யோகா இந்து மதமா?
யோகா இந்து மதத்தைச் சேர்ந்தது என்று அமெரிக்கப் பள்ளிகளில் யோகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதைப் போன்று எடிசன் பல்பை கண்டுபிடித்தார் என்பதற்காக அது யூதர்களுடையது என்று தடை செய்ய முடியுமா? அறிவியலுக்கும் ஒருவருடைய நம்பிக்கைக்கும் இடையே பல மைல் இடைவெளி இருக்கிறது. இங்கு யோகா இந்து மதமா என்று மற்றொரு ருசிகர விவாதம்...
 
 

யோகா இந்து மதத்தைச் சேர்ந்தது என்று அமெரிக்கப் பள்ளிகளில் யோகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதைப் போன்று எடிசன் பல்பை கண்டுபிடித்தார் என்பதற்காக அது யூதர்களுடையது என்று தடை செய்ய முடியுமா? அறிவியலுக்கும் ஒருவருடைய நம்பிக்கைக்கும் இடையே பல மைல் இடைவெளி இருக்கிறது. இங்கு யோகா இந்து மதமா என்று மற்றொரு ருசிகர விவாதம்...


சத்குரு:

நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதற்கும், யோக முறையை உபயோகிக்கும் உங்கள் திறனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. யோகா என்பது ஒரு தொழில்நுட்பம். நீங்கள் எதை நம்புகிறீர்கள், எதை நம்பவில்லை என்றெல்லாம் தொழில்நுட்பம் பிரித்துப்பார்க்கிறதா என்ன? நம்பிக்கை வெறும் மனம் சார்ந்த விஷயம், தொழில்நுட்பம் சார்ந்ததல்ல.

புவியீர்ப்பு விசையை நீங்கள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்ததென்று சொல்வதைப் போன்றதுதான் யோகா இந்து மதத்தினுடையது என்று நினைப்பதும்!

நியூட்டன் புவியீர்ப்பு விதியை கண்டுபிடித்ததால் மட்டுமே புவியீர்ப்பு விசை கிறிஸ்துவ மதத்தினுடையதாக ஆகிவிடுமா? யார் அதை பயன்படுத்த தயாராக இருந்தாலும், அதை பயன்படுத்தலாம். யோகாவிற்கு மதச்சாயம் பூச யோசிப்பதுகூட வேடிக்கையாக உள்ளது.

நியூட்டன் புவியீர்ப்பு விதியை கண்டுபிடித்ததால் மட்டுமே புவியீர்ப்பு விசை கிறிஸ்துவ மதத்தினுடையதாக ஆகிவிடுமா?

ஆன்மீக செயல்முறை மற்றும் யோக தொழில்நுட்பம் அனைத்து மதங்களின் அம்சமாகவும் இருக்கிறது. மனிதர்கள் மதத்தின் வழியாக, சரிசெய்ய முடியாத அளவு மனித இனத்தை சிதைக்க யோசிக்க தொடங்கும் முன்பே சிவன், மனிதன் தன்னையே பரிணாம வளர்ச்சியடைய செய்துகொள்ள முடியும் என்ற யோசனையை தந்துவிட்டார். முதலில் இந்து என்பது ஒரு "மதம்" அல்ல.

யோக அறிவியலுக்கு இந்து முத்திரை குத்தப்பட்டதற்கு காரணம், யோக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இந்தக் கலாச்சாரத்தில் வளர்ந்ததால்தான். விவாதம் செய்து உண்மையை கண்டறியும் கலாச்சாரமாக இருந்து வந்திருப்பதால், இந்த மண்ணுக்கே உரிய பாணியில் இயல்பாகவே அறிவியலையும் அவ்வாறே வழங்கினர். இது அடிப்படையில் இந்து வழி வாழ்க்கை முறையாகும்.

"சிந்து" எனும் ஒரு நதியின் பெயரில் இருந்து வந்ததுதான் "இந்து" என்ற வார்த்தை. சிந்து நதிக்கரையில் வளர்ந்த காரணத்தினால், இந்தக் கலாச்சாரத்திற்கு "இந்து" என்ற பெயர் வந்தது.

சிந்து நிலத்தில் பிறந்த எவருமே இந்து தான். இந்த புவியியல் அடையாளம் மெதுவாக ஒரு கலாச்சார அடையாளமாக உருவானது. மிகவும் ஆதிக்க கண்ணோட்டமிக்க மதங்கள் இங்கு வந்து பெரிய அளவிலானதொரு போட்டியை ஏற்படுத்தியதால், இவர்கள் தங்களை ஒரு மதமாக தங்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள முயற்சித்தனர். உண்மையில், அத்தகைய செயல் இன்றளவும் நடக்கவில்லை. ஏனெனில், இவர்களுக்கு பொதுவான நம்பிக்கை என்று எதுவுமில்லை.

இந்து என்பது ஒரு "மதம்" அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்துவாக இருப்பது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை கொண்டிருக்கும் விஷயமல்ல. இந்தக் கலாச்சாரத்தில் என்ன செய்திருந்தாலும் அது இந்து முறைதான். குறிப்பிட்ட கடவுள் அல்லது சிந்தனையுடன் தொடர்புடைய விஷயம் எதையும் இந்து வாழ்க்கைமுறை என்றழைக்க முடியாது.

நீங்கள் ஆண் கடவுளை வழிபட்டாலும் இந்துதான், பெண் கடவுளை வணங்கினாலும் இந்துதான். நீங்கள் ஒரு பசுவை வணங்கி இந்துவாக இருக்க முடியும். இவ்வளவு ஏன், அனைத்து வழிபாட்டையும் கைவிட்ட பிறகும் நீங்கள் இந்துவாக இருக்க முடியும்! இதனால், எதை நம்பினாலும் நம்பாவிட்டாலும் நீங்கள் இந்துதான்.

இந்தக் கலாச்சாரத்தில் இறுதி விஷயம் கடவுள் அல்ல. கடவுள் என்பவர் படிக்கற்களில் ஒன்றாக மட்டுமே கருதப்படுகிறார்.

அதே நேரத்தில், அனைத்திற்கும் பொதுவான ஒரு விஷயம் ஒன்றும் நடைமுறையில் இருந்தது. இந்தக் கலாச்சாரத்தில், மனித வாழ்க்கையில் ஒரே ஒரு நோக்கம் மட்டுமே இருந்து வந்தது - முக்தி! வாழ்க்கை எனும் செயல்முறையில் இருந்து விடுதலை. தன் உச்சபட்ச நிலையை அடைய ஒரு மனிதனுக்கு உதவும் அறிவியல்!

இந்தக் கலாச்சாரத்தில் இறுதி விஷயம் கடவுள் அல்ல. கடவுள் என்பவர் படிக்கற்களில் ஒன்றாக மட்டுமே கருதப்படுகிறார். உலகில் கடவுளில்லா பண்பாடு இது.

இப்படிச் சொல்வதற்கு காரணம், கடவுள் என்பவர் குறிப்பிட்ட ஒரு பொருளாக இல்லை. கல், பசு, உங்கள் தாய் என உங்களுக்கு பிடித்த எதை வேண்டுமானாலும் நீங்கள் வணங்கலாம். ஏனென்றால், இந்தக் கலாச்சாரத்தில் கடவுள் நம்முடைய படைப்பு என்பதை எப்போதும் அறிந்தே இருக்கிறோம்.

வேறு எல்லா இடத்திலும், கடவுள் நம்மை படைத்தார் என்று நம்புகிறார்கள். இங்கு, கடவுளை படைத்தவர் நாம் என்று தெரிந்து வைத்துள்ளதால், நம் அறிவுக்கெட்டிய எதையும் கடவுளாக்கிக் கொள்ளும் சுதந்திரம் நமக்கு இருந்திருக்கிறது. மனிதனுக்கு அவனுடைய இறுதி சாத்தியத்தை நோக்கி வழிவகுத்துக் கொடுக்கும் அறிவியல் இது!

நாம் கடவுளை உருவாக்குவதற்கு ஒரு முழுமையான தொழில்நுட்பத்தையே உருவாக்கியிருக்கிறோம். உருவங்களை செய்ய மட்டுமில்லாமல் அதை சக்தியூட்டி, வாழ்க்கையின் சாரமான இன்னொரு பரிமாணத்தை உணரும் வாய்ப்பையும் தருவதாக இருக்கும் விஷயத்தை நாம் செய்திருக்கிறோம்.

யாரோ ஒருவர் நம்புகிறார் என்பதால் அந்த சிலை சக்தி அதிர்வுகளுடன் விளங்கவில்லை, இது பிரதிஷ்டை மூலமாக ஒரு கல்லை கடவுளாக்கும் அறிவியல்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1