ருத்ரா
அமெரிக்க பயணத்தில் இருக்கும் சத்குரு, பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சியில் தன் கண் முன் கண்ட காட்சியைக் கொண்டு வடித்த கவிதை இந்த வார சத்குரு ஸ்பாட்டாய் மலர்ந்துள்ளது. சத்குருவின் எழுத்தெங்கும் ருத்ரனின் வாசம்... படித்து மகிழுங்கள்.
 
 
 
 

அமெரிக்க பயணத்தில் இருக்கும் சத்குரு, அங்கு நடந்த பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சியில் தன் கண் முன் கண்ட காட்சியைக் கொண்டு வடித்த கவிதை இந்த வார சத்குரு ஸ்பாட்டாய் மலர்ந்துள்ளது. சத்குருவின் எழுத்தெங்கும் ருத்ரனின் வாசம்... படித்து மகிழுங்கள்.

உன் முதல் கர்ஜனையில்...
உந்தன் வெறுமையிலிருந்து
உதித்தன பால்வெளிகள்!

இதோ! எங்களை கட்டிப்போட்டிருக்கும்
கர்மத் தளைகளைக் களைந்தெறிவதற்கே
இங்கு நாமிடும் இந்த ஓலங்கள்!

ஒரே கர்ஜனையில்
அண்ட பிரம்மாண்டம்
அனைத்தையும் நீ உருவாக்க,
எங்களின் ஒரே கர்ஜனையில்
எண்ணிலடங்கா
எங்கள் படைப்புகளை
நாங்கள் கரைக்க துடிக்க!

எங்களது கூக்குரலும்
சக்திமிகு உனது கர்ஜனையும்
ஒத்திசைந்து செல்லுமென்பதே
எமது நம்பிக்கை!

நாங்கள் இட்ட ஓலங்கள்
எங்கள் குரல்வளையை கிழித்துச் செல்ல,
சூட்சுமக் கதவுகளும்
முழுமையாய்த் திறந்து கொண்டன!

ஓ! எங்கள் அற்ப சப்தங்கள்
உன் கர்ஜனையுடன் சுதி சேராதோ!

Love & Grace

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1