பயம், தோற்றக் கவர்ச்சி, அருவருப்பு, உபத்திரவம் என நாம் கடந்து வர வேண்டிய உணர்வுகளை நமக்குச் சுட்டிக் காட்டுவதற்கு, நாய் பூனை பன்றி எலியைப் பாடு பொருளாக்கி கவி பாடியிருக்கும் சத்குருவின் கவிதை, இந்த வார 'சத்குரு ஸ்பாட்'டாக...

உயர்ந்தது எது?
நாய்களா...? பூனைகளா...? பன்றிகளா...? எலிகளா...?
இதில் உயர்ந்தது எது?

இங்கே சில உண்டு குரைப்பதும் கடிப்பதுமாய்
அதன் ஆயுதங்களோ பயத்தை விதைப்பதாய்
அனைத்தையும் நெறிப்படுத்தும் பயத்தின் பண்புகளோ சொல்லி மாளாது
எப்போதும் உன்னை பதை பதைக்கச் செய்யும்
மூச்சோடு சேர்த்து அனைத்தையும் ஒடுக்கும்
பயமே பின் வாழ்கையாகும்
பயம் என்பது வாழ்கின்ற மரணமாகும்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சிலவோ மெல்லிய குரலில் 'மியாவ்' என்று வருகிறது
பட்டில் இழைத்த மெல்லிய தோலுடன்
கட்டி இழுக்கிறது அதன் மினுமினுப்பு
தோற்றக் கவர்ச்சியால் வசீகரிக்கும் உயிரது
வியாபாரியிடமுள்ள இனிப்பில் கலந்த விஷமாய் - அது
போடும் விலங்கோ சங்கிலியால் அல்ல பூவிலங்காக
தப்பிக்க வழியின்றி உன்னைச் சிக்க வைக்கிறதே!

இன்னும் சிலவோ நாற்றமும் உறுமலுமாய்
அவ்வகை உறுமலை செய்ய வேண்டுமாயின்
முதுகொடியக் குனிந்து மூக்கால் கனைப்பதோடு
வயிற்றில் ஏதேனும் தீனியும் போட வேண்டும்
சேறும் சகதியுமே அதிகாரப்பூர்வ இருப்பிடமாக
அருவருப்பானாலும் அவற்றைப் புறக்கணிக்க வழியில்லை

உனதென சேகரித்த பொருளையெல்லாம்
படபடவென கடித்துப் போடும் வேறு சில;
போற்றிப் பாதுகாக்கும் மணநாள் உடையானாலும்
கொள்ளுப் பாட்டி விட்டுச் சென்ற பட்டுச் சேலையானாலும்
அது நீ வணங்கும் பொருளிலெல்லாம்
தன் வாய்வைத்து வேலை காட்டும்
காணக் கிடைக்காத பொருளையெல்லாம்
கடைசியில் காணாமல் செய்துவிடும்
கொஞ்சம் விட்டு வைத்தால்
துளைத்துத் துளையிட்டு உன் உயிருக்குள் நுழைந்துவிடும்
ஆஹா! இதுதான் உயிரில் கலந்த உறவோ?!

நாயும் பூனையும் பன்றியும் எலியும்
பரிணாமப் பாதையிலே பரபரத்து வந்தவையோ?!

Love & Grace