எனது ரகசியம்
சத்குருவுக்கெல்லாம் வரம்புகள் இருக்குமா என்ன என்கிறீர்களா.... "நிச்சயமாக இருக்கிறது" என்கிறார் சத்குரு! பரமரகசியத்தை இங்கே நமக்கு கவிதையாய் மொழிகிறார், தன் நடையில்.... சத்குரு ஸ்பாட் படித்து மகிழுங்கள்!
 
 
 
 

ரகசியம்,
இது பரம ரகசியம்...!
உனக்காக சொல்கிறேன்
எனது ரகசியம்.

ஒன்றல்ல எனக்கு,
இதயங்கள் இரண்டுண்டு.

ஒன்று எப்போதும் கதறுகிறது,
மற்றொன்றோ களியாட்டமிடுகிறது!

புழு பூச்சிகளுக்காக வருந்திட ஒன்று
பறவைகளுக்காக மகிழ்ந்திட மற்றொன்று

தோல்வியை ருசித்தவனுக்கு
எனது வருத்தங்கள்...
வாகை சூடியவனுக்காக,
எனது கொண்டாட்டங்கள்...

புழுவோ பூச்சியோ
பறவையோ மிருகமோ
அல்லது மனிதனோ...
ஏன், ஒரு செடியும் கொடியும்
மரமும்கூட மரணித்தால்
வருத்தத்தில் மூழ்குவேன்!

உயிராய் நிறைந்திருக்கும் அனைத்திற்கும்
நான் ஆனந்திப்பேன்
இங்கேயும் எப்போதும்!

Love & Grace

 
 
 
 
 
 
Login / to join the conversation1
 
 
5 வருடங்கள் 1 மாதம் க்கு முன்னர்

குருவிற்கும்,கவிதைக்கும் ஒரு பக்தனாகவும் ரசிகனாகவும் இருக்க கிடைத்த பாக்கியத்தை நினைத்து ஆனந்தம் அடைகிறேன்..