இந்தவார சத்குரு ஸ்பாட்டில், பிரம்மாண்டமான கைலாயத்தைக் கண்டு சத்குரு கொண்ட வியப்பை உரைநடையாகவும் கவிதையாகவும் வடித்துள்ளார். கைலாயத்தின் கம்பீர வடிவத்தையும், மானசரோவர் மற்றும் ஈஷா புனிதப்பயணத்தில் இணைந்தவர்கள் சென்ற இன்னும் சில இடங்களையும் புகைப்படங்களாகத் தொகுத்துள்ளோம்.

நேபாளத்தில் ஐந்து நாள் மலையேற்றம், வியப்பில் மூச்சுத்திணரவைக்கும் அளவு அழகுபொங்கும் நிலப்பரப்புகளையும் அன்னபூரணா சிகரத்தையும் கடந்து ஹெலிகாப்டர் பயணங்கள், இன்னும் பல -இவையனைத்தும் கைலாயத்தின் பிரம்மாண்ட இருப்பில் கரைந்துபோகின்றன. பயணத்தில் எதிர்கொள்ளும் சோதனைகள், புண்ணான தசைகள், கடுமையான சீதோஷணநிலை, சகிக்கமுடியாத கழிப்பறைகள் -இவ்வனைத்தும் கைலாயத்தைக் கண்ணுற்றவுடன் ஒன்றுமில்லாது போகின்றன. தர்ஷன் என்ற இடத்தில் -இங்கே தார்ஷேன் என தவறாக உச்சரிக்கப்படுகிறது -மலையிறங்கி வந்தபோது நாங்கள் அனைவரும் சற்று திகைத்துவிட்டோம். இந்த பிரம்மாண்ட வடிவத்தைக் கண்டு கிறங்கிப்போகும் அனுபவத்தை அனைவரும் அறிவீர்களாக! வருடாவருடம் இவ்வடிவத்தின்மீது நான் கொண்டுள்ள வியப்பு வளர்ந்துகொண்டேதான் போகிறது, என்னை திகைக்கச்செய்து, நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் ஒன்றால் என்னை நனைத்துவிடுகிறது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கைலாயம்

பிரம்மாண்ட ஆற்றல் கொண்ட
கம்பீரமான ஓர் உயிர், தன்
அபாரமான ஞானத்தை பகிர்ந்துகொள்ள
ஏக்கம்கொண்ட போது, இடையறாது
பொங்கிவரும் இந்த ஞானவெள்ளத்தை
உள்வாங்கிக்கொள்ள, தேடுதல்
கொண்டோர் அனைவரையும்
தகுதியற்றவர்களாகக் கண்டார். ஞானம்-
இருப்பதனைத்தும் இல்லாததும் பற்றி.

படைப்பின் எல்லா வடிவங்களையும்
உள்ளடக்கும் ஞானம், படைப்பின்
ஆழங்களையும், இருக்கும் அனைத்தின்
அடிப்படையும் உட்பட. இவ்வனைத்தும்
சுமக்கும் பரந்த உள்ளம் கொண்ட
சீடன் கிடைக்காது,
இப்புனிதப்பாறையைத் தேர்வுசெய்தார்.

நிரந்தரமாய் அறியாமையில் உழல,
எந்த மூடனும் இதை
இன்னுமொரு பாறையென
நடத்தாதிருக்கட்டும். இப்பாறை,
மனிதரனைவருக்கும் மேலானதாய்
தேர்ந்தெடுக்கப்பட்டதென
அனைவரும் அறிந்திடட்டும்.

Love & Grace