மதியால் விதியை வெல்ல முடியும் என்ற பல சினிமா வசனங்கள், நம்பிக்கை வாசகங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இது சாத்தியம்தானா? இதற்கு சத்குருவின் விளக்கம் என்ன? கேட்டறிவோம்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

நீங்கள் விதியை விழிப்புணர்வு இல்லாமல் உருவாக்கி கொண்டிருக்கிரீற்கள். இதை விழிப்புணர்வுடனும் உருவாக்க இயலும். உங்கள் விதியை மாற்றி எழுதவும் முடியும். இதைத்தான் ஆன்மீக செயல்முறையில் நாம் செய்து கொண்டு வருகிறோம். உங்களுடைய அடிப்படையான நிலையை தொட முடியுமானால், ஒரு கணம், படைப்பின் மூலத்தை உங்களுக்குள் உணர முடியுமானால், உங்களுடைய முழு கவனம் உங்களை நோக்கி நகருமேயானால், நீங்களே உங்கள் விதியை மாற்றி எழுத முடியும்.

நான் “நீங்கள் “என்று சொன்னால், "நீங்கள்" மட்டும்தான், உங்கள் உடல், மனம் கூட கிடையாது.

நீங்கள் “நான்” என்று உங்கள் வீடு, உங்கள் மனைவி, உங்கள் கார், உங்கள் பதவி, மற்றும் உங்கள் அடையாளங்களை கருதுவதால், உங்கள் கவனம் எல்லா நேரமும் சிதறி இருக்கிறது. இவை அனைத்திலிருந்தும், நீங்கள் சேகரித்த உங்கள் உடல் மற்றும் மனதையும் துண்டாக்கினால், ஒருவரை போலவும் உணரமாட்டீர்கள். இல்லையா? எனவே, “நான்” என்பதே உங்களை சுற்றி விரிந்து இருக்கிறது. கூட்டத்தின் விதி முன்பே எழுதப்பட்ட விதி.

நீங்கள் உண்மையை உணர்ந்த மனிதரானால், உங்கள் விதி உங்கள் கையில். ஆங்கிலத்தில், individual என்ற வார்த்தை indivisible லிருந்து வந்தது. அது, பிரிக்க முடியாத, இங்கும் அங்குமாக இருக்க முடியாதது. ஆன்மீக செயல்முறையில் ஆன்மீக வளர்ச்சிக்காக அவசரப்படுபவர்கள் ஏன் கல்யாணம், குழந்தை, உறவுமுறையில் ஈடுபடுவதில்லையென்றால், கணவன், மனைவி என்றாகிவிட்டால், உங்களால், ஒன்றும் செய்யமுடியாது. “நான்" என்பது மற்ற ஒன்றுடன் அடையாளம் கொள்கிறது. இல்லையெனில், அவர்கள் உங்களை வாழ விடமாட்டார்கள், அப்படித்தானே? நீங்கள் அல்லாத ஒன்றுடன் உங்களை அடையாளப் படுத்திக்கொள்ளும் போது, உங்கள் அனுபவத்தில், எதை நீங்கள் சேகரித்தீர்களோ அதுதான் நீங்கள் என்றால், நீங்கள் சிதறிப்போவீர்கள். சந்நியாசம் மற்றும் பிரம்மச்சரியத்தின் முக்கியத்துவம் இதுதான். உங்களுடைய முழுகவனம், உள்நோக்கி நகருதல். நான் “நீங்கள்" என்று சொன்னால், "நீங்கள்" மட்டும்தான், உங்கள் உடல், மனம் கூட கிடையாது.

அப்படி முடியவில்லை என்றால், ஒன்றுடன் மட்டும் அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். "நீங்கள்" என்று சொன்னால், “நீங்களும் உங்கள் குருவும்" என்றாக்கி கொள்ளுங்கள். எந்த ஒரு தயக்கமுமின்றி குருவுடன் பற்றுதலோடு இருங்கள், ஏனென்றால், நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் சிக்கிகொள்ளலாம், அவர் சிக்கிக் கொள்ளப்போவதில்லை. கனிந்தபோது கைவிடமுடியும். மற்ற உறவுகளுடன் இது ஒருபோதும் சாத்தியம் இல்லை. நீங்கள் சிக்கிக்கொண்டால், விடுதலை வேண்டும் போது உங்களை விடுவிக்க மற்றவர்கள் விடமாட்டர்கள். மதியால் விதியை மாற்றி எழுத முடியும். அந்த விழிப்புணர்வு வரவில்லை என்றால், உங்களை முழுமையாக உங்கள் குருவிடம் அர்ப்பணித்தால், மிக எளிதாக மாற்றி எழுதமுடியும்.

வளர, கரைய, உணர ஏங்குங்கள். என்ன நடக்க வேண்டுமோ, நடக்கும். நீங்கள் உண்மையை உணர்ந்த மனிதனானால், உங்கள் விதி உங்கள் கையில். விழிப்புணர்வுடன் உங்கள் விதி நடந்தால், அடுத்த நிலை தானாக நடக்கும், ஏனென்றால், உங்களுக்குள் இருக்கும் புத்திசாலித்தனம், எல்லையில்லாததை தேர்ந்தெடுக்கும், கட்டுப்பாட்டை அல்ல.