இறந்த காலத்தை ஊதித் தள்ளும் காற்று

இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சக்தி வாய்ந்த மாற்றங்களை ஏற்படுத்தும் காற்றைப் பற்றி எழுதுகிறார் சத்குரு. "இந்த வெள்ளியங்கிரியின் மலைச்சாரலில், காற்று இந்த வருடமும் தனக்கே உரிய அழகுடனும் சீற்றத்துடனும் வீசிக் கொண்டிருக்கிறது. ஆசிரமத்தில் இருக்கும் சில பேர் இதை வாயு பகவானின் கொண்டாட்டமாகக் கருதாமல் தொந்தரவாகக் கருதுவார்கள் என்று எனக்குத் தெரியும். சில நேரங்களில் மலையிலிருந்து வரும் காற்று மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசிக் கொண்டிருக்கிறது.இந்த காற்று பழையனவற்றை அடித்துச் சென்று ஒருவர் ஆன்மீகப் பயிற்சிகளை புதிதாக துவக்குவதற்கான ஒரு அடையாளம்." படித்து மகிழுங்கள்!
 
 
 
 

[twocol_one]

click on photo to zoom

click on photo to zoom

[/twocol_one]
[twocol_one_last]
[translate lang=english]

 

This month between the previous full moon, and the significant one that is coming up in two days, is the time when the grace of Aadhi Yogi fell upon the Sapta Rishis, or the seven sages. These are the classic seekers of the spirit. And the only ones till then to get the attention from a being beyond all limitations that we know as life.

As I sit here at the foothills of Velliangiri, the annual fest of the wind is on in all its beauty and fury. I am sure quite a few people in the ashram experience this wind as a nuisance, rather than as a festival of vayu – the wind god. Sometimes, the winds are coming down from the mountain at 120kms per hour. These are winds of change; we are shifting from Uttarayana to Dakshinayana. A significant change in the way the planet’s energy spheres operate. The winds are significant as a symbol of blowing away the past and beginning a fresh cycle of sadhana. Very significant for all spiritual seekers.

Unthinkingly, I picked the date for the first and only Wholeness Program in 1994. It was 12th July and we were in the month of the Guru. This is the beauty of our lives, once you are in grace of the Guru, He takes care of all the detail that you yourself may overlook. Gratitude to the Aadhi Yogi. I did not choose a bad partner – did I. In fact, you can never have a better one.

This week has been pathbreaking for Isha as we moved into Bengaluru for the first ever program by me. The response from the people of Bengaluru has been nothing short of phenomenal and indicates what is coming. This has been the largest English-language program anywhere. Nearly 3,000 people - wonderful sense of discipline and participation, and quite a spectacular conclusion.

It beats me to see how different people in Karnataka are after being with the raw intensity of Tamil people. It is amazing and funny that people should be so different, though geographically, just across. Bengaluru, for sure, will see more of Isha in the coming years.

We also laid the foundation stone for the first full-fledged Bhairavi temple outside Coimbatore. After an early morning drive from Bengaluru to Salem, a quaint little ceremony of establishing a pre-consecration form of Bhairavi. A few thousand people had gathered for this little ceremony and there are no words to describe their eagerness and devotion. This is a new beginning, there’s a lot more to come.

I will offer a special Darshan on the day of Guru Pournami between 6:20pm to 6:40pm India time. Wherever you are, make yourself receptive. You will not miss the presence and grace.

[Guru Pournami will take place Thursday, July 14th. Sadhguru will offer a special Darshan on this day between 6:20pm to 6:40pm India time (1:50pm to 2:10pm London, 8:50am to 9:10am New York). You can make yourself more receptive to the Presence and Grace by sitting in silence during this time wherever you may be. Read more about this auspicious month.]

[/translate]
[translate lang=tamil]

சென்ற பௌர்ணமிக்கும், இன்னும் இரு நாட்களில் வர இருக்கும் பௌர்ணமிக்கும் இடையே உள்ள இந்த மாதத்தில்தான் ஆதி யோகியான சிவனின் அருட்பார்வை சப்தரிஷிகள் என்றழைக்கப்படும் ஏழு முனிவர்களின் மேல் விழுந்தது. இவர்கள்தான் முதல்தரமான ஆன்மீக தேடல்வாதிகள். இவர்கள்தான், நமக்கு நாமே வகுத்துக் கொண்ட எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் கவனத்தை முதன்முதலில் ஈர்த்தவர்கள்.

இந்த வெள்ளியங்கிரியின் மலைச்சாரலில், காற்று இந்த வருடமும் தனக்கே உரிய அழகுடனும் சீற்றத்துடனும் வீசிக் கொண்டிருக்கிறது. ஆசிரமத்தில் இருக்கும் சில பேர் இதை வாயு பகவானின் கொண்டாட்டமாகக் கருதாமல் தொந்தரவாகக் கருதுவார்கள் என்று எனக்குத் தெரியும். சில நேரங்களில் மலையிலிருந்து வரும் காற்று மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசிக் கொண்டிருக்கிறது. இந்தக் காற்று ஒரு மாற்றம் நிகழ இருப்பதற்கான அறிகுறி. உத்தராயணத்திலிருந்து தட்சிணாயணத்துக்கு நாம் மாறிக் கொண்டிருக்கிறோம். பூமியின் சக்தி மண்டல இயக்கத்தில் இது ஒரு முக்கியமான மாற்றம். இந்த காற்று பழையனவற்றை அடித்துச் சென்று ஒருவர் ஆன்மீகப் பயிற்சிகளை புதிதாக துவக்குவதற்கான ஒரு அடையாளம். இது ஆன்மீக சாதகர்களுக்கு மிக முக்கியமான காலம்.

1994ல் நடந்த முதலாவதும் மற்றும் ஒரு முறை மட்டுமே நடந்த முழுமைப் பயிற்சிக்கு(ஹோல்நெஸ் ப்ரோகிராம்) எந்த யோசனையும் இல்லாமலே ஒரு தேதியைக் குறித்தேன். அது ஜூலை 12ஆம் தேதி. அது குருவிற்கான மாதம். இதுதான் வாழ்க்கையின் அழகு. நீங்கள் குருவின் அருளுக்குப் பாத்திரமாகிவிட்டால், நீங்கள் பார்க்க மறந்த சிறு விஷயங்களை அவர் பார்த்துக் கொள்வார். ஆதியோகிக்கு எனது நன்றிகள். நான் நல்ல கூட்டாளியைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இவரை விட சிறந்த கூட்டாளி எப்போதும் உங்களுக்கு அமையாது.

இந்த வாரம் ஈஷாவுக்கு ஒரு திருப்புமுனையான வாரம். பெங்களூரு நகரில் முதன்முதலாக நான் யோக வகுப்பு எடுத்தேன். இந்த வகுப்பிற்கு மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு மிகவும் ஆச்சரியமான ஒன்று. எதிர்காலத்தில், அந்த நகரில், நமக்கு கிடைக்க இருக்கும் வரவேற்பைப் பற்றிய ஒரு முன்னோடியாகவும் அது இருந்தது. அந்த வகுப்பில் சுமார் 3000 பேர் மிகவும் கட்டுப்பாடுடனும் நல்ல முறையிலும் கலந்து கொண்டனர். வகுப்பும் மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. ஒரு 3 நாள் ஆங்கில வகுப்புக்கு இத்துணை பேர் இதுவரை எங்கும் திரண்டதில்லை.

மிகுந்த தீவிரத்தன்மை கொண்ட தமிழ் மக்களிடமிருந்து கர்னாடக மக்கள் எப்படி வேறுபட்டுள்ளார்கள் என்னும் விஷயம் எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இவ்வளவு அருகருகே இருந்தும், மக்கள் இவ்வளவு வேறுபட்டுள்ளது எனக்கு மிகவும் வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது. பெங்களூரு நகரில் மேலும் பல ஈஷா வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்பது மட்டும் நிச்சயம்.

வெள்ளியங்கிரி மலைச்சாரலுக்கு வெளியே, ஒரு முழுமையான லிங்க பைரவி கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா, முதல் முறையாக சேலத்தில் நடைபெற்றது. பெங்களூரிலிருந்து சேலம் வரையிலான ஒரு அதிகாலை பயணத்துக்குப் பிறகு நடைபெற்ற ஒரு எளிய நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் இந்த அடிக்கல் நாட்டு விழா நடந்தேறியது. அந்த அன்பர்களின் ஆர்வத்தையும், பக்தியையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இது ஒரு புதிய ஆரம்பம்; இது மேன்மேலும் தொடரும்.

குரு பௌர்ணமி நாளன்று மாலை 6.20ல் இருந்து 6.40 வரை, நான் உங்களுக்கு ஒரு சிறப்பு தரிசனத்தை வழங்க இருக்கிறேன். அந்நாளில் நீங்கள் எங்கிருந்தாலும், பெற்றுக் கொள்ளும் தன்மையுடன் இருங்கள். அப்போது என்னுடைய இருப்பையும், ஆசிகளையும் தவறவிட மாட்டீர்கள்.

[/translate]

In Grace

[/twocol_one_last]

 
 
 
 
Login / to join the conversation1
 
 
8 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

Yes Sadhguru, I shall be present at 6.20 - 6.40pm to experience my SadhGuru's Grace, Wherever and whatever I'm!

8 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

I am glad to share that I was part of the Bhoomi Pooja at Salem. Blissful.........
It was simply amazing. Tears rolled on my eyes, was STILL with His Grace
Whole day I was meditative.......no words to express.....
Thanks Sadhguru

8 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

Sadhguru was very merciful to grace me his blessings today on the morning of Guru Pournami(Jul 14th).  I got to touch his feet this morning at the ashram - and sought his blessings.  He was extremely generous to bless me and to place a flower in my hands.

8 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

i was unaware of gurupurnima meditation time and was playing computer games.at around 6.20 i realised my body was getting energised and it was getting stronger so i ran and sat to meditate.then out of curiosity i checked the isha yoga web page to find that 6.20 to 6.40 was dharshan time.i don't know whether to feel happy or curse myself for not checking the site earlier.

8 வருடங்கள் 10 மாதங்கள் க்கு முன்னர்

Sadhguru you are the Wind. Your presence was deeply felt, once again, once more... this time at the Delhi Center in the Day of Guru Pournami. I feel deeply blessed that something beautiful like this has happened to me in this life.  

Help me to yield to Your Divine wishes since I know I resist....help me find my path for I am lost.