சிங்கப்பூரிலிருந்து ஒரு கடிதம்

மார்கழியும் கழிந்தது, தையும் பிறந்தது... வசந்தமும் மலர்ந்தது. இந்த கால மாற்றத்தினால் நமக்கு பல நிலைகளில் ஏற்படப்போகும் தாக்கத்தையும், அதை நம் ஆன்மீக வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும் உக்திகளையும் சொல்லும் சத்குரு, கடந்த வாரம் சிங்கப்பூரில் நடந்த வகுப்பு அனுபவத்தையும் சேர்த்து இந்த வார சத்குரு ஸ்பாட்டில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். தொடர்ந்து படியுங்கள்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சூரியன் மகர ராசிக்கு நகர்ந்து விட்டான். உயிரின் உத்வேகம் குறைந்து, ஒருவித சோம்பல் இருக்கும் மார்கழி கழிந்து, வசந்தம் தொடங்கப் போவதன் அறிகுறி இது. சங்கராந்தியானது, நாம் அறிந்ததைவிட மேலும் முக்கியமான ஒரு நிகழ்வு. சூரியன் துருவத்தை நோக்கி நகர்வது ஒரு முடிவுக்கு வருவதை இது குறிக்கிறது. இந்த புது சூரிய சுழற்சி ஒரு புதிய துவக்கமாக பல வழிகளிலும் இருக்கும்.

இந்த நிகழ்வுகளின் தாக்கம் மனித உடலிலும், மனித விழிப்புணர்விலும் ஒரளவு ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தக் காலகட்டத்தில், அதிக நேரம் வெளியில் செலவிட்டால், உங்கள் உடல் ஒரு மேம்பட்ட சக்திக்கும், நலவாழ்வுக்கும் தன்னை தயார்படுத்திக் கொள்ளும்.

சூரியன் சம்பந்தப்பட்ட பயிற்சிகளான சூரிய கிரியா, கபாலபாதி போன்றவற்றில் இருந்து அதிக பலன்களை இந்தக் காலத்தில் பெறலாம். உடலில் உஷ்ணம் உருவாக்கும் எள்ளு, கொள்ளு போன்ற பொருட்களை உட்கொள்வதும் நல்லது. இந்த காலகட்டத்தில், ஷீதள (சளி/குளிர்ச்சி சம்பந்தப்பட்ட) நோய்களை சரிசெய்து கொள்ளும் திறன் உடலுக்கு மிக அதிகமாக இருக்கும். பல நாள் ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் குணம் பெறக்கூடிய நேரம் இது.

ஆன்மீக தீட்சை பெற்றவர்களுக்கு, குறிப்பாக ஈஷா தியான அன்பர்களுக்கு, வரக்கூடிய மாதங்கள் சிறப்பான அம்சத்தை அடையக் கூடிய காலம். இதைப் பற்றி விரைவில் சொல்கிறேன்.

இன்னும் சிங்கப்பூரில் தான் இருக்கிறேன். ஒரு நாள் "மிஸ்டிக் ஐ" (Mystic eye) நிகழ்வு மிக உற்சாகமான, நேர்த்தியான 2000 பேருடன் நிகழ்ந்தது. இங்குள்ள ரிட்ஸ் கால்டனில் பரேஷ் மைடி, மற்றும் பியுஷ் குப்தா (CEO - DBS bank) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற ஒரு தனிப்பட்ட நிகழ்வில், "The Three Truths of Wellbeing" புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.

இப்போது ஜம்பு த்வீபம் (Jambu Dwipa) கிளம்பிக் கொண்டிருக்கிறேன்...

அருளுடன்,