கைலாஷ் மானசரோவர் - மேன்மை பொருந்திய இடம்

கைலாய அடிவாரத்திலிருந்து, கைலாயமெனும் வார்த்தைகள் கடந்த பிரம்மாண்டம் குறித்து ஒரு சுருக்கமான பதிவை இந்த வார ஸ்பாட்டில் சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். அதோடு, யாத்திரையின்போது எடுக்கப்பட்ட அற்புதமான காட்சிகளின் தொகுப்பும் வீடியோவாக...
 
ஆகஸ்ட் 9, 2017
தார்ச்சென்

மானசரோவரின் மாயாஜாலமும் கைலாயத்தின் பிரகாசமும் அனைவரையும் வாயடைத்துப் போகச் செய்கிறது. எதேச்சையாக நிகழ்ந்ததாக கருத முடியாத அளவு, மனிதர்கள் அதிசயமாக குணமடைந்த கதைகள் ஏராளம். இது ஒவ்வொருவரிலும் ஏற்படுத்தும் ஆழமான தன்னிலை மாற்றம் திகைக்க வைக்கிறது.

வெள்ளமென கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது, பேனா மை ஓடுவது சுலபமல்ல.

இந்த மேன்மை பொருந்திய இடத்திற்கும், இதை நிகழ்த்துவதில் பங்குவகித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.