இலையுதிர் காலம்
இந்த வார சத்குரு ஸ்பாட்டில், அமெரிக்காவிலிருந்து நமக்கு குளிர்கால கவிதை ஒன்றை அனுப்பியிருக்கிறார் சத்குரு -- படித்து மகிழுங்கள்!
 
 
 
 

 

 

இலையுதிர் காலம்

 

இலைகளின் பலப்பல நிறங்கள்

கண்ணுக்கோ வர்ணங்களின் விருந்து

நிறத்தின் இந்த மரண நடனம்

கிளர்ச்சியானது அல்ல – கடும்

குளிர்ச்சியால் ஆனது!

மகுடமும் ஆடையும்

யாவும் சரிந்து விழுந்து –

வாழ்வூட்டும் ஜீவசக்தியை இழந்து

இலை, பூ, பழம் அற்று

மரங்கள் வெறுமையாய் நிற்கும் -

மீண்டும் உயிர்த்தெழுவதை எதிர்பார்த்து!

இலையுதிர்காலத்தின் வீழ்ச்சி

குளிர்காலத்தின் அழுகல்

வசந்தகாலத்தின் வியப்பு

இது வாழ்வா சாவா என்பது பற்றியல்ல

வாழ்வும் சாவும் பற்றியது!

பேரழிவல்ல இது - ஒரு பெரும் திருவிழா!

செல்ல வேறிடமில்லை

எல்லாம் நிறைந்திருக்கிறது இங்கே!

Love & Grace

 
 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 7 மாதங்கள் க்கு முன்னர்

sadhguru every thing is here and here only..... thank u......