காசி

 

வானளாவிய உயரம்கொண்ட அந்த கோபுரவிளக்கு

பிரபஞ்சத்தை எட்டிய அந்த புண்ணிய மாநகரம்

ஈர்த்தது தன்பால் எல்லாவித மானுடர்களையும்!

கலைஞர்களும் வணிகர்களும், பண்டிதர்களும் புரோகிதர்களும்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆண்டிகளும் வியாபாரிகளும் மற்றும் எல்லாவித பேரார்வலர்களும்

மொய்த்தனர் மோட்சத்தின் காம்பினை சுவைக்க!

இப்புனித மண்ணைத் தழுவ தன்வழி மறந்து

வளைந்து வந்தாள் கங்கைத் தாய்!

அந்த சம்போ மஹாதேவனையும் வசீகரித்த மாய நகரமல்லவோ!

மனித நினைவுகளில் மங்கிப்போன அந்த மகாச்சிறந்த காசி மாநகரம்

பொலிவிழந்து நிற்கிறது - புனிதத்தை மறந்து, அலட்சியமும் பேராசையும்

கொண்ட அந்த இரக்கமற்றவரின் படையெடுப்பால்...

புண்ணியக் காசியே மீண்டும் எழுக!

அனைவரையும் உம் தெய்வஒளியால் நனைத்திடுக!

Love & Grace