கோவா

 

குளிர்ந்த மணல்

வெம்மையான கடல்

 

பச்சை போர்த்திய மலைகள்

மென்மையான மக்கள்

இது சொர்க்கம் இல்லைதான்

ஆனால் சொர்க்கத்தின் தேவையை

மறக்கச் செய்யும் என்பதை

மறுக்க முடியாது.

 

இதை நெரிசல் படுத்தாதீர்கள்;

Sign Up for Monthly Updates from Isha

Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.

No Spam. Cancel Anytime.

நிலத்தை தோண்டாதீர்கள்;

வடு ஏற்படுத்தாதீர்கள்;

இதை விட்டுவிடுங்கள்;

வரும் சந்ததியினருக்கு

உலகம் அழகாகவும் இருந்தது

என்று தெரியட்டும்!

 

நிலத்தை பண்படுத்த வேண்டாம்

மனத்தைப் பண்படுத்துவோம்

 

நமக்குள்ளே சொர்க்கம் இருக்க

வெளிப்புறத்தை மாசுப்படுத்துவானேன்!

Love & Grace