உயிருள்ள சக்திரூபங்கள்

சத்குரு: இந்தக் கலாச்சாரத்தில் சக்திரூபங்களைப் படைப்பது நமது வழக்கமாய் இருந்து வருகிறது. அந்த ரூபங்கள் மூலம் வளத்தையும் வளர்ச்சியையும் மக்கள் அடைந்தனர். அந்த ரூபங்களை படைக்கும் அறிவியலை நாம் பிரதிஷ்டை என்கிறோம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தியானலிங்கம் ஒரு சக்திரூபம்.

"ஷம்போ" எனும் சப்தம் இதனுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. இது மந்திரமா?ஆம். இன்றைய நவீன அறிவியல் இந்த முழு பிரபஞ்சமும் அதிர்வு வடிவில் இருக்கிறது எனச் சொல்கிறது. சப்தங்களின் சிக்கலான கலவையையே நாம் இந்தப்பிரபஞ்சம், படைத்தல் என்று அழைக்கிறோம். சரியான விழிப்புணர்வோடு, ஒரு சப்தத்தை நாம் உச்சரிக்கும்போது, முற்றிலும் புதிய பரிமாணத்தை அது நமக்கு திறந்து காட்டும்.

ஒவ்வொரு மந்திரத்திற்கும் அதனோடு தொடர்புப்படுத்தக் கூடிய ஒரு வடிவம் இருக்கிறது. "ஷம்போ" விற்கும் ஒரு வடிவம் இருக்கிறது. இங்குள்ள ஒவ்வொரு அணுவும், பாறையும், மரமும், விலங்கும் - அனைத்துமே உயிரோட்டமாய் இருக்கிறது. அதனை உங்களால் உணர முடிகிறதா என்பதே கேள்வி. அவை உயிரோட்டமாய் இருக்கின்றன என்று சொல்லும்போது, உங்களைப் போலவே அவை உயிர் வாழ்கிறது எனநினைக்க வேண்டாம். அவையவை, அவற்றுடைய வழியில் உயிர் வாழ்கின்றன. இதனால்தான், நம் கலாச்சாரத்தில் வாழ்வினை முற்றிலும் வித்தியாசமான முறையில் அணுகினோம்.

ஷம்போ என்பது மங்களகரமான ஒரு சப்தம். சிவனின் மிக மென்மையான ஒரு ரூபம் அது. மிக அரிதான ரூபமும் கூட. பொதுவாக, சிவனை மூர்க்கனாய், பித்தனாய் மட்டுமே நாம் பார்க்கிறோம். ஆனால், ஷம்போ என்பது மிக மென்மையான, அழகான ஒரு ரூபம். இவை உச்சபட்ச ரூபங்களாய், அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், சிலரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்களை திறக்க ஒரு சாவி

உங்கள் சுவாசக் காற்றினை போல் இந்தசப்தத்தை ஆக்கிக் கொண்டால், நீங்கள் திறந்தநிலைக்கு வரும் ஒரு கணத்தில் உங்களை அது வெடித்து திறக்கச் செய்யும். முற்றிலும் புதிய விஷயங்கள் நிகழத்துவங்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஷம்போ அல்லது சிவா என்று நீங்கள் சொல்லும்போது, நீங்கள் உதவி கோரவில்லை. மூட்டுவலிக்கும் போதெல்லாம் ஷம்போ என்பதல்ல. சிவபக்தர்கள், சிவனைஅழைத்து, "சிவனே என்னை அழித்துவிடு" என்பார்கள்.அக்கா மஹாதேவிஎன்ற பெண் துறவி, சிவனைஅழைத்து, "சிவனே நான் பசியோடு இருக்கும்போது, எனக்கு ஒரு வாய் சோறுகிடைத்தால், அதனை நான் என் வாய்க்கு எடுத்துச் செல்வதற்கு முன், அது கைதவறிமண்ணில் விழட்டும்.நான் குனிந்து அதனைஎடுப்பதற்குள், ஒரு நாய்அதனைகவ்விச் செல்லட்டும்," என்று பாடுகிறார். அதனால், உங்கள்பிழைப்பிற்காக "ஷிவஷம்போ" எனும் ஒலியைபயன்படுத்த வேண்டாம்.

நீங்கள் கரைந்திட துடித்தால், ஷம்போ எனும் சப்தத்தை உச்சரிக்கலாம். சப்தங்களை பற்றிய ஆழமான அறிவுடன், இந்தப் படைத்தலுக்கு அடிப்படை அம்சத்தை திறக்கக்கூடிய சாவியாய் "சிலசப்தங்களை" நாம் உருவாக்கி இருக்கிறோம். அதனை தேவையான தீவிரத்தோடு, சரியான நேரத்தில் உச்சரித்தால், உங்கள் எல்லைகளை அது தகர்த்தெறியும். "ஷிவா", "ஷம்போ" அதுபோன்றதொரு சாவிதான். உங்கள் சுவாசக் காற்றினை போல் இந்தசப்தத்தை ஆக்கிக் கொண்டால், நீங்கள் திறந்தநிலைக்கு வரும் ஒரு கணத்தில் உங்களை அது வெடித்து திறக்கச் செய்யும். முற்றிலும் புதிய விஷயங்கள் நிகழத்துவங்கும்.

ஈஷா யோக மையம் - ஷம்போவின் ஆலயம்

ஒருவர் பூரணநிலை அடையவும், இறுதியில் தன்னை பிணைத்துள்ள தளைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளவும் முடியும்.

தெய்வீகம் பல்வேறு சப்தங்களின் மூலம் உயிர்வடிவம் பெறமுடியும். வெள்ளியங்கிரி மலைகளின் அடிப்படை மந்திரம் "ஷம்போ."இவ்விடம் ஷம்போ என்ற சப்தத்தின் அதிர்வலைகளுடன் உள்ளது. ஈஷா யோக மையமும், தியானலிங்கமும் "ஷம்போ" என்ற சப்தத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த மந்திரம் மையத்தில் தீவிரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம், ஒருவர் பூரணநிலை அடையவும், இறுதியில் தன்னை பிணைத்துள்ள தளைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளவும் முடியும்.

ஆசிரியர் குறிப்பு : ஷம்போ எனும் சப்தத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள ஈஷாவின் தெய்வீக அதிர்வுகளை உணர்வதற்கு வாய்ப்பாக வருகிறது மஹாசிவராத்திரி கொண்டாட்டம்! வரும் மார்ச் 4ஆம் தேதியன்று வெள்ளியங்கிரி மலைச்சாரலில் ஆதியோகியின் முன்னிலையில் களைகட்ட உள்ள மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வாருங்கள்! ஷம்போ எனும் தன்மையில் கரைந்திடுங்கள்!

msr-nl-banner