பயணம் செய்யும் ஒருவருக்கு, மைல்கல் என்பது அவர் சரியான பாதையில்தான் செல்கிறார் என்பதை உறுதி செய்ய உதவுகிறது. ஆனால் தன் பாதையைப் பற்றியும் பயணத்தைப் பற்றியும் உறுதியாகத் தெரிந்தவர்களுக்கு, மைல்கல் என்பது நேரத்தைச் சரிபார்க்க மட்டும்தான் உதவ முடியும்.

சாதனா பல வகைகளில் இருக்கலாம், வேலைகளையும் செயல்களையும் பல நிலைகளில் செய்யலாம், ஆனால் அறுவடை செய்வதுதான் அனைத்திலும் மிக இனிப்பானதாகும்.
சாதனாவின் ஆனந்தத்தையும் அறுவடை செய்வதின் பரவசத்தையும் உணர்ந்திடுங்கள்.

Love & Grace