பொதுவாக மாணவப் பருவம் துடிப்பும் வேகமும் மிக்க பருவமென்றாலும், வாழ்க்கை குறித்த பார்வையும் அனுபவமும் குறைவாக இருக்கும். சமூகம் சொல்லித் தரும் சில தவறான அணுகுமுறைகளால் அவதிப்படும் நிலையும் ஏற்பட வாய்ப்பாகிறது. மாணவப் பருவத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்குமே சத்குரு சொல்லும் இந்த விளக்கம் அவசியமானதாகிறது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: நான் 12-ம் வகுப்பு படிக்கிறேன். பேச்சுப் போட்டி, விளையாட்டு, க்விஸ்.. இப்படி எல்லாவற்றிலும் எனக்குத்தான் வெற்றி கிடைக்கணும் என்று வெறியாக இருக்கேன். வகுப்பில் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது சரியா?

சத்குரு:

மற்றவர்கள் உங்களை கவனிக்க வேண்டும் என்பதற்காக கோமாளித்தனமாக செய்யத் தொடங்கிவிடுவீர்கள். எனவே யார் உங்களைக் கவனிக்கிறார்கள் என்பதைக் கவனிப்பதிலேயே நேரத்தை செலவிட்டால் எதையும் செய்யமாட்டீர்கள். இந்த வெறி அதிகமாக இருக்குமென்றால், வெற்றி வருகிறதோ இல்லையோ ரத்தக் கொதிப்பு வருவது நிச்சயம். ஒன்றில் முழுமையாக ஈடுபட்டு உங்கள் முழு சக்தியையும் ஒருமுனைப்படுத்துவதுதான் வெற்றியைக் கொண்டு வருமே தவிர, வெல்ல வேண்டுமே என்ற பதட்டத்தோடு இயங்கினால் அந்தப் பதட்டமே உங்கள் பாதி பலத்தைக் குறைத்து விடுகின்றது.

மற்றவர்கள் உங்களை கவனிக்க வேண்டும் என்பதற்காக கோமாளித்தனமாக செய்யத் தொடங்கிவிடுவீர்கள். எனவே யார் உங்களைக் கவனிக்கிறார்கள் என்பதைக் கவனிப்பதிலேயே நேரத்தை செலவிட்டால் எதையும் செய்யமாட்டீர்கள்.

இந்த நாட்டில் விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் தோல்விகள் கூட மாரடைப்பை ஏற்படுத்துகிறது. சிலநேரம் வெற்றி கூட மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்றால் அது வெற்றி பெற வேண்டுமே என்ற பதட்டத்தால் வந்ததுதானே தவிர தோல்வியால் வந்தது அல்ல.

வெற்றிக்குத் தயாராகிறேன் பேர்வழி என்று நடுக்கத்தையும், பதட்டத்தையும் வளர்த்துக் கொண்டால் வருகிற வெற்றியைக் கூட உங்களால் அனுபவிக்க முடியாது. எனவே நீங்கள் ஜெயிக்கிறீர்களா? தோற்கிறீர்களா? என்று கவலைப்படாதீர்கள். முழுமையான ஈடுபாட்டோடு எதையும் செய்யுங்கள்.

உங்கள் முழு சக்தியையும் எப்படி பயன்படுத்துவது என்றுதான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர மற்றவர்களை ஜெயிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டக்கூடாது.

ஏன் தெரியுமா? இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பின்படி மனிதர்கள் அதிகபட்சமாக தங்கள் மூளையில் 9% முதல் 12% வரைதான் பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. நீங்கள் மற்றவர்களை ஜெயித்து முதலாவதாக வருகிறீர்களென்றால் என்ன அர்த்தம் தெரியுமா? முட்டாள்களில் நீங்கள் முதல் ஆளாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.