சாதனை படைத்த டெட்ராய்ட் வகுப்பு

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், அமெரிக்காவிலிருந்து நமக்கு அன்புக் கடிதம் எழுதியிருக்கிறார் சத்குரு. பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஹெலிகாப்டரில் தாமே ஓட்டிச் சென்றது, டெட்ராய்டில் நடைபெற்ற பிரம்மாண்டமான இன்னர் இன்ஜினியரிங் வகுப்பு என்று பல விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். படித்து மகிழுங்கள்!!!
 
 
 
 

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், அமெரிக்காவிலிருந்து நமக்கு அன்புக் கடிதம் எழுதியிருக்கிறார் சத்குரு. பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள ஹெலிகாப்டரில் தாமே ஓட்டிச் சென்றது, டெட்ராய்டில் நடைபெற்ற பிரம்மாண்டமான இன்னர் இன்ஜினியரிங் வகுப்பு என்று பல விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். படித்து மகிழுங்கள்!!!


டென்னிசியில் இலையுதிர் காலம் மிகவும் வண்ணமயமான மனநிலையில் - இப்பருவத்தின் உச்சபட்ச அழகுடன் திகழ்கிறது. டெட்ராய்ட்டில் சாதனைகள் படைத்த ஒரு இன்னர் இன்ஜினியரிங் பயிற்சி வகுப்புக்குப் பிறகு மிச்சிகனிலிருந்து இப்போதுதான் டென்னிசிக்கு வந்து சேர்ந்தேன். கார் தயாரிப்பின் முன்னோடி நகரமான டெட்ராய்ட் பொருளாதாரரீதியாக ஒரு மோசமான காலகட்டத்தில் இருந்தாலும், இன்னர் இன்ஜினியரிங் வகுப்பு நடத்தப்படுவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு மிக நல்ல வரவேற்பு இருந்தது. இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை குறையில்லாமல் ஒருங்கிணைத்து நடத்தினர் நம் டெட்ராய்ட் தன்னார்வத் தொண்டர்கள்.

முதல் முறையாக, நான் முதன்மை பைலட்டாக இருந்து, அட்லாண்டாவிற்கும், இன்டியானாபொலிசுக்கும், டெட்ராய்ட்டை நோக்கி ஒரு நெடிய பயணத்தையும் மேற்கொண்டு திரும்பினேன். அது மட்டுமில்லாமல், டர்பன் சக்தியூட்டப்பட்ட ஹெலிகாப்டரை முதல் முறையாக இயக்கினேன். வானில் நடப்பதற்கான எனது பெருமுயற்சிக்கு இந்த அனுபவம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

பொருளாதாரக் கல்வி அளிப்பதில் மிக உயர்வாக மதிக்கப்படும் பாஸ்டனில் இருக்கும் எம்.ஐ.டி. மற்றும் மிச்சிகனில் இருக்கும் ராஸ் ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் நம்மை மிகுந்த உற்சாகத்துடனும், பாராட்டுதல்களுடனும் வரவேற்றன. இந்த கல்வி நிறுவனங்களில் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் அத்தனை தீவிரத்துடன் கல்வி கற்பிக்கப்படுவதைப் பார்க்கும்போது, நம் நாட்டு மக்கள் உலகின் எந்தப் பகுதியிலும் திறமையுடன் போட்டியிடுவதற்கும், இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்தை செலுத்திச் செல்லும் சிறப்பான நிறுவனங்களை உருவாக்குவதற்கும் நாம் நிறைவேற்ற வேண்டிய மிக முக்கியமான இலக்கு நம் நாட்டிலும் இது போன்ற மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களை உருவாக்குவதுதான் என்று தோன்றுகிறது. இதன் மூலம் பெருமளவு மக்கள் வறுமை நிரம்பிய சூழல்களிலிருந்து, இன்னும் அதிக தரமிக்க வாழ்வியல் சூழ்நிலைகளுக்கு நகர முடியும்.

நம்மிடம் வழங்கப்பட்டிருக்கும் இந்த அசாத்திய பொறுப்பிற்கும், சிறப்புரிமைக்கும் நியாயம் கற்பிக்கும் வகையில் நாம் நடந்து கொள்வோம் என்று நம்புவோம்.

அன்பும் அருளும்

 
 
 
 
Login / to join the conversation1
 
 
7 வருடங்கள் 3 மாதங்கள் க்கு முன்னர்

great