ஆழ்ந்த தனிமை - சத்குரு கவிதை

தான் இருக்கும் ஆழ்ந்த தனிமைநிலை குறித்து சத்குரு எழுதிய ஆங்கிலக் கவிதையை இங்கே மொழிபெயர்த்துள்ளோம்.
 
 
 
 

தான் இருக்கும் ஆழ்ந்த தனிமைநிலை குறித்து சத்குரு எழுதிய ஆங்கிலக் கவிதையை இங்கே மொழிபெயர்த்துள்ளோம். ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆழ்ந்த தனிமை

கவனத்தின் கூர்மையெனும்
ஆசி இருந்ததால், வாழ்க்கை
வெள்ளமென நிகழ்ந்தது, சிறு நிகழ்வுகள்
பிரம்மாண்டமாக இருந்தன, ஒரு அணுவே
ஒரு அண்டமாய் இருக்கமுடியும் என்பதால்.
எல்லாம் உணர்வாற்றலின் விளையாட்டு.
என் பல ஜென்மங்கள் நினைவுவந்ததும்,
வாழ்க்கை பிரவாகமாக பெருக்கெடுத்தது.
வளமாக வண்ணமயமாக இருந்தது,
ஆனால் சிறியது பெரியது இல்லை.
எல்லாம் என்மீது வீசப்பட்டது, மலர்களும் மலமும்.
மிக இனிமையான அன்பும் பக்தியும்,
மிக வக்கிரமான துரோகமும் பழியும்.
கண்ணியமானவர்களால் மதிக்கப்பட்டு,
கயவர்களால் மருதலிக்கப்பட்டு,
இருக்கக்கூடியது இருக்கமுடியாதது எல்லாம்
என்னுடையதாயினும், எதுவும் என்னைத் தொடவில்லை.

தனிமையில், சிவனும் என் துணையாய்
இருப்பதிலிருந்து கைவிட்டுச் சென்றுவிட்டதால்
அவனும்கூட என்னுள் இரண்டறக் கலந்துவிட்டதால்
என்னை ஆழ்ந்த தனிமையில் ஆழ்த்திவிட்டான்.

அன்பும் அருளும்