கிறங்கினேன் – வாழ்வு குறித்த கவிதை

அவரது சமீபத்திய “கிறங்கினேன்”- கவிதையில், சத்குரு அவர்கள், பிரகாசமான இரவின் கம்பீரமான பிம்பங்களையும், அவருடைய சுவாசம் மற்றும் இதயத்துடிப்பின் நெருக்கமான உணர்வுகளையும் தட்டி எழுப்பி உங்களைத் தன்பால் ஈர்க்கிறார். “என்றும் நிலைத்திருக்கும் இந்த இயக்கத்தின் குளிர் நெருப்பு/ ஒன்றும் எரித்ததில்லை என்னை ஆனால் என் இருப்பு/ இன்றும் பரவசத்திலும் கிறக்கத்திலும்“- என்ற கடைசி வரிகளில், வாழ்வு மற்றும் வாழ்வின் மூலத்தைப் பிரதிபலிப்பதன் வாயிலாக, அவரது கருத்தை ஓர் தேனடையின் இறுதித் துளி போல வடித்தெடுக்கிறார்.
 
kiranginane-vazhvu-kurithu-kavidai
 
 
 

கிறங்கினேன்

மலரின் நறுமணம்

மென் காற்றின் குளிர்ச்சி

இரவின் விண்ணொளி வைபவம்

இதயத்தின் இடையறாத சம்மட்டியொலி

இன்னுமின்னும் இயங்கும் இதமான மூச்சு

இத்தனை நிகழ்வுகளும் வெளிப்பார்வைக்கு பதமானவை

பரிவாக இவை எனக்கு உயிரூட்டுகிறது, துடிப்பூட்டுகிறது

எரிதழல் தீவிர வாழ்வுக்கு என்னைத் தாரை வார்க்கிறது.

மேற்பார்வைக்கு அழகான நம்புதற்கு அரிதான இந்த

மதியுகக் கலவையனைத்தும்

மனமற்ற, எண்ணமற்ற, எல்லாம் கடந்த

மகத்தான அறிவின் விளைவாகத்தான் இருக்கமுடியும்.

என் வாழ்வுதன்னை அது அடிமைகொண்டது

எந்த மேம்பூச்சும் இல்லா வாழ்வு

ஏக்கங்கள் தொலைத்த வாழ்வு

எல்லையில்லா விருப்பம் தரித்த வாழ்வு

என்றும் நிலையான இந்த இயக்கத்தின் குளிர் நெருப்பு

ஒன்றும் எரித்ததில்லை என்னை ஆனால் என் இருப்பு

இன்றும் பரவசத்திலும் கிறக்கத்திலும்.

அன்பும், அருளும்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1