ஈருயிர் ஓருயிராய்...
இன்று ராதேவின் திருமண நாள். ராதேவுடன் தான் நாடோடியாய் சுற்றித் திரிந்த வாழ்க்கை, அவளது தாய் கண்ட கனவு என ராதே, சந்தீப்பின் திருமண நாளான இன்று தன் மனம் திறக்கிறார் சத்குரு. ராதேவை வளர்த்து ஆளாக்கிய அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி சொல்லி நெகிழ்கிறார். திருமண நாளன்று தீட்டப்பட்ட சிறப்பு சத்குரு ஸ்பாட் இது...
 
 
 
 

இன்று ராதேயின் திருமண நாள். ராதேவுடன் தான் நாடோடியாய் சுற்றித் திரிந்த வாழ்க்கை, அவளது தாய் கண்ட கனவு என ராதே, சந்தீப்பின் திருமண நாளான இன்று தன் மனம் திறக்கிறார் சத்குரு. ராதேவை வளர்த்து ஆளாக்கிய அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி சொல்லி நெகிழ்கிறார். திருமண நாளன்று தீட்டப்பட்ட சிறப்பு சத்குரு ஸ்பாட் இது...

அன்பிற்குரிய ராதே, சந்தீப் நாராயணுடன் மணவாழ்வில் இணையும் நாள் இன்று. இவர்களுடைய வாழ்வின் இந்த முக்கிய தருணத்தை பகிர்ந்து கொள்ள, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலபேர் இங்கு ஒன்று கூடியிருக்கிறீர்கள். ராதேயின் வாழ்வில் முக்கிய பங்கு வகித்துள்ள பல பேருக்கு என் நன்றியை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். இன்று ராதே என்னவாக இருக்கிறாளோ அது உங்களது தொடர்ச்சியான ஆதரவில்லாமல் நிகழ்ந்திருக்காது. ராதே, நடப்பதற்கு முன்பே நடனமாடினாள். அவள் நாட்டியக் கலைஞர் ஆக வேண்டும் என்பது அவளது தாயின் கனவு.

பெரும்பாலான நேரங்களில் நான் பிரயாணத்தில் இருப்பதால், ஒரு தந்தையாக, ராதேயுடன் என்னால் போதிய நேரத்தை செலவழிக்க முடிந்ததில்லை. எப்படியோ சமாளித்து அவளுடன் நான் தொடர்பில் இருந்திருக்கிறேன். இன்றுவரை அதனை ஒப்பேற்றியும் வந்திருக்கிறேன். மூன்று வயதிலிருந்து இடைவிடாமல் அவள் என்னுடன் பயணம் செய்திருக்கிறாள். பெரும்பாலான சமயங்களில் நாங்கள் நாடோடியாய் சுற்றித் திரிந்திருக்கிறோம். ஆனால், எப்பொழுதெல்லாம் யோக வகுப்புகள் இருந்தனவோ, அது என்ன இடமாக இருந்தாலும் சரி, அப்பொழுதெல்லாம் பல குடும்பங்கள் அவளை கவனித்துக் கொண்டன. இத்தனை வருடங்கள் மக்கள் பொழிந்த அன்பும் ஆதரவும் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டது.

இரண்டு உயிர் ஒன்றோடு ஒன்றாய் இணைவது அழகு. ஒருவருடைய சிந்தனையில், வாழ்க்கையில், உணர்வில் இன்னொருவருக்கு இடமளித்து வாழ்வது உச்சபட்ச இணைவை நோக்கி அவர்கள் எடுத்து வைக்கும் படியாக இருக்க முடியும்.

Love & Grace

 
 
 
 
Login / to join the conversation1
 
 
3 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

இரண்டு உயிர் ஒன்றோடு ஒன்றாய் இணைவது அழகு. . vaazhthukal radhe akka and sandeep anna.. :) <3

3 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

Great !! Happy Married life Radhe and Santheep ! :) Long live for years to come !

3 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

Radhe Akka....If you had not shared your father with us, we would have not had a Guru. We owe a lot to you and viji akka for the contribution you have made. Wishing you a great life ahead.

3 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

Happy Married Life.........