இந்த வார சத்குரு ஸ்பாட்டில், கோபம், வெறுப்பு, பேராசையைக் காட்டிலும் அபாயகரமான தற்பெருமையின் தந்திரத்தை உணர்த்த, அழகிய கவிதையொன்றை சத்குரு அவர்கள் வடித்துள்ளார்...

ஆணவத்தின் அபாயம்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கோபம், வெறுப்பு, பேராசை, பெருமை,
இவற்றில் மிகப்பெரிய அறிவீனம் எது?

கோபம், நிச்சயமாக
உங்களை எரித்து அடுத்தவரை
துயரத்திலோ, மரணத்திலோ தள்ளும்.
வெறுப்பு, கோபத்தின் பிரதிநிதி,
அதிகவெளிப்படையாய் அழிவுதருவதாய்
இருப்பினும், அது கோபத்தின் பிள்ளையே.

பேராசை, மற்ற இரண்டோடு
சம்பந்தம் இல்லாதது போலத் தோன்றிடினும்,
பேராசையின் பசியாற்ற
ஏதுமில்லாத காரணத்தால்,
தணிக்கமுடியா பேராசையின் தீயை
அணைத்திடும் அனைத்தையும் எதிர்த்து,
கோபத்தையும் வெறுப்பையும் உருவாக்குகிறது.

பெருமை பாங்கானதாய்த் தோன்றிடினும்,
ஒருவரை துடுக்கானவராய்க் காட்டிடினும்,
மனிதகுலத்தின் சாத்தியங்கள் அனைத்தையும்
அழிப்பதில், பெருமைக்குரிய சிறப்பிடத்தை,
பெருமையே பிடிக்கிறது.
நிஜத்தை மாற்றி ஏமாற்றிடும் அரியாசனத்தில்
ஒருவரை அமர்த்துவதும் அதுவே.
நிஜமல்லாததை நிஜமாக்கி
பொய்யை மெய்யாக்கும் ஆசனமது.

கோபம், வெறுப்பு, பேராசை
தம்மை அரங்கேற்றிக்கொள்ள,
பெருமையின் மேடை தேவை.
வலியை இன்பமாய் உணரவைக்கும்
பெருமை, ஒரு முட்கிரீடம்.
பெருமை, ஒரு மாயை,
வாழ்க்கையின் மாயத்தோற்றம்.
அறியாமையை மெருகேற்றினால்,
அது ஞானோதயம் ஆகிடாது.

Love & Grace