இமயமலையின் நடுவே மலையேறிச் சென்றுகொண்டிருக்கும் போது எழுதிய கவிதையை சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ளார். அதில் மலைச்சிகரங்களை கூர்மையான விழிப்புணர்வுடனும், தெளிந்த பள்ளத்தாக்குகளை அருள் ததும்பும் குருவின் மடியுடனும் ஒப்பிட்டுள்ளார். அதோடு மலையேற்றத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் கண்டுகளியுங்கள்!

குருவின் மடி

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விழிப்புணர்வின் சிகரங்கள் உள்ளன
அருளின் பள்ளத்தாக்குகள் உள்ளன

சிகரங்களில் ஒருவர்
ஞானத்தின் பிரகாசத்தை அறியலாம்

பள்ளத்தாக்குகளில், எல்லாம் சங்கமிக்கும்
பனியினுள் கரைந்துவிடலாம்

குருவின் மடி என்பது ஞானத்தையும்
அருளையும், அறிதலையும் கரைதலையும்,
ஒன்றுசேர்க்குமிடம். அது வேண்ட,
விளையாட அல்லது அழிவதற்கான இடம்.

வேண்ட-நிறைய அருளப்படும் உங்களுக்கு
விளையாட-இருத்தலின் பரவசம் அறிவீர்
அழிந்தால்-அவருடன் ஒன்றாகிவிடுவீர்

Love & Grace