கலத்தல்

கொதிப்பும் கொந்தளிப்புமாயுள்ள அரபிக்கடலினுள் மூக்குநீட்டி எட்டிப்பார்க்கும் நிலத்தில் நானிங்கு அமர்ந்திருக்க, கடலின் சீற்றங்களும் மௌனங்களும் நிலத்தின் கதகதப்பிலிருந்து காண்பவருக்கு மனதை மயக்குகிறது, கடல்மேல் செல்பவரோ வேறு கதை சொல்வார். விளையாடுபவரும் பார்வையாளரும் போல் ஒருவர் ரசிக்கும் சாகசங்களுக்கும் சிலிர்ப்புக்கும் ஒருவர் கொடுக்கும் விலையுண்டு. வெள்ளமும் வடியாமையும் மூழ்குவதுமான சின்னச்சின்ன மனிதப் போராட்டங்கள் போக கொட்டும் கார்க்காலத்தின் கொள்ளை அழகோ ஈடுஇணை இல்லாதது.   நம் போராட்டங்கள் கடந்து காண்போம் வறண்ட நிலமும் பிற உயிர்கள் அனைத்தும் கட்டற்ற கலவியில் அழகாய்க் கலப்பதில் உணரும் நிறைவை நாமும் உணர்வோம்.  

அன்பும் அருளும்,

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.