ஒரு உப்பு பொம்மை கடலுக்குள் விழுந்தால்...
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு அவர்கள் தன்னுடைய கவிதையான 'உப்பு பொம்மை' மூலம் பிரபஞ்சத்துடன் ஒருவர் எப்படி ஒன்றிப் போவது என்று விவரிக்கிறார். "ஒரு உப்பு பொம்மை கடலுக்குள் விழுந்துவிட்டால், அது எங்கும் போகாது, அது இல்லாமல் ஆகிவிடும். இது மிகப் பெரிய ஒரு படியாகத் தெரிந்தால், உங்கள் குருவுடன் கலந்து விடுங்கள்" படித்து மகிழுங்கள்!
 
 
 
 

நான் இளைஞனாக இருந்தபோது, ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதினேன். ஏனென்றால் அப்போது நான் ஒதுக்குப்புறமான ஒரு பண்ணையில் வசித்து வந்தேன்.

நான் அப்போது ஹேங் கிளைடர்களில் பறக்கும் வழக்கம் கொண்டிருந்ததால், அதற்காக எனக்கு ஒரு மலைச்சரிவு தேவைப்பட்டது. எனவே அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தேன்.

அந்த இடத்தில் ஒரு ஏரியும் இருந்தது. அந்த ஏரியில் செல்வதற்காக நானே ஒரு சொந்த கட்டுமரத்தை உருவாக்கினேன்.

ஏரியும், மலையும் என்னை ஈர்த்தாலும், அந்த இடம் மிகவும் ஒதுக்குப்புறமாக இருந்தது. யாரும் ஒருபோதும் அங்கு என்னைப் பார்க்க வரவில்லை.

நான் தனியாக இருந்தேன், எனவே கவிதைதான் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும் வழியாக எனக்கு ஆனது. அந்த காலகட்டத்தில் நான் நிறைய எழுதினேன். இன்றும் கூட எழுதுகிறேன். நான் எழுதிய கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு வரும் பணியில் இப்போது ஈடுபட்டிருக்கிறோம்.

 

உப்பு பொம்மை

உண்மையைத் தேடி
எங்கெங்கோ அலைந்து

மலைகளில் திரிந்து
புனித நதிகளில் நீராடினேன், பக்தர்களுடன்

குருடர்கள் சுட்டிய இடமெல்லாம்
நம்பிக்கையும் உற்சாகமுமாய் பயணித்தேன்

ஒவ்வொரு வழியிலும் வாசனையை நுகர்ந்தேன்
ஆனால் போனதெல்லாம் சுற்றிச் சுற்றித்தான்

இல்லாத ஒருவரை அறிய வீணடித்தேன் பல பிறவிகளை
ஆனால் தேடலின் தீவிரம் மட்டும் குறையவேயில்லை

மீனும் திமிங்கலமும் கூட அறியா அந்த
சமுத்திரத்தின் ஆழம் அறிய என்னதான் தேவை?

உப்பு மட்டுமே சமுத்திரமாய் மாறும்
உப்பு பொம்மையானேன், ஒரேயொரு முழுக்கு, நான் சமுத்திரமானேன்

 

"நான் ஏன் கலக்க வேண்டும்?" இது ஒரு எண்ணம் அல்ல; பிரபஞ்சத்தின் இயல்பே அதுதான்.

இதை இப்போதே நீங்கள் புரிந்து கொள்ளலாம், அல்லது நாங்கள் உங்களை புதைக்கும் தினத்தன்று, அதாவது நீங்கள் பிரபஞ்சத்துடன் கலக்கும் அன்று, புரிந்து கொள்வீர்கள்.

இப்போதே நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. இப்போதே புரிந்து கொண்டால், உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நீங்கள் அனுபவிக்கலாம்.

இப்போது நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் புரிந்து கொண்ட அன்று, நாங்கள் எங்கள் வாழ்க்கைகளை மகிழ்ச்சியாக அனுபவிப்போம்.

'நான்' என்கிற தன்மை உங்களுக்குள் நிரம்பியிருந்தால், உங்களைப் புதைத்த பிறகுதான், உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் தங்கள் வாழ்க்கைகளை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள்.

அனைத்திலும் தானும் ஒரு பகுதிதான் என்பதை அப்போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

ஆனால் இப்போதே அதை நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், சுற்றியுள்ள மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும்.

"எதனுடன் நான் கலக்க வேண்டும்?" நாம் படிப்படியாகச் செல்வோம்.

நேரடியாக பிரபஞ்சத்துடன் கலப்பது என்பது மிகப் பெரிய ஒரு விஷயம்.

"நான் எங்கு செல்வேன், எனக்கு என்ன ஆகும்?"

நீங்கள் எங்கும் போக மாட்டீர்கள், நீங்கள் இல்லாமல் போய்விடுவீர்கள்.

ஒரு உப்பு பொம்மை கடலுக்குள் விழுந்துவிட்டால், அது எங்கும் போகாது, அது இல்லாமல் ஆகிவிடும்.

இது மிகப் பெரிய ஒரு படியாகத் தெரிந்தால், உங்கள் குருவுடன் கலந்து விடுங்கள். ஏனென்றால் நீங்களாக கடலில் குதிக்க மாட்டீர்கள். குருவுடன் கலந்து விட்டால் எப்படி இருந்தாலும் அவர் உங்களை கடலுக்குள் தூக்கிப் போட்டுவிடுவார்.

Love & Grace

 
 
 
  22 Comments
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

yes .absolute gracefull being. thanks srimantha

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Thank you very much and what a beautiful poem. I wish I new how to right poems so I can right many poems just for you my Sadhguru.....

5 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

Pranam Sadguru. A wonderful poem with in depth spirtual message. It is possible only to you. I am at your feet, please accept me and merge me with Existence. You are so graceful. Please spread your grace on me.

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Pranams Sadhguru

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

divine message

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

How to merge with you Guru?

Pranam

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Sadguru, You are Omnipresent, pranams at your feet

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Merge Me

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Namashkaram sadhguru,every moment of life happens with ur grace.Thank u sadhguru pranams.

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Pranams Sadhguru

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

"do nothing"

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

_/_

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

wonderful....

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

i'm merged already... Pranams to my beloved Sadhguru...

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Keep walking...if not running...deepen your longing, dont be afraid of the pain or confusion...

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

What is merging ? What is it I should do in everyday life ? Be it office or home where most of the time I do the associated tasks by applying my mind and body as intensely I can but I dont feel happiness .. To the outside world I am successful because I thrive in my job and my family is just about doing fine ... but I am not fulfilled ... What should I do ? This is slowly taking away interest in all actions I am performing .. I keep listening to you Sadhguru I know deep down you are showing me the Path to address my exact suffering... but I dont know what I should do in my everyday life ? I dont understand what you are telling me except at the word level ..
Pranams Sadhguru

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Merge me into you Sadhguru.

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Your presence by itself the blessing and grace we receive, thank you Sadhguru.

குருநாதன்
உப்பாலே நெய்த வலையை
உப்புப் படகில் ஏற்றிக் கொண்டு
உப்பு மனிதன் வருகின்றான்
மீன் பிடிக்க.

உப்பு மீனின் உயிர் கவலை
உள்ள படியே தவறே இல்லை
குரங்கு போல் தாவும் மனதை
யார் பிடிக்க?
ஈர நெஞ்சை புரிந்து கொண்டு
அன்பு வலையில் அகப்பட்டு
தப்பாவிட்டால் எமன் வருவான்
உயிர்பிடிக்க.
வலையோடு மீன் கரைத்து
படகோடு தான் கரைந்து
கடலேதானாவான் கழலே
நாம் பிடிக்க.
விஜி

5 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

The moment I think of my guru, I am overwhelming and tears pouring out of my eyes. I want my guru's grace to merge.

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

this is outstandingly beautiful .. touched me to the core at one go .. pranams and love to sadhguru

5 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

My life was reborn with the grace of Sadhguru. No words in any language to thank you Sadhguru. I keep your presence in my heart till my Heart pumps.
I need your blessings guru.

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Sadhguru,
I was also clueless of the ocean till I got my guru," The Sadhguru" my seeking will cease not and I fear not for I have my guru, a pole star to show me the direction, a beacon light to show me the shore. MY SADHGURU!