இந்த வார சத்குரு ஸ்பாட்டில்... கடந்த சில தினங்களில் தான் கலந்துகொண்ட பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை தனக்கே உரிய பாணியில் விவரிக்கிறார் சத்குரு...

பெரும் திட்டங்களுக்கான எழுச்சிமிக்க பணிகள், சர்வதேச யோகா தினத்துக்காக தயாராவது, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆசிரியர் பயிற்சி இவற்றின் இடையே, "ஹெட் இஞ்சுரி ஃபவுண்டேஷன்"ல் (Head Injury Foundation) பங்கேற்க ஜோத்பூர் பயணிக்க நேர்ந்தது. 10 வருடங்களுக்கு முன் மகாராஜர் இரண்டாம் கஜ் சிங் மற்றும் அவர் குடும்பத்தை தாக்கிய ஒரு துயர சம்பவத்தின் விளைவே இந்த அமைப்பு. அவருடைய 30 வயது மகன் போலோ விளையாடும் பொழுது தலையில் படுகாயம் ஏற்பட்டது. ஒரு துயரம் எவ்வாறு நல்ல குறிக்கோளாக மாறக்கூடும் என்பதற்கு இது ஒரு மேம்பட்ட உதாரணம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மெஹ்ராங்கர் ஒரு பிரமிக்க வைக்கும் கோட்டை. அங்கு நடந்த நிகழ்ச்சி மனதை கவரும் வண்ணம் இருந்தது. இவர்களோடு இணைந்து ஈஷா, பிப்ரவரி 2016 இல் அவர்களது இன்னொரு கோட்டை அமைந்திருக்கும் நாகோரில் (Nagore) ஒரு நிகழ்ச்சி வழங்கவிருக்கிறது - காத்திருங்கள்!

ராஜஸ்தானில் இருக்கும் ஜோத்பூர் செல்லும் வழியில் கொஞ்சமாக சுமார் 3000 கிலோ மீட்டர் சுற்றி, கௌஹாதி சென்றிருந்தேன். வட கிழக்கு பிராந்தியத்தில், இந்திய வனத்துறை பணியில் இருக்கும் அதிகாரிகளுடன் அங்கே ஒரு கலந்துரையாடல். இந்தியாவின் 25% காடுகள் இந்த பகுதியில் தான் உள்ளது. வளமான பல்லுயிர் அமைப்பும், வன விலங்குகளும் அமையப் பெற்ற பகுதி. பல்வேறு இனங்களும், பழங்குடிகளும் நிறைந்து காணப்படும் பகுதி. இந்த பரப்பு தனித்துவமானது. சிறப்பாக பாதுகாக்கப்படும் ஒரு கலாச்சார பொக்கிஷம்.

வழக்கமாக சுரங்கம் அமைப்பது, தொழில்மயமாக்குவது என்று இல்லாமல் இந்த பகுதியை இயற்கை, கலாச்சார சுற்றுலா பகுதியாக உருவாக்குவது மிகவும் சிறந்ததாக இருக்கும். இதற்கென உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டால், இயற்கையை சீரழிக்காமல், தனித்துவமான இந்த கலாச்சாரத்தை அழிக்காமல் இந்த பகுதியை வளர்க்க முடியும்.

பல்வேறு கூட்டங்களுக்காக தற்சமயம் டெல்லியில் இருக்கிறேன். முதலாம் உலகப் போரில் இந்தியா பங்கேற்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டம் பற்றி கேள்விப்பட்டேன். பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட உறுதியான இந்திய வீரர்கள் அடங்கிய சேனை பிரிட்டிஷ் அரசால் ஐரோப்பா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, வடக்கு ஆப்ரிக்கா என பல்வேறு யுத்த முனைகளுக்கு அனுப்பப்பட்டது. தங்கள் அரசியல் குறிக்கோள்கள் நிறைவேறும் என இந்திய அரசியல் தலைவர்களும் இதை ஊக்குவித்தார்கள். 74000 வீரர்கள் மாண்டு போனார்கள். 100000 பேர் படுகாயம் அடைந்தார்கள். பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அறிமுகமே இல்லாத நிலப்பரப்பில், பழகியே இராத தளவாடங்களை கொண்டு இந்த மாபெரும் வீரர்கள் போர் புரிந்தார்கள். பனி பொழியும் காலத்தில் கோடை காலத்தில் அணியும் உடைகளே அவர்களிடம் இருந்தன. உயிர் துறந்த, கை கால்கள் இழந்த இவர்களது தியாகததை மாதம் வெறும் 15 ரூபாய் ஊதியம் பெற்ற இவர்களது குடும்பத்தின் வறுமை, வேதனையையும் நம் தேசத்தில் பெரிதளவில் யாரும் தெரிந்திருக்வில்லை. இதற்கு அப்புறமும் இரண்டாம் உலகப் போருக்கு 20 லட்சம் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். பாதிக்கு மேற்பட்ட வீரர்களை யுத்தம் காவு வாங்கியது. நம்மை அடக்குமுறை செய்தோரை எதிர்த்து போர் செய்யாமல் அவர்களுக்கு பக்க பலமாக போர் புரிந்தோம்.

அரசியல் தந்திரம், அஹிம்சை வழியில் விடுதலை என்பதற்காக நாம் இழந்தது ஏராளம். பலமுறை நாம் 'பயன்படுத்தப்பட்டு' விட்டோம் என்பதை கனத்த இதயத்தோடு சொல்கிறேன்.

இந்தியா உறுதியாகவும், புத்திசாலித்தனத்துடனும் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது.

Love & Grace