என்னுடைய பதினேழாவது வயதில், தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுக்கு நான் செல்லவிருந்தபோது, என் அம்மா, அக்கா அனைவரும் கண்களில் கண்ணீர் மல்க, என் அப்பா பதட்டமாக இருந்தது எனக்கு இன்றும் தெளிவாக நினைவிருக்கிறது. நான் போர்க்களத்திற்கு செல்லவில்லை, நுழைவுத் தேர்வுக்கு செல்வதற்கே அப்படி இருந்தார்கள். பாதுகாப்புப் படைவீரர்களின் குடும்பத்தினரை சந்திக்கும்போது எப்போதுமே என்னுள் நான் நெகிழ்ந்துபோகிறேன். தனக்கு அன்பானவர் ஆபத்துடனேயே செயலாற்றுகிறார் என்பதை அறிந்தே அவர்கள் ஏற்கிறார்கள் என்பது என்னை நெகிழச்செய்கிறது.

ஒரு மூத்த அதிகாரியின் மனைவி என்னிடம் இதைச் சொன்னார், அவர்களுடைய 36 வருட திருமண வாழ்வில் அவர்கள் இருவரும் 12 வருடங்கள்தான் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள் என்றார். அவர்களுக்கு திருமணமான புதிதில், 21 நாட்களுக்கு ஒன்றாக இருந்தபிறகு, அவர்தன் கணவரை நான்கு ஆண்டுகளாக பார்க்கவில்லை, அவர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். தனது கணவனைப் பற்றிய கெட்ட செய்தி வந்துவிடுமோ என்ற தவிர்க்கமுடியாத பயத்துடன் காத்திருக்கும் புதுப்பெண்ணாக வாழ்ந்த ஒரு உன்னத பெண்ணின் தியாகத்தை நாம் எப்படி ஈடுசெய்வது!

இந்த வீரர்களுடன் இருப்பதற்காக லே, லடாக் மற்றும் சியாச்சின் பனிப்பாறைக்கு சென்ற இந்த சுருக்கமான பயணம், எனக்கு மிகவும் ஆழமிக்கதொரு பயணமாக அமைந்தது. சியாச்சின் வாரியர்ஸ் என அழைக்கப்படும் இந்த வீரர்கள், கடல்மட்டத்திலிருந்து 18,000 முதல் 22,000 அடி வரையிலான உயரங்களில் பணியாற்றுகிறார்கள். 30 நாட்களுக்கு மேல் தங்களை தயார்செய்கிறார்கள், சிகரத்தை அடைய 25 நாட்கள் எடுக்கும், பிறகு அங்கு 120 நாட்கள் தங்குகிறார்கள். அந்த உயரத்தில் தங்கும்போது, வெப்பநிலை -25° முதல் -45° செல்சியஸ் வரை இருக்கும்போது, உடலின் இராசயன அமைப்பு பேதலித்துப்போய் உயிருக்குப் பாதகமாய் அமையக்கூடும்.

அங்கு எதிரியுடனான போர் அவ்வப்போது நிகழலாம், ஆனால் இயற்கையுடனான போர் ஒவ்வொரு கணப்பொழுதும் இடைவிடாது நிகழ்கிறது.

சரியான யோகப் பயிற்சிகள், இயற்கையின் தாக்குதலினால் ஏற்படும் போராட்டத்தை வெகுவாக லேசாக்கிவிட முடியும்.

லடாக் நகரம் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம், மிக அழகான நிலப்பரப்பு கொண்டது. இதைக் காண்போர் சந்திரனில் காலடி பதித்துவிட்டோமோ என்று ஐயமுறக்கூடும். இவ்விடம் திபெத்திய பள்ளத்தாக்கை ஒத்தது, ஆனால் தனக்கே உரிய பாணியில் அதிலிருந்து மாறுபட்ட தனித்துவமான இடம். வாகனம் ஓட்டுபவருக்கு சவாலான இவ்விடம் மிகவும் களிப்பூட்டுவதாய் அமைந்தது, நானும் முழுவீச்சில் வாகனத்தை செலுத்தினேன். நீண்டகாலத்திற்குப் பிறகு ஒரு சக்திவாய்ந்த இயந்திரத்தை அதன் எல்லைவரை செலுத்துகிறேன். பல இளைஞர்கள் - ஆண்களும் பெண்களும் மோட்டார்சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவதை கவனித்தபோது மனமகிழ்ந்தேன். ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு புத்துயிர் தந்தமைக்கு நன்றி, இன்று பலரால் குறைந்த செலவில் நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ள முடிகிறது. நான் தேசம் முழுவதும் பைக்கில் பயணம் செய்தபோது, என் பிறந்த ஊரான மைசூரில் தயாரிக்கப்பட்ட செக் நாட்டு பைக் மாடலான 250 சிசி ரோடுகிங், யேஜ்தி/ஜாவா பைக்கை ஓட்டினேன்.

இவ்வளவு வருடங்களுக்குப் பிறகும், நான் பல தருணங்களில் என் வாகனத்தை சவாலான சாகசங்களைச் செய்ய முடுக்கியபோது, அந்த zero idling இயந்திரம் செய்த கர்ஜனை இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது (zero idling என்றால் அதிகவேகத்தில் செல்வதற்காக சீரமைக்கப்பட்ட பைக், இதன் வேகத்தை குறைத்தால் பைக் நின்றுவிடும்). அப்போதுபோல 24 மணிநேரத்தில் 1000 கிலோமீட்டருக்கு மேல் செல்லவும், சிலசமயம் மூன்று நாட்களும் இரவுகளும் இடைவிடாது பைக் ஓட்டியதுபோல இப்போது என்னால் முடியாது என்றாலும், என்னில் ஒருபகுதி இன்றும் அப்படியே இருக்கிறது. அந்த பைக் எஞ்ஜினின் கர்ஜனை, எலும்பை உறையவைக்கும் குளிர்ந்த மலைக்காற்று, கொட்டும் மழை, தேன்சிட்டின் ரீங்காரம், மற்றும் இன்னும் பல விஷயங்கள் என்னை இன்றும் அதேவிதமாக உணரச்செய்கின்றன. நான் என்றும்போல இன்றும் அதே இளமையுடன் இருக்கிறேன்.

நீங்கள் இளமையுடன் இருக்கிறீர்களா? நீங்கள் சோதனைசெய்து பார்க்கவேண்டும். இளமை என்பது ஒரு குறிப்பிட்ட வயதைக் குறிப்பது அல்ல.

இளமை என்பது உயிர் உருவாகும் பருவம். நீங்கள் எப்போதுமே உருவாகும் செயல்முறையில் இருந்தால், அதாவது முடிவில்லா ஆற்றலாக நீங்கள் விரிந்தால், நீங்கள் நிச்சயம் ஒரு இளைஞர் தான். நீங்கள் விரும்பினால், உங்கள் இளமையை கவனித்துக்கொள்ள எதையெல்லாம் கண்காணிக்கவேண்டும் என்று நான் பட்டியலிட்டு உங்களுக்குத் தரமுடியும்.

துணிவான வீரர்களாக மட்டுமின்றி, கனிவாக உபசரிப்பவர்களாகவும் விளங்கும் அற்புதமான இந்திய இராணுவ அதிகாரிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.

ஆசிகள்,

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

2-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180618_SUN_0263லே, லடாக் பகுதி, சந்திரனில் இருப்பது போன்ற உணர்வைத் தரவல்லது

3-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180619_SUN_0047- இராணுவ வீரர்களின் ஆரோக்கியத்திற்கு யோகா

4-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180619_SUN_0633-e_0.jpgபாதுகாப்பு அதிகாரிகளின் குடும்பத்தினரை சந்தித்தபோது

5-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180619_SUN_0663-e.jpg

"நன்றியில் உருகும் ஒரு கணப்பொழுது, வாழ்வையே மாற்றவல்லது!" சத்குரு

6-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180620_SUN_0081-e-e.jpgலே நகரத்தில் பிரசித்திபெற்ற சாந்தி ஸ்தூபா

7-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180620_SUN_0107லே நகரத்திலிருந்து சியாச்சின் செல்லும் வழியில்

8-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180620_SUN_0124

9-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180620_SUN_0242மரணத்தை சந்திக்கத் தயாராக இருப்பதென்றால் மிகவும் சீரயஸாக இருப்பதல்ல

10-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-10-20180620_SUN_0280இரக்கமற்ற நிலப்பகுதி, கனிவான உபசரணை

11-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180620_SUN_0311நாட்டிற்காக உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுவோருடன் கைகுலுக்கியபோது

12-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180620_SUN_0323இயற்கை அதன் பரிசுத்தமான அழகில்

13-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180620_SUN_0339புறக்காவல் மையங்களில் இருக்கும் வீரர்களுடன்

14-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180620_SUN_0393

15-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180620_SUN_0429

16-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180620_SUN_0478வாகனம் ஓட்டுபவருக்கு சாகசமான பயணம்

17-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180621_SUN_0178தீவிரமான சியாச்சின் வீரர்களுடன் தீவிரமான யோகி

18-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180621_SUN_0303சியாச்சின் பனிப்பாறையில் சத்குரு

19-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180621_SUN_0729உச்சபட்ச தியாகமான உயிர்த்தியாகம் செய்தோருக்கு மரியாதை

21-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180622_SUN_0014கம்பீரமான மலைச் சிகரங்கள்

22-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180622_SUN_0259கடல்மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்திலுள்ள பாங்காங்க் ஏரி

23-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180622_SUN_0389வீரர்களிடமிருந்து விடைபெறும் நேரம்

24-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-20180622_SUN_0525இன்றைய மோட்டார்சைக்கிள்...

25-sadhguru-isha-wisdom-spot-sadhguru-with-indian-army-soldiers-at-leh-ladakh-siachen-living-a-warriors-life-அன்றைய மோட்டார்சைக்கிள் (தனது யேஜ்தி/ ஜாவா ரோடுகிங் பைக்கில் சத்குரு)