தெய்வ கீதத்தின் இசையாய் நீயே ஆவாய்

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், ஒருவர் தன்னைக் கரைத்து ஒரு பாடலாக வாழ்வதைப் பற்றிய புதுக் கவிதை ஒன்றைப் படைத்திருக்கிறார் சத்குரு. " வெற்று மூங்கிலில் நுழையும் காற்று/ அற்புத இசையாய் அகிலம் மயக்கும்/சொந்தத் திரவம் நிரம்பிய மூங்கிலோ எந்த நேரமும் ஊமையாய் இருக்கும்/ படைப்பு முழுமையும் பரவசப் பாடல் வெடித்துக் கிளம்பும் வசந்தவேளையில்..." படித்து மகிழுங்கள்!
 
 
 
 

 

தெய்வ கீதத்தின் இசையாய் நீயே ஆவாய்

வெற்று மூங்கிலில் நுழையும் காற்று
அற்புத இசையாய் அகிலம் மயக்கும்
சொந்தத் திரவம் நிரம்பிய மூங்கிலோ
எந்த நேரமும் ஊமையாய் இருக்கும்
படைப்பு முழுமையும் பரவசப் பாடல்
வெடித்துக் கிளம்பும் வசந்தவேளையில்
இனிய கீதம் உனக்கும் கேட்டிட
உன்னைக் கொட்டி வெறுமையாக்கிடு
குருவின் விருப்பத்தில் முழுவதும் கரைகையில்
தெய்வ கீதத்தின் இனிமையாய் இசையாய்
நிறையும் மணமாய் நீயே ஆவாய்

 

அன்பும் அருளும்